மனைவியை மகிழ்விக்க கற்றுக்கொள்ளுங்கள்

Guruji

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 13, 2011
Messages
3,154
Likes
2,017
Location
Puducherry
#1
அழகிய வரவேற்பு

வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள். மலர்ந்த முகத்துடன் மனைவியைச் சந்தியுங்கள். வெளியில் சந்தித்த நல்ல செய்திகiளைத் தெரிவித்துவிட்டு மற்ற செய்திகளை வேறு சந்தர்ப்பத்திற்காக தள்ளி வையுங்கள்.

இனிப்பான சொல்லும் பூரிப்பான கனிவும்

நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். எதிர்மறையான வார்த்தைகளை தவிர்ந்து கொள்ளுங்கள். உங்களின் வார்த்தைகளுக்கு அவள் பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள். தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ள வில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள். மனைவியை செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழைக்கலாம்.
நட்பும் இனிய நிகழ்வுகளை மீட்டுதலும்
மனைவிக்காக நேரத்தை ஒதுக்குங்கள். நல்ல விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களின் சந்தோஷ அனுபவங்களை இருவரும் சேர்ந்திருக்கும் பொழுது மீட்டிப்பாருங்களேன். (முதலிரவு மற்றும் சுற்றுலாவின்பொழுது ஏற்பட்ட…)

விளையாட்டும் கவன ஈர்ப்பும்
நகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள். ஒருவருக்கொருவர் போட்டி போட்டு, பந்தயங்களில் ஈடுபடுங்கள். அது விளையாட்டாகவோ, பொதுஅறிவு போன்ற கல்விகளைக் கற்பதிலோ அல்லது வேலை செய்வதிலோ இருக்கலாம். விளையாட்டுப் போட்டிகள் போன்றவை, பார்ப்பதற்கு அழைத்துச் செல்லுங்கள்

வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவ
வீட்டு வேலைகளில் எதிலெல்லாம் மனைவிக்குத் துணைபுரிய முடியுமோ அதிலெல்லாம் உதவுங்கள். மிக முக்கியமாக அவள் நோயாளியாகவோ களைப்படைந்தோ இருந்தால். கடினமான வீட்டு வேலைகளில் மனைவி ஈடுபடும்பொழுது நன்றி தெரிவித்து அவளை உற்சாகப் படுத்துங்கள்.

இனியவளின் ஆலோசனை
குடும்ப விஷயங்களில் உங்கள் மனைவியுடன் கூடி ஆலோசனை செய்யுங்கள். அவளிடம் ஆலோசனை செய்யப்பட வேண்டும் என அவள் எதிர்பார்க்கும் பொழுது அவளின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள் (பிள்ளைகளின் திருமண விஷயங்கள் போன்றவை உட்பட.) மனைவியின் கருத்துக்களை துச்சமாக நினைக்காமல் கவனமாகப் பரிசோதியுங்கள். மனைவின் கருத்து சிறந்ததாக இருந்தால் (உங்கள் கருத்தை புறந்தள்ளிவிட்டு) அவளின் கருத்தைத் தேர்ந்தெடுக்க தயக்கம் காட்டாதீர்கள். ஆலோசனை தந்து உதவியதற்காக அவளுக்கு நன்றி கூறலாம்.

Will be continued if wished by others...
 
Last edited:

Guruji

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 13, 2011
Messages
3,154
Likes
2,017
Location
Puducherry
#2
Re: மனைவியை மகிழ்விக்க கற்றுக்கொள்ளுங்கள&#3021

வாழ்க்கை துணையின் எதிர்பார்ப்பை தெரிந்து அவற்றை பூர்த்தி செய்யுங்கள். தன்னோடு அன்பாக, பிரியமாக இருத்தல் வேண்டும், மனது புண்படும்படி பேசக் கூடாது, கோபப்படக்கூடாது, சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது, பலர் முன் திட்டக்கூடாது, எப்போதும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது,

முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும், மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும், சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும், மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும். வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும். பாராட்ட வேண்டும் போன்றவற்றையே மனைவி தன் கணவனிடம் பொதுவாக எதிர் பார்க்கிறாள்.

குடும்பத்தை பொறுப்பாக கவனித்தால் எப்போதும் சிரித்த முகம்,கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும், அதிகாரம் பணணக் கூடாது, கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும், சந்தேகப்படக் கூடாது, குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது, வேலை விட்டு வரும் கணவனை அன்பாக உபசரித்தல் ஆகியவற்றை கணவன் தன் மனைவியிடம் எதிர் பார்க்கிறார்.
 

blackmoon

Minister's of Penmai
Joined
Mar 6, 2012
Messages
3,617
Likes
6,132
Location
Thoothukudi
#4
Re: மனைவியை மகிழ்விக்க கற்றுக்கொள்ளுங்கள&#3021

nice sharing brother...its all are true .......thank u for sharing:cheer:
 

lavanyap

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 14, 2012
Messages
7,046
Likes
17,100
Location
UAE
#5
Re: மனைவியை மகிழ்விக்க கற்றுக்கொள்ளுங்கள&#

Gud one ji... thanx for sharing...
 

Guruji

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 13, 2011
Messages
3,154
Likes
2,017
Location
Puducherry
#6

saranyapavalan

Citizen's of Penmai
Joined
Jun 8, 2011
Messages
886
Likes
1,060
Location
Malaysia
#7
Re: மனைவியை மகிழ்விக்க கற்றுக்கொள்ளுங்கள&#3021

Nalla karuthukal guruji...
Couples ku thevaiya na thagavalgal
thanks for sharing
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.