மனைவியின் ஆலோசனையையும் கேளுங்கள்!

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#1
'என் பொண்டாட்டியைப் புரிஞ்சுக்கவே முடியல...' என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். அது ஒன்றும் அலிபாபா மந்திரமல்ல. இன்றைய 'நவீன யுக மனைவி'யின் அன்பைப் பெற 10 விதிகள்...

1. மதியுங்கள்
வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள் முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குவியுங்கள்.

2. கனவுகளைப் பின்பற்றட்டும், உங்களை அல்ல

இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள்.

3. எல்லை தாண்டிச் சிந்தியுங்கள்

மனைவியை சமாதானப்படுத்துவதற்கான பழைய விதிகள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. புதிய யோசனைகளில், சோதனை முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள். மனைவிக்குத் திடீர் ஆச்சரியம் கொடுக்கும் வழக்கத்தைக் கைவிடாதீர்கள்.

4. உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்

'ஆண்கள் அழ மாட்டார்கள்' என்பது சரிதான். உணர்வுகளை வெளிப்படுத்தும் உணர்வுப்பூர்வமான ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள் என்பதே உண்மை. ஆனால் எதற்கெடுத்தாலும் கண்ணைக் கசக்காதீர்கள். அழுமூஞ்சி ஆண்களை பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.

5. ஆலோசனை கேளுங்கள்

நீங்கள் ஒரு முடிவெடுக்கும்போது உங்கள் மனைவியின் ஆலோசனையையும் கேளுங்கள். அது பணத்தைப் பற்றியதாக இருக்கலாம், வேலை, தொழிலைப் பற்றியதாக இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள், அதற்கு மதிப்புக் கொடுங்கள்.

6. சமைக்கத் தெரிந்து கொள்ளுங்கள்

நேசத்தில் மட்டுமல்ல, சமையலிலும் கெட்டிக்காரராக இருக்கும் கணவரை மனைவிக்குப் பிடிக்கும். அப்படிப்பட்ட கணவர்தான் அவர்களைப் பொறுத்தவரை 'முழுமையானவர்'.

7. பேசுங்கள்

பேசுவது பெண்களுக்குப் பிடிக்கும் என்று தெரியும். மனைவியுடன் வழக்கமான விஷயங்களை மட்டுமல்லாமல், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என்று பல விஷயங்களைப் பற்றியும் பேசுங்கள். உங்களின் எதிர்காலத் திட்டங்கள், கனவுகள், பயங்கள் என்று எல்லாவற்றைப் பற்றியுமே பகிர்ந்துகொள்ளுங்கள்.

8. மனைவியின் குடும்பத்தில் 'பங்கு கொள்ளுங்கள்'

வீட்டுக்கு வருகிற மனைவி உங்கள் குடும்பத்தோடு ஒன்றிப்போய்விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி நீங்களும் ஒரு அன்பான மருமகனாக மனைவியின் வீட்டில் அக்கறை காட்டுவது அவசியம்.

9. அழகில் கவனம் செலுத்துங்கள்

அழகு, பெண்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் என்று யார் சொன்னது? வெளியிடங்களுக்குப் போகும்போது உங்கள் மனைவியை வியப்பாக நான்கு பேர் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அப்படி அவரும் எதிர்பார்ப்பது நியாயம்தானே?

10. அவ்வப்போது 'வழக்கம்போல்' இருங்கள்

எல்லாவற்றிலும் புதுமையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவ்வப்போது, 'நீதான் எனக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம்' என்று 'பழைய டயலாக்' பேசுவதில் தவறில்லை
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,535
Location
Hosur
#2
ஆதர்ஷ தம்பதிகளாய் இருப்பதற்கு பின்பற்ற வேண்டிய அருமையான விதிகள். பகிர்வுக்கு நன்றி நிஷா...

சுமதி ஸ்ரீனி
 

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#3
ஆதர்ஷ தம்பதிகளாய் இருப்பதற்கு பின்பற்ற வேண்டிய அருமையான விதிகள். பகிர்வுக்கு நன்றி நிஷா...

சுமதி ஸ்ரீனி
தங்களின் அருமையான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சுமதி அக்கா.
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#4
hi nisha,
superpa... kalakkiteenga.... eppo paar ladiesku dhaan advice pandraanga.... idhu aangalukkaana adivice... so, enakku romba pidichirukku.(ethanai aangal padippanga? yaar idhai pinpatruvaanga? adhu doubtdhaan paa... let us hope atleast 1 can follow atleast 1 in ur msg...)
 

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#5
Hi anitha,

Thanks for your comment dear. Your have pointed out a real fact ma, they always be waiting to advice us, but out of ten there will be(may be) one who respect us la dear.

Thanks for sharing your opinion ma.
 

shaalam

Citizen's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 15, 2011
Messages
851
Likes
2,755
Location
Bahrain
#8
நிஷாம்மா ம்ம்ம் மண்டைல அடிச்ச மாதிரி இருக்கு!!! இதெல்லாம் ரொம்ப பழசும்மா. ஏன்னா எங்க வீட்ல எல்லாத்தையும் அவங்கதான் பாத்துக்கறாங்க, அவ்வளவு ஏன் என்னோட வங்கிக் கணக்குப் புத்தகம் கூட அவங்க கைலதான். என்னது அவங்க இவங்கன்னு சொல்றேன்னு பாக்கறீங்களா? அவங்கள வாங்க போங்கன்னுதான்மா பேசறேன். ஆச்சரியமா இருக்கா? அது மட்டுமில்ல சமையல்ல நான் கில்லாடி, பிரியாணி சாப்பிட வாங்க ஒரு நாளைக்கு.
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#9
Hi shaalam(is that ur name?)

unga msg paarthadhum, shock ayiten.....(vadivelu pola) enna oru adhisayam.... hahaha... ketkave santhosama iruku... unga wife kuduthu vachavanga dhaan... enna penmai friends neenga enna sollreenga?
 

shaalam

Citizen's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 15, 2011
Messages
851
Likes
2,755
Location
Bahrain
#10
அத்தனையும் அக்மார்க் நிஜம் தங்கையே, பொண்டாட்டி கையால அடிவாங்காத மனுஷன்லாம் ஒரு மனுஷனா? (நடுமுதுகில் சளாரென்று ஒரு அறை விட்டு விட்டு ஹஹாஹா என்று அவங்க சிரிக்கற சிரிப்பு இருக்கே, சும்மா விளையாட்டுக்கு) வைத்ததொரு பெயர், அப்பாவுக்கு பிடித்த பெயர் ஒன்று, அம்மா, அக்காவுக்கு பிடித்தது வேறு வேறு. அதிலொன்று ஷா ஆலம்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.