"மன்னி " (அண்ணி)

Joined
Aug 8, 2011
Messages
88
Likes
130
Location
Muscat,Oman
#1
"மன்னி " (அண்ணி) என்பது ஒரு நல்ல உறவு.
ஒரு நடுத்தரத்துக்கு கீழே இருந்த, 9 பிறந்து, 7 வளர்ந்த குடும்பத்தின், கடைசி குழந்தையாக, செல்லமாக, சலுகைகளுடன், வளர்க்கப்பட்டு,....
அம்மா, அப்பா, 5 குழந்தைகள் உள்ள குடும்பத்தின், முதல் மருமகளாக அனுப்பப்பட்டு....
"மன்னி" என்று நாலு கீழ் கிளைகள் அழைத்த பொது...
மகிழ்ந்துதான் போனேன் !!
...
எவ்வளவு இனிமையான பொறுப்புகள் !!
விடி காலையில் நான் செய்து கொடுக்கும் tiffin ஐ , ஆசையோடு சாப்பிட்டு college க்கு செல்லும் பெரிய மைத்துனன்...
"மன்னி, record எழுதி குடுங்களேன் " என்று என் திறமையை மதித்து , வேலை கொடுத்த நாத்தனார்...
"மன்னி சாதம் ஊட்டட்டும் " என்று சாப்பிட்ட 7 வயது மச்சினன்....
எனக்கு ஏதாவது உடம்பு முடிய வில்லை என்றால் உண்மையான பாசத்தோடு , இன்றும் பதறும் இந்த உறவுகள் !!
வீட்டிலே ஒருபுது உறவு வளைய வருவதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட குடும்பம்...!!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.