மன அழுத்தத்திற்கு என்ன மருந்து

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#1
மன அழுத்தத்திற்கு என்ன மருந்து

மன அழுத்தம் அனைவருக்கும் பிரச்னையாக இருக்கிறது. இதனால் வெற்றி வாய்ப்புகளை இழக்க நேரிடுகிறது. இதற்கான காரணங்கள் பல. அதைக் கண்டறிந்து வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் செயல்படுவதே சிறந்தது. சில டிப்ஸ்களை தொடர்ந்து கடைபிடித்தால் மன அழுத்தத்தை குறைக்கலாம்.

1.பலம் மற்றும் பலவீனத்தைஅறிதல்:

உங்களிடம் உள்ள பலம் என்ன என்பதை அறிந்து அதை வெற்றிக்கான படிக்கல்லாக கொள்ள வேண்டும்.மேலும் உன்னுடைய பலவீனத்தை அறிந்து, அதனையும் உங்களுடைய பலமாக மாற்ற முயல வேண்டும்.

2.மாற்றத்திற்கு தயாராக இருத்தல்:

நமது வாழ்வின் ஒரு பகுதி மாற்றம். வாழ்க்கை மாற்றத்தை ஏற்று அதன் நிறை குறைகளை அறிந்து செயல்படும் போது மன அழுத்தத்தை குறைக்கலாம்.

3.முன்னெச்சரிக்கையோடு இருத்தல்:

எந்த செயலையும் செய்யும் போது பல முறை யோசித்து செய்தல் நலம் பயக்கும். தனக்கென கட்டுப்பாடுகளை வகுத்து, அதை
செயல்படுத்தும் போது மன அழுத்தத்தை குறைக்கலாம். குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட வேலையை சிறப்பாக செய்ய முயற்சி செய்தல் வேண்டும்.

4.சிறந்த சமுக உறவு:

நல்ல சமுக உறவுகள் கொண்டிருப்பதே, மன அழுத்தத்தை குறைக்க வழி. உங்கள் நண்பர்களில், சரியான வழிகாட்டுதல் செய்கிறவர் யார், என கண்டறிந்து அவரோடு நட்பை தொடருங்கள். அதே நேரத்தில் தீமை செய்யும் நண்பர்களின் நட்பை துண்டித்து விடுங்கள்.

5.உறுதியாக இருத்தல்:

உங்கள் பாதை மற்றும் கட்டுப்பாடுகளில் உறுதியாக இருங்கள்.

6.நல்ல பழக்க வழக்கம்:

பிறரது மனம் நோகாமல், அன்போடு செயல்படுங்கள். சிறந்த பழக்கம் மற்றும் பண்பு நலன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

7.தேவைப்படும் பொழுது உதவி:

நமது கை தான் நமக்கு பலம். பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் போன்றவர்களிடம் தேவைப்படும் பொழுது உதவியை நாடுங்கள்.

8.பிரச்னையை தீர்க்க கற்றுக் கொள்ளல்:

பிரச்னையை நேர்வழியில் எதிர் கொள்ளுதல். சிறந்த மனப்பாங்குகளை வளர்த்துக் கொள்ளுதல். வயது முதிர்ந்தவர்களிடம் பிரச்னைக்கான காரணங்களை கூறி ஆலோசனை பெறுதல் சிறந்தது.

9.ஓய்வு எடுத்தல்:

மனிதனுக்கு ஓய்வு அவசியம். ஓய்வு எடுப்பதால் மூளை மற்றும் உடம்பு புத்துணர்ச்சி பெறுகிறது. தகுந்த ஓய்வு எடுக்கும் போது மன அழுத்தத்தை குறைக்கலாம்.

10.சிறந்த வாழ்க்கை முறை:

உணவு, தூக்கம், உடற்பயிற்சி ஆகிய மூன்றும் சிறந்த வாழ்க்கை முறைக்கு அவசியம். இதனை சரியாக மேற்கொண்டு மன அழுத்தத்தை குறைக்கலாம். இந்த டிப்ஸ்களையும் தொடர்ந்து கடைபிடிக்கும் போது மன அழுத்தத்தை குறைத்து, வெற்றிப் பாதையில் செல்லலாம்.
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#2
I read about mana azhuththam. iam inspired by the contents.
 

sulran

Friends's of Penmai
Joined
Oct 29, 2011
Messages
279
Likes
312
Location
chennai
#3
Ganga,

Everything is good. But ithai kadaipidikkirathukkulla mana azhutham vanthurum pola?. (Chumma jollykku)

rani.
 

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#5
its really useful . .. .. . .
nama manasa relaxa vachika nala cntnt share panirukinga. . . :thumbsup
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.