மன்னிப்பு என்ற சொல் வாழ்க்கையை பலப்படுத&

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
மன்னிப்பு என்ற சொல் வாழ்க்கையை பலப்படுத்தும் வெற்றிப்படிகள்

சில நேரத்துல என் மனைவிகிட்ட ‘என்னை மன்னிச்சிடு’னு சொல்றதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். என் ‘ஈகோ’ அதுக்கு இடம் கொடுக்காது.” “யார் தப்பு செய்றாங்களோ அவங்கதான் முதல்ல மன்னிப்பு கேட்கணும், அதுதான் நியாயம்” என்று நீங்கள் யோசிக்க கூடாது.

துணையின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளுங்கள். யாராவது உங்களிடம் வந்து மன்னிப்பு கேட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்? உங்கள் மனமே கரைந்துவிடும் இல்லையா? அப்படியென்றால் உங்கள் துணையிடம் நீங்கள் மன்னிப்பு கேட்டால் அவரும் அப்படித்தானே உணர்வார்? உங்கள்மீது தப்பு இல்லை என்றாலும் உங்கள் துணையின் மனம் புண்பட்டதற்காக, அல்லது நீங்கள் தெரியாமல் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கலாமே? அப்படி கேட்டால் அவருடைய காயம் நிச்சயம் ஆறும்.

மன்னிப்பு கேட்பதை தோல்வி என்று நினைக்காதீர்கள், உங்கள் திருமண வாழ்க்கையை பலப்படுத்தும் வெற்றிப் படியாக நினைத்துக்கொள்ளுங்கள். கோபமாகவே இருக்கும் ஒருவரை சாந்தப்படுத்துவது, ‘வலிமையான சுவர்களை உடைய நகரத்தை வெல்வதை விடக் கடினமானது’ என்று நீதிமொழிகள் 18:19 (ஈஸி டு ரீட் வர்ஷன்) சொல்கிறது. தன்மீது எந்த தப்பும் இல்லை என்று இருவரும் நியாயப்படுத்தும்போது, மன்னிப்பு கேட்பது ரொம்ப கஷ்டமாக இருக்கலாம். ஆனால், நீங்கள் மன்னிப்பு கேட்டால் பிரச்சினை பெரிதாகாமல் இருக்கும்.

இப்படி செய்யும்போது, உங்கள் சுய கௌரவத்தைவிட உங்கள் திருமண பந்தத்திற்கு நீங்கள் முக்கியத்துவம் பிரச்சினைக்கு நீங்கள் முக்கிய காரணமாக இல்லாதபோது மன்னிப்பு கேட்பது கஷ்டமாகத்தான் இருக்கும். அதற்காக நீங்கள் கோபமாக நடந்துகொண்டால் அது நியாயமாக இருக்காது. ‘போகப் போக எல்லாம் சரியாயிடும்’ என்று நினைத்து மன்னிப்பு கேட்காமல் இருந்துவிடாதீர்கள். நீங்கள் உடனே மன்னிப்பு கேட்கும்போது உங்கள் துணையின் மனம் மாறலாம், அவரும் மன்னிப்பு கேட்கலாம். அடிக்கடி மன்னிப்பு கேட்டு பழகுங்கள்.

அப்போது மன்னிப்பு கேட்பது உங்களுக்கு சுலபமாக இருக்கும். நீங்கள் நடந்துகொண்ட விதத்தை நியாயப்படுத்துவது வேறு, மன்னிப்பு கேட்பது வேறு. சிலசமயம் கொஞ்சம் கேலியாக, “ரொம்ப சாரி, ஆனா இந்த விஷயத்தை நீங்க இவ்ளோ பெரிசா எடுத்துக்குவீங்கனு நினைக்கல” என்று சொல்லாதீர்கள். உங்கள் பங்கில் இருக்கும் தவறை ஒத்துக்கொள்ளுங்கள்; உங்கள் மனைவியின் கோபம் நியாயமாக இல்லை என்று நீங்கள் நினைத்தாலும், அவருடைய மனம் புண்பட்டதற்காக மன்னிப்பு கேளுங்கள்.
 

ishitha

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 22, 2014
Messages
2,089
Likes
6,607
Location
tirunelveli
#2
Re: மன்னிப்பு என்ற சொல் வாழ்க்கையை பலப்படு&#29

:thumbsup TFS:)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.