மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?

vidhyalakshmi15

Commander's of Penmai
Joined
Oct 12, 2017
Messages
1,634
Likes
991
Location
Switzerland
#1
இந்த விஷயம் ரொம்ப முக்கியம்!

நீங்கள் பார்க்குக்கு போகும்போது அங்கு வரக்கூடிய முதிய தம்பதிகளைப் சிறிது நேரம் கவனித்துள்ளீர்களா? ஒருவர் கையை மற்றவர் ஆதரவுடன் பற்றிச் செல்வார்கள். அப்படி செல்பவர்களாக இருந்தால் அவர்கள் மண வாழ்க்கையில் நிறைவாக வாழும் தம்பதியர் என்று நாம் புரிந்து கொள்ளலாம். இளமையில் ஒற்றுமையாக வாழ்ந்தவர்களால்தான் முதுமையிலும் அதைத் தொடர முடியும். ஒருசிலருக்கு, ஆரம்பத்தில் பிரச்னைகள் ஏற்பட்டிருந்தாலும், ஏதோ ஒரு புள்ளியில் அவர்கள் ஒருவரை மற்றவர் உணர்ந்தவர்களாக மாறியிருக்கலாம். அல்லது இளமைக் காலம் முழுவதும் சண்டைக் கோழிகளாக இருந்துவிட்டு முதுமையிலாவது நிம்மதி தேடும் பறவைகளாக மாறியிருக்கலாம். எது எப்படியோ பற்றிய கரங்களை ஒருபோதும் விட்டு விடாமல் கடைசி மூச்சு வரை தொடர்வது என்பது ஒரு அழகான தாம்பத்தியம் என்பது உண்மைதானே? கணவன் மனைவிக்குள் இந்த சில விஷயங்கள் முக்கியம் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

நேர்ப்பேச்சு

சில பெண்கள் நேரடியாக ஒரு விஷயத்தைக் கூறாமல் சுற்றி வளைத்துப் பேசுவார்கள். ஆண்களுக்கு பெரும்பாலும் அதைக் கேட்பதற்கு பொறுமை இருப்பதில்லை. இப்ப என்ன தான் சொல்ல வர்றே? என்று கத்துவார்கள். ஜாடை பேசுவது, பொருட்களை நங்கென்று வைப்பது, பிள்ளைகளை அல்லது வேறு யாரையோ திட்டும் சாக்கில் கணவனை இடித்துரைப்பது போன்றவற்றை மனைவியானவள் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் அந்த இல்லறத்தில் விரிசல் விழக் கூடிய சாத்தியங்கள் அதிகம் உண்டு. ஒரு சில வார்த்தைகளில் சொல்ல வேண்டிய விஷயத்தை பளிச்சென்று சொல்வதே சிறப்பு. மேலும் எல்லா விஷயங்களும் இருவரும் ஒளிவு மறைவின்றி விவாதிக்க வேண்டும். Transparency என்பது திருமண உறவுக்குள் மிகவும் முக்கியம்.

கேள்விகள்

அனேக ஆண்கள் கேள்விகள் கேட்கப்படுவதை விரும்புவதில்லை. வீட்டிலிருந்து மனைவி செல்ஃபோனில் பேசும் போது எடுத்தவுடன் எங்க இருக்கீங்க? என்ன செய்யறீங்க போன்ற கேள்விகளைத் தவிர்க்கலாம். தேவையிருப்பின் அவர்களே கூறுவார்கள். வீட்டுக்குள் நுழையும் போதும், ஏன் இவ்ளோ லேட்? எங்க ஊர் சுத்திட்டு வர்றீங்க? அல்லது நீங்க எங்க போயிருப்பீங்கன்னு தெரியும் போன்ற கேள்விகள் கணவர்களை எரிச்சலுக்குள்ளாக்கும். ஒருவருக்கொருவர் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையுடன் வாழ்தல் வேண்டும். கணவரும் தமது நிகழ்ச்சி நிரல்கள் மொத்தத்தையும் ஒப்பிக்க முடியாவிட்டாலும், இந்த நேரத்தில் இங்கிருப்பேன், இந்த நேரத்துக்கு வீடு திரும்புவேன் என்பதை மனைவிக்கு தெரிவித்துவிட்டால் அவர்கள் ஏன் நச்சரிக்கப் போகிறார்கள்?

தேவையில்லாத சச்சரவு

யார் போன்ல உங்க தங்கச்சியா என்று ஃபோன் பேசி முடியும் வரை அருகிலேயே இருப்பது, கணவரின் பெற்றோர்களை மதிக்காமல் இருப்பது போன்ற விஷயங்கள் குடும்ப ஒற்றுமைக்கு நல்லதல்ல. கணவன் மனைவி இருவரும் ஒருவர் பெற்றோர்களை மற்றவர்கள் மதித்து நடக்க வேண்டும். சீரியலில் பார்க்கும் சண்டைகளை குடும்பத்துக்குள் இழுத்து வரக் கூடாது.

கணவன் எடுக்கும் முயற்சிகளுக்கு மனைவி உறுதுணையாக இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை, அது சரிப்பட்டு வராது, உங்களால் முடியாது என்று முட்டுக்கட்டை போடும் மனைவிகள் மீது கணவருக்குத் தீராத எரிச்சல் ஏற்படும். மாறாக கணவர் அகலக்கால் எடுத்து வைக்கிறார் என்று மனைவி நினைத்தால், அதனைக் காரண காரியத்துடன் பொறுமையாக விளக்கி அவருக்குப் புரிய வைக்க வேண்டும். சிலருக்கு பட்டால்தான் புத்தி வரும் என்று தோன்றினால் பட்டுத் தெளிய விட்டுவிட வேண்டும். அதன் பின் நான் தான் அப்பவே சொன்னேனே நீங்க கேட்டாதானே என்று தோல்வியுற்ற சமயத்தில் மீண்டும் இடித்துரைக்கக் கூடாது. பரவாயில்லை எவ்வளவோ கஷ்டப்பட்டுட்டோம், இதையும் கடந்துட முடியும் என்று நம்பிக்கையுடன் ஒரு மனைவி தோள் கொடுக்க வேண்டும்.


நினைவுத் திறன்

பெண்களுக்குப் பொதுவாக நினைவுத் திறன் அதிகம். அதற்காக அன்னிக்கு அப்படி சொன்னீங்களே, மூணு வருஷத்துக்கு முன்னாடி அப்படி இப்படி நடந்தவரு நீங்க தானே என்பது போன்ற குத்திக் காட்டல்களை ஆண்கள் விரும்புவதில்லை. நல்ல விஷயங்களை எதுவும் சொல்லிக் காட்டாமல் கணவர் சறுக்கிய விஷயங்களை அலசி ஆராய்ந்து அவ்வப்போது சுறுக்கென்று குத்தும் இயல்பு இருந்தால் உடனடியாக மாற்றிக் கொள்ளுங்கள். மன்னிப்பதும் மறப்பதும் இனிய தாம்பத்தியத்தின் அத்தியாவசிய குணங்கள்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.