மனைவியைப் புரிந்து கொள்வது எப்படி ? - How to understand a Wife?

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#1

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் புதிதாக கல்யாணம் ஆகியுள்ள கணவர்களுக்கு மட்டுமல்லாமல் , அனைத்து கணவர்களும் தங்கள் மனைவியை புரிந்து கொள்ள உதவும் வகையில் உள்ளவை .

திருமணமான புதிதில் கணவன் மனைவி இருவருமே தங்கள் மணவாழ்வைக் குறித்த எதிர்ப்பார்ப்புகளைச் சுமந்தவாறு மிகவும் ஆர்வத்துடன் இருப்பர். அதே ஆர்வத்தோடு கூட , மற்ற சிலரின் அனுபவங்களைக் கேட்டு ஒரு வித பயமும் கூடவே இருக்கலாம் .

ஆரம்பத்தில் இருவருக்குமே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதில் மிக்க சந்தோஷம் கிட்டும் . ஆனால் போகப்போக இந்த ஆர்வம் குறையக்கூடும்.
ஆனால், இந்த விட்டுக்கொடுத்து வாழும் திருமண வாழ்வே என்றும் நிலைக்கவேண்டும் .

இப்போது , கணவர்கள் தங்கள் மனைவியை எவ்வாறு புரிந்துகொண்டு சிறப்பான ஒரு மணவாழ்வை மேற்கொள்ளலாம் என்பதை கீழ்கண்ட ஆலோசனைகள் மூலம் காணலாம் .இந்த ஆலோசனைகள் நான் ஆங்கிலத்தில் கொடுத்துள்ள
http://www.penmai.com/forums/married-life/68958-tips-have-good-relation-understanding-wife.html இந்தத் திரியின் தமிழாக்கம் .
 

Attachments

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#2

**உங்களின் மாமனாரிடம் , அவரின் மகளை வாழ்நாள் முழுவதும் நீங்கள் கண்ணின் இமைபோல காப்பீர்கள் என்ற உறுதிமொழியை அளிக்கவேண்டும் .

**இதை நீங்கள் கல்யாணத்திற்கு முன்னரும் , கல்யாணத்திற்குப் பிறகு தங்கள் மகளை உங்கள் வீட்டில் விட வரும்போதும் , மறக்காமல் நீங்கள் கூறுவதால் , உங்கள் மனைவியின் பெற்றோருக்கும் ஒரு பெருத்த நிம்மதியையும் அதே சமயம் உங்கள் மனைவிக்கு , பெருமை கலந்த நிம்மதி , தன்னுடைய பெற்றோருக்கு நீங்கள் தரும் மதிப்பு ஆகியவை மிக்க சந்தோஷத்தை உண்டாக்கும் .

**ஒவ்வொரு மனைவிக்கும் தான் என்ன பேசினாலும் அதைத் தன் கணவர் காதுகொடுத்துக் கேட்கவேண்டும் என்ற அவா வாழ்நாள் முழுக்க இருக்கும் . கல்யாணம் ஆன புதிதில் தன் மனைவியின் எத்தகைய பேச்சுக்கும் காதுகொடுக்கும் அதே கணவனுக்கு நாட்கள் செல்லச்செல்ல அந்த ஆர்வம் குறைந்துவிடும் .இது அந்த மனைவிக்கு வெறுப்பாக மாறும் .


**பின்னாட்களில் உங்கள் மனைவி உங்களிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது , நீங்கள் பேப்பர் படித்துக்கொண்டோ , டிவியில் ஏதேனும் பார்த்துக்கொண்டோ , உங்கள் கவனமானது உங்கள் மனைவியின் பேச்சில் இல்லாமல் இருக்கும் .அதே போல நீங்கள் ஏதேனும் மும்முறமான ஒரு வேலையில் ஈடுபட்டிருக்கும்போது , அவரது பேச்சு அதை தடைசெய்வது போலவும் இருக்கும் .இதனால் உங்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டைகள் நேரிடலாம் .இதனைத் தவிர்க்க கீழ்கண்ட ஆலோசனைகளை கடைபிடிக்கலாம் .


**ஒரு குறிப்பிட்ட நேரத்தை இதற்காகவே ஒதுக்குங்கள் . தினமும் காலையும் மாலையும் ,நீங்கள் இருவரும் சேர்ந்து காபி குடிக்கலாம் . அந்த நேரத்தில் பேச வேண்டிய விஷயங்களை பேசிவிடச் சொல்லுங்கள் . இதற்கு ஏற்றார்போல, உங்கள் மனைவியை , ஏதேனும் முக்கிய விஷயங்களை பேசி விவாதிக்க வேண்டியிருந்தால் ,அவற்றை ஒரு பேப்பரில் குறித்துக்கொண்டு மறக்காமல் உங்களிடம் பேசச் சொல்லுங்கள் . இந்த சமயத்தில் , வீட்டு விஷயங்கள் , ஆபீஸ் விஷயங்கள் , மற்ற எந்த விஷயமாக இருந்தாலும் இருவரும் மனம் விட்டுப் பேசுவதால் , உங்கள் மனைவிக்கு மிகுந்த சந்தோஷம் கிடைக்கும் . அவருக்காக நேரம் ஒதுக்கி நீங்கள் பேசுகிறீர்கள் என்று .

**எதற்காகவும் அவரைக் கட்டாயப் படுத்தாதீர்கள் . உங்கள் விருப்பமும் அவரது விருப்பமும் வேறு வேறாக இருந்தால் , ஒரு சிலவற்றுக்காவது அவரது விருப்பத்திற்கு இணங்க நடக்க முயலுங்கள் .


**ஒருவேளை உங்களுக்கு விருப்பமான டிவி நிகழ்ச்சிகளை அவரும் உங்களுடன் அமர்ந்து பார்க்க விருப்பப்பட்டால் , உதாரணத்திற்கு , அரசியல் , விளையாட்டு போன்றவை இதுவரை அவருக்கு பரிச்சயம் இல்லாமல் இருந்தால் , அதற்காக அவரைக் கிண்டல் செய்யாமல் , அவருக்குப் புரியும்படி நீங்கள் சொல்லித் தந்தால், சில நாட்களில் புரிந்துகொண்டு உங்களுடன் விருப்பமாக அவரும் அதைப் பார்த்து மகிழ்வார் .

தொடரும் ......
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#3

**அவர் வேலைக்குச் செல்லாமல் இருப்பவராக இருந்தால் , கொஞ்சமாகவாவது வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்யுங்கள் . இதனால் , அவருக்கு உடம்புக்கு முடியாமல் இருக்கும்போதும், வெளியூருக்குச் செல்லும்போதும் உங்களால் தனியாகச் சமாளிக்க முடியும் . அதே அவரும் வேலைக்குச் செல்பவராக இருந்தால் , பாதிக்குப் பாதி வேலைகளை நீங்கள் அவசியம் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தால்தான் அவருக்குத் திருப்தியும் சந்தோஷமும் கிட்டும் . உடல்நலமும் பாதிக்காது .

**உங்கள் குழந்தைகளை குளிப்பாட்டுதல் , பள்ளிக்குத் தயார் செய்தல் , மதிய உணவை அனைவரின் டப்பாக்களிலும் வைத்தல் , துவைத்த துணிகளை உலர்த்த வேண்டியிருந்தால் அதைச் செய்தல் , உலர்ந்த துணிகளை மடிக்கவேண்டியிருந்தால் அதைச் செய்தல் போன்ற உதவிகளை செய்யலாம் .

**மார்கெட்டிலிருந்து கறிகாய் வாங்குதல் , அவற்றை அரிந்து கொடுப்பது , குப்பைகளை தகுந்தவாறு அகற்றுவது போன்ற உதவிகளையும் செய்யலாம் .

** அவரது சமையல் சரியாக இல்லாவிட்டால் அதைப் பற்றியோ , அவரது உருவத்தைப் பற்றியோ , அவர் உடை உடுத்தும் பாங்கு பற்றியோ, இவை எதையும் எப்போதுமே மற்றவர் எதிரில் கிண்டல் செய்து பேசவே வேண்டாம் . அவர்கள் யாராக இருப்பினும் . இப்படிச் செய்தால் அவர் மிகவும் மனம் உடைந்து போவார் . அதே சமயம் நீங்கள் இருவரும் தனிமையில் இருக்கும்போது இவற்றைக் கிண்டல் செய்தால் , அவருக்கு அவ்வளவாக தவறாகப் படாமல் , அதே சமயம் உங்களைத் திருப்தி படுத்துவதற்காகவே உடனே தன்னைத் திருத்திக் கொள்ள முனைவார் .

**அவரது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோரை ஒருபோதும் மற்றவர் எதிரில் , முக்கியமாக உங்கள் வீட்டினர் மத்தியில் கிண்டல் செய்து பேசவே கூடாது . இதனால் அவர் மனம் நோகும் . அதே சமயம் அவர்களைப் பற்றி , அவர்களிடம் ஏதேனும் நகைப்புக்குரிய விஷயங்கள் இருந்தாலும் அதையெல்லாம் , நீங்கள் இருவரும் தனியாக இருக்கும்போது கிண்டல் கூட செய்யலாம் .அதில் தவறு இல்லை .

**ஆனால் அதே சமயம் இவற்றைப் பேசும்போது உங்கள் குழந்தைகள் அருகில் இல்லாமலும் பார்த்துக் கொள்ளவும் . இல்லாவிட்டால் குழந்தைகள் உங்கள் மனைவியின் வீட்டினரை பலர் முன்னிலையில் மனம் நோக கிண்டல் செய்து பேசிவிடலாம் .

தொடரும் ....
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#4

**உங்கள் பெற்றோர் உடன்பிறந்தோர் பற்றி எப்போதும் உங்கள் மனைவி குற்றம் சொல்லிக்கொண்டு இருந்தால் , அதற்காக உடனே சண்டையிடாமல், எதற்கும் காதுகொடுத்து அவைகளைக் கேளுங்கள் . ஒருவேளை அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையாகக் கூட இருக்கலாம் . ஒரு மூன்றாம் மனிதரின் பார்வையோடு அணுகுங்கள் . ஒருவேளை உங்கள் மனைவி அனைத்தையும் தவறாகப் புரிந்துகொண்டு குற்றம் கண்டுபிடித்துக்கொண்டு இருந்தால் , சிறிது நேரம் பொறுத்து தன்மையாக அவருக்குப் புரியவையுங்கள் .

**ஒரு விஷயத்தை நீங்கள் உணர வேண்டும் . பெண்கள் எப்போதும் உடனே உணர்ச்சிவசப்படுபவர்கள் . தங்கள் மனதில் எதையும் அழுத்தி வைக்காமல் உடனுக்குடன் கொட்டி விடுவார்கள் .

**ஆண்கள் இவ்வாறு இல்லாமல் சின்னச்சின்ன விஷயங்களுக்கும் உணர்ச்சிவசப்படாமல் இருப்பதைப் போல பெண்களும் இருப்பார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது. உங்களுக்கு பெண்களின் இந்த விஷயங்களை அணுகும் விதம் ஆச்சரியமாக இருந்தாலும் இதுதான் உண்மை . இதைப் புரிந்துகொண்டாலே , நீங்கள் அதே பிரச்சினையை சரியான விதத்தில் அணுகி ,உங்கள் மனைவியை நீங்கள் சரியாக வழிநடத்தலாம் .

** முக்கால்வாசி ஆண்கள் நகைச்சுவை உணர்வு அதிகமிக்கவர்களாகவே இருப்பார் .ஒவ்வொரு மனைவிக்கும் தங்கள் கணவரது இந்த உணர்வு அவர்களை மிகவும் கவர்ந்த ஒன்றாகும் . ஆகையால் எந்த ஒரு பிரச்சினையையும் உங்கள் நகைச்சுவை உணர்வை பயன்படுத்தி , மனைவியின் மனக்கிலேசங்களை அகற்றி எளிதில் தீர்த்துவிடலாம் .

**இரவு படுக்கைக்குப் போகுமுன் , உங்கள் இருவருக்குமிடையில் நிலவிய கோபதாபங்கள் , பிரச்சனைகள் , வாதப்பிரதிவாதங்கள் அனைத்திற்கும் முடிவு கண்டுவிடுங்கள் . படுக்கையிலும் அதைத் தொடர அனுமதிக்கவே கூடாது . உங்கள் மீது தவறே இல்லாவிட்டாலும் நீங்களாகவே முன்வந்து அதை முடிக்க முயலுங்கள் .

**இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதையே லட்சியமாகக் கொள்ளவேண்டும் . இதுவே திருமணவாழ்வின் வெற்றிக்கு அடிகோலும் .


**எந்த வயதாக இருந்தாலும் , அவ்வப்போது ஒரு மெல்லிய அணைப்பும் , “ஐ லவ் யூ “ என்ற வார்த்தைகளும் மிக மிக இதமானவை . ஒரு அணைப்பே அக்கறையையும் அரவணைப்பையும் பெரிதாக உணர்த்திவிடும் .

**உங்கள் மனைவி ஏதேனும் மனக்கிலேசத்தில் இருந்தால் , உங்களின் இறுகிய அணைப்பு ஒன்றே அவருடைய ஆறுதலுக்குப் போதுமானது . பல வார்த்தைகளால் சொல்ல முடியாத ஆறுதலை உங்களின் இறுகிய அணைப்பு தந்துவிடும் .

தொடரும் .....
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#5

**அவ்வப்போது ஏதேனும் பரிசுகளை அளித்து அவரை ஆச்சரியப் படுத்துங்கள் . அவை விலை உயர்ந்ததாக இருக்கவேண்டிய அவசியமே இல்லை .

**அவருக்குப் பிடித்த நிறம் , பொருட்கள், உணவுகள் போன்றவற்றை நினைவில் வைத்துக்கொள்ள முயலுங்கள் . இவற்றையே அவருக்கு வாங்கித் தர நீங்கள் முன்வரவேண்டும் . பெரும்பாலான ஆண்கள் இவற்றை ஞாபகம் வைத்துக் கொள்ள தவறி விடுவது வழக்கம் .

**அதே போல அவரின் பிறந்தநாளையும் , உங்களின் திருமணநாளையும் நினைவில் வைத்துக்கொண்டு வாழ்த்த மறக்க வேண்டாம் . பெரும்பாலான ஆண்கள் இவற்றை மறந்து விடுவதால் , தங்கள் மனைவியின் கேலிக்கும் , ஆதங்கத்திற்கும் உள்ளாகிறார்கள் .

**உங்கள் பெற்றோர் , உடன்பிறந்தோருக்கு எந்த அளவுக்கு பரிசளிக்க விரும்புகிறீர்களோ அதே அளவுக்கு (பண விஷயத்தில்) உங்கள் மனைவியின் பெற்றோர் உடன்பிறந்தோருக்கும் செய்ய நீங்கள் முன்வரவேண்டும். இதனால் உங்கள் மனைவியின் மனதில் நீங்கள் உயர்ந்த இடத்தைப் பிடிப்பது நிஜம் .

**உங்கள் புதிய முயற்சிகள் எதுவாக இருப்பினும் , அவரது ஆலோசனைகளையும் தயங்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் .

**ஒருவேளை உங்கள் மனைவி மிகவும் ஆடம்பரமாக செலவு செய்வதில் பிரியமுள்ளவராக இருந்தால் , இதை சமாளிக்க ஒரு எளிய வழி உண்டு . அதாவது , உடனடியாக , வீட்டு வரவு செலவு கணக்குகள் அனைத்தையும் உங்கள் மனைவியையே தனியாக சமாளிக்க சொல்லிவிடுங்கள் . இதனால் , கையில் உள்ள பணத்திற்கு ஏற்ப மட்டுமே அவர் செலவு செய்ய முற்படுவார் .

தொடரும் ....
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#6
**நீங்கள் எந்தெந்த விதங்களில் சம்பாதிக்கிறீர்கள் என்பதையெல்லாம் மறைக்காமல் அவரிடம் சொல்லிவிடவும் .
**உங்களின் சேமிப்பு , சொத்து விவரங்கள் அனைத்தையும் அவரிடம் தெரிவித்து விடவும் . அவற்றின் டாகுமென்ட்கள் இருக்குமிடங்களையும் சொல்லி விடவும் . அப்போதுதான் , நீங்கள் இல்லாத சமயங்களில் அவர் தனியாக சமாளிக்க வேண்டியிருந்தால் , இவற்றின் விவரங்கள் அனைத்தும் அவருக்கு உபயோகப்படும் .

**உங்களின் ஆண் நண்பர்களோடு அவர் அளவோடு பழகுவதை தயவுசெய்து குறை காணாமல் , பெருந்தன்மையோடு எடுத்துக் கொள்ளுங்கள் .

**எதற்கெடுத்தாலும் அவர் மீது சந்தேகம் கொள்ளாதீர்கள் . ஒருவேளை முன்னாட்களில் அவர் தவறுகள் ஏதேனும் செய்திருந்தாலும் அதையே எப்போதும் சுட்டிக்காட்ட வேண்டாம் .

**அவரது பெண் நண்பிகளுடன் ஒரு போதும் நெருக்கமான உறவு எதுவும் வேண்டாம் . மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் இவர்களை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் , இன்னமும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் . அத்தோழியுடன் அதிக நேரம் வெறுமே பேசிக்கொண்டு இருப்பது கூட ஆபத்தில் முடியலாம் . அந்த பெண்மணியோ அல்லது உங்கள் மனைவியோ கூட இதைத் தவறாக சித்தரிக்க வாய்ப்புகள் அதிகம் . டெக்னாலஜி முன்னேற்றத்தை கவனத்தில் கொண்டு எந்தவித அனாவசிய வம்புக்கும் இடம் கொடாமல் இருப்பது நலம் .

**எப்போதும் அவர் மீது நம்பிக்கை வையுங்கள் . இதன் மூலம் அவருக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் உங்கள் பாதுகாப்பை பலப்படுத்துகிறீர்கள் . இதைத்தான் உங்களிடமிருந்து உங்கள் மனைவி எதிர்பார்க்கிறார் . உலகில் வேறு எவரையும் விட உங்கள் மனைவி மீதான நம்பிக்கையே பிரதானமாக இருக்க வேண்டும் .

**உங்கள் மனைவியையும் குழந்தைகளையும் அவ்வப்போது வெளியிடங்களுக்குக் கூட்டிச் சென்று ஆச்சரியப்படுத்துங்கள். உங்களுக்கு விருப்பமான இடங்களுக்கு சில முறைகள் சென்றால் , அடுத்த முறை அவருக்கு விருப்பமான இடங்களுக்கு செல்லவும் .

**ஒருபோதும் அவர் மீது ஆதிக்கம் செலுத்த முனையாதீர்கள் . இதை முக்கியமாக உங்கள் பெற்றோர் , உடன்பிறந்தோர் , குழந்தைகள், நண்பர்கள் முன்னிலையில் கடைபிடிக்க வேண்டும் . எல்லார் முன்னிலையிலும் உங்கள் மனைவிக்கும் சம உரிமையை கொடுக்கத் தவறாதீர்கள் . நீங்கள் இப்படிச் செய்வதால் , கண்டிப்பாக அவரும் உங்களுக்கு அதே மரியாதையைத் தருவார் .
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#7
ஆக எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் , நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வது மட்டுமே சிறந்த மணவாழ்க்கையின் மந்திரமாகும் .

மேற்கண்ட ஆலோசனைகளைப் பின்பற்றுவதால் நீங்கள்தான் சிறந்த கணவராக பரிமளிக்கப் போகிறீர்கள் என்பது திண்ணம் .
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,096
Likes
106,996
Location
Atlanta, U.S

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.