மனப்பதட்டத்தை எப்படி குறைக்கலாம்?

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#1
மனப்பதட்டத்தை எப்படி குறைக்கலாம்? இதப்படிச்சு தெரிஞ்சுகோங்க

மனப்பதட்டதோடு வாழ்வது மிகவும் சிக்கலானது. வாழ்க்கைக்கு மிக முக்கியமான தேவையான விஷய்ங்களை செயல்படுத்த முடியாமல் மன அழுத்தத்திற்கு உள்ளாக நேரிடும். இதனால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும். இந்த மாதிரியான சங்கடமிகுந்த சமயங்களில் என்ன செய்யலாம். படிப்பதை தொடருங்கள்.

மூச்சுப் பயிற்சி :

மனப்பதட்டம் இருக்கும் சமயங்களில் இந்த டிப்ஸ் மிகவும் உபயோகமளிக்கும். மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்து கட்டுப்பாட்டில் சில நொடிகள் வைத்து பின்னர் நிதானமாக விடுங்கள். இது போலச் செய்வது நரம்புகளில் இருக்கும் இறுக்கத்தை போக்கி தளர்வடையச் செய்யும்.

மனக்கண்ணோட்டத்தை மாற்றிடுங்கள் :

இருக்கும் அத்தனை பிரச்சனைகளையும் மறந்து உங்கள் கண் முன்னே உங்களுக்கு பிடித்தது போல் ஒரு மகிழ்ச்சியான சுற்றுபுற சூழ்நிலையை கொண்டு வாருங்கள். இது உங்கள் மனதில் நேர்மறை எண்ணங்களை தரும். உங்களால் எதுவும் முடியும் என்ற நம்பிக்கையை தரும். உங்கள் பிர்ச்சனைக்கு தீர்வு காணப்பட்டது போல் கண் முன்னே நினைத்துப் பாருங்கள். நல்ல மாற்றத்தை தரும்.

உடற்பயிற்சி :

நீங்கள் மனப்பதட்டத்தில் இருக்கும்போது, உங்கள் அட்ரினல் ஹார்மோன் அதிக அளவு சுரக்கும். இது உங்கள் உடலை பாதிக்கும்.அந்த மாதிரியான சமயங்களில் நீங்கள் உடல் பயிற்சி செய்யும்போது, அட்ரினல் சுரப்பி குறைவாக சுரக்கும். இதனால் நீங்கள் புத்துணர்வு பெறுவது போல் உணர்வீர்கள்.

மனதை திசை திருப்புங்கள் :


அதீத குழப்பங்கள், மற்றும் மன அழுத்தத்தில் இருக்கும்போது நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது உங்கள் மனதை திசை திருப்புவதுதான். உடனடியாக விளையாட்டிலோ, வெளியில் செல்வதிலோ, அல்லது, உங்கலுக்கு பிடித்தமானவர்களீடம் பேசுவதையோ செய்ய வேண்டும். இதனால் உங்கள் பிரச்சனைகளுக்கு சற்று ஆசுவாசம் கிடைக்கும்.

பிரச்சனைகளை எதிர்கொள்ளுங்கள் :

பெரும்பாலோனோர் மனப்பதட்டத்தில் ஆளாவதற்கு காரணம் பிரச்சனைகளிலிருந்து தப்பிப்பதால்தான். எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ளுங்கள். இதுதான் நிஜம் என நம்பி அவற்றை எப்படி எதிர்கொள்வது என யோசியுங்கள். பிரச்சனைகளிலிருந்து முழுவதும் விடுபட ஆலோசிக்க வேண்டுமே தவிர, அவற்றிலிருந்து தப்பிக்க பார்க்கக் கூடாது.

யாரும் பிரச்சனைகளும், மனப்பதட்டங்களும் வராமல் இருக்காது. அதீத மனப்பதட்டம் உங்கள் மீது உள்ள உங்கள் அவ நம்பிக்கையை காட்டுகிறது. நிறைய தன்னம்பிகையை வளர்த்துக் கொள்ளுங்கள். எதையும் சமாளிக்கலாம்.
 

safron sara

Citizen's of Penmai
Joined
May 28, 2016
Messages
625
Likes
648
Location
srilanka
#4
Hii sis hw r u???
Nice info sis kattayam ovvoru manushanukkum self confidence romba mukkiyam
Gud sharing sis :thumbsup
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.