மனநிலையை உற்சாகப்படுத்தும் சிறந்த உணவு&#

sudhavaidhi

Guru's of Penmai
Joined
May 20, 2011
Messages
6,171
Likes
15,033
Location
Muscat
#1
மனநிலையை உற்சாகப்படுத்தும் சிறந்த உணவுகள்!!!

மனிதனின் குணங்களை ரஜோ குணம், தாமச குணம் மற்றும் சாத்வீக குணம் என்று மூன்று வகையாக பிரிக்கலாம். மனிதனின் இந்த குணங்களுக்கும், உண்ணும் உணவுகளுக்கும் பலத்த தொடர்பு இருப்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். மிகவும் காரமான உணவுகளை உண்ணும் போது ரஜோ குணம் தலை தூக்கும். அவ்வாறு உள்ளவர்கள் அனைவரிடமும் மிகவும் உஷ்ணம் நிறைந்த வார்த்தைகளை உதிர்ப்பர். தாமச குணம் உடையவர்கள் தைரியத்துடனும், படபடப்புடனும் பேசுவர். சாத்வீக குணமுடையவர்கள் காரமில்லாத உணவை, இனிப்பு பதார்த்தங்களை அதிகம் உண்பர். அவர்கள் பேச்சில் பொறுமை இருக்கும். மனிதனின் குணத்திற்கும் உணவிற்கும் இவ்வாறு சம்பந்தம் இருக்கும் போது, மனிதனின் உற்சாகமான மனநிலைக்கும் உணவு வகைகளுக்கும் நிச்சயம் சம்பந்தம் இருக்கும். உணவுகள் மட்டுமே மனதை உற்சாகபடுத்தாது என்ற போதிலும் சில உணவுகள் மூளையிலுள்ள ஹார்மோன்களை தூண்டி உற்சாகத்துக்கு வழிவகுக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. அவ்வாறு எந்த வகை உணவுகளை உண்டால் மனிதனின் மனம் உற்சாகம் அடையும் என்பதை பற்றி பலரும் அறிந்திராத விஷங்களையும், குறிப்புகளையும், அவற்றை உண்டால் எம்மாதிரியான உற்சாகம் ஏற்படும் என்பதை இங்கு பார்ப்போம்.வாழைப்பழங்கள்
நரம்புகளின் செயல்பாடுகளுக்கு தேவையான பொட்டாசியத்தை அதிகமாக கொண்டுள்ளது. இயற்கையான சர்க்கரைச் சத்தை கொண்டுள்ளது. அதனால் இரத்தத்தில் கலந்தவுடன் உடனடி புத்துணர்ச்சி கிடைக்கும். வயிற்றில் உள்ள அதிகப்படியான அமிலச் சுரப்பை கட்டுப்படுத்தி வயிற்றுப் பகுதியை பாதுகாக்கும்.

பாஸ்தா
கொழுப்பில்லாத சிறந்த புரதத்தை கொண்டுள்ளது. புரதத்தில் இரண்டு அமினோ அமிலங்களான டிரிப்தோபன் மற்றும் எல்-பினையில் போன்றவை எண்டோர்பின் உற்பத்திக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் உணவில் உள்ள புரத பற்றாக்குறையினால், மனநலம் பாதிப்படையும் என்றும் ஆய்வுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
mgrbaskaran

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 31, 2011
Messages
4,101
Likes
7,220
Location
london
#2
Re: மனநிலையை உற்சாகப்படுத்தும் சிறந்த உணவ&#300

naanka chilli thaan

neenga

good info
 
sudhavaidhi

Guru's of Penmai
Joined
May 20, 2011
Messages
6,171
Likes
15,033
Location
Muscat
#3
Re: மனநிலையை உற்சாகப்படுத்தும் சிறந்த உணவ&#300

பெர்ரி ஸ்ட்ராபெர்ரி எண்டோர்பின்களின் உற்பத்திக்கு உதவும் வைட்டமின் சி சத்துக்களை அதிகமாக கொண்டுள்ளது. மேலும் இரும்புச் சத்தை உறிஞ்சுவதற்கும் உதவி புரிகிறது. அதுமட்டுமல்லாமல் நரம்பு மண்டலங்களை தூண்டும், பொட்டாசியம் அதிகம் உள்ளது. ஸ்ட்ராபெர்ரியின் சிவப்பு நிறத்திற்கு ஆன்தோசையனின்னில் உள்ள பெக்கார்கோடினின் என்ற ஃப்ளேவனாய்டு காரணமாக இருக்கிறது.ஐஸ் கிரீம் பாலிலிருந்து தயாரிக்கப்படும் பலவகையான ஐஸ் கிரீம்கள் வைட்டமின் ஏ, ரிபோஃப்ளேவின், வைட்டமின் பி12, கால்சியம் மற்றும் புரதம் போன்றவற்றை ஆதாரமாக கொண்டுள்ளது. இதுவும் நல்ல மனநிலையை தூண்டுவதற்கு சிறந்த ஆதாரமாக உள்ளது.

திராட்சைகள் எண்டோர்பின் மற்றும் கால்சியத்தை அதிகமாக கொண்டுள்ள பழம். அதிகமாக இயற்கை சர்க்கரையை கொண்டுள்ளது. இதில் பொட்டாசியமும் அதிக அளவில் உள்ளன. அதிக அளவில் பாலி-ஃபீனையில் ரசாயனத்தை கொண்டுள்ளதால், புற்று நோய் மற்றும் இதய நோயை தடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளது.

ஆரஞ்சு வைட்டமின் சி அதிகம் கொண்டு, எண்டோர்பினை உற்பத்தி செய்ய உதவுகிறது. பொதுவாக ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் வகை பழங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருட்கள் அதிக அளவில் உள்ளன.

நட்ஸ் வைட்டமின் பி மற்றும் புரதத்தை அதிக அளவில் கொண்டுள்ளது. மூளையில் உள்ள செல்களைத் தூண்டி, நல்ல மன நிலையை அளிக்கும் இரசாயனமான செலினியத்தை அதிக அளவில் கொண்டுள்ளது. பிரேசில் பருப்புகளில் செலினியத்தின் அதிகம் உள்ளது. இது சைவ உணவு உண்பவர்களுக்கு ஏற்ற உணவு.

எள் புரதம், வைட்டமின் ஈ, கால்சியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருட்களை அதிக அளவில் கொண்டுள்ளது. அதிக அளவில் உண்ணக்கூடாது. இதுவும் சைவ உணவு உண்பவர்களுக்கு ஏற்ற உணவாகும்.
தயிர் மாதவிலக்கால் மிகவும் எரிச்சல் மற்றும் கோபமான மனநிலையில் உள்ள பெண்கள் தயிரை தினமும் உட்கொண்டு வந்தால், மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவர்.

பசலைக் கீரை உடலில் ஃபோலேட் பற்றாக்குறை ஏற்பட்டால் மன அழுத்தம் ஏற்படுகிறது. பசலைக் கீரையில், ஃபோலேட் எனப்படும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை தோலோடு சாப்பிட வேண்டும். ஏனெனில் தோலில் அயோடின் சத்து அதிகமாக உள்ளது. குறுகிய கால நினைவு மற்றும் மனநிலையின் அழற்சியை தடுக்கும் நரம்பியல் பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது.

தேன் புற்றுநோயை தடுக்க வல்ல தேனானது, க்யூயர்சிடின் மற்றும் கேம்ப்பேரால் என்ற ரசாயனத்தை கொண்டுள்ளது. இது மனதில் உள்ள எரிச்சலை தடுக்க உதவுகிறது.

தக்காளி லைகோபீன் என்ற ரசாயனத்தை கொண்டுள்ள தக்காளி, மன அழுத்தத்தை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இதனால் மனமகிழ்ச்சி ஏற்படும்.

முட்டை
சரிவிகித உணவாக கருதப்படும் முட்டை, மன நிலையை ஊக்குவிக்கும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், துத்தநாகம், வைட்டமின் பி போன்றவற்றை கொண்டு உற்சாக மன நிலையை தூண்டுவதாக உள்ளது.மொச்சை ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை கொண்டுள்ள இவை நல்ல மனநிலையை தூண்டி, நல்ல தூக்கத்தை தருகிறது.

சீஸ் நல்ல தூக்கத்தை தருவதில் சீஸானது முதலிடத்தில் உள்ளது. ட்ரிப்தோபன் என்ற மனநிலை உற்சாக பொருளையும், தூக்கத்தை முறையாக்கும் மெலடோனின் என்ற ரசாயனத்தையும் கொண்டுள்ளது.

பச்சை காய்கறிகள் பச்சை இலை காய்கறிகள் இயற்கையிலேயே மன அழுத்தத்தை குறைக்கிறது. ஃபோலிக் அமிலம் குறைபாடுள்ள தாய்மார்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக உள்ளது. மேலும் அவர்களது மன நிலையை பாதுகாக்கவும் உதவுகிறது.

அன்னாசி பழம் உடனடி சக்தியைத் தரும் இதை உண்டால், சோர்ந்த மனநிலையில் உள்ளவர்கள் உடனடி உற்சாகத்தை பெறுவர். அதிக நார்ச்சத்து கொண்டுள்ளதால், ஜீரணத்திற்கும் பெரும் உதவியாக உள்ளது.
 
Tamil16

Commander's of Penmai
Joined
Oct 28, 2012
Messages
1,033
Likes
1,773
Location
Tanjore
#4
Re: மனநிலையை உற்சாகப்படுத்தும் சிறந்த உணவ&#300

Nice info Sudha.... thanks for sharing.....:thumbsup
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.