மன அழுத்தத்தில் தள்ளும் சிறு பிரச்னை!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
மன அழுத்தத்தில் தள்ளும் சிறு பிரச்னை!


பெண்களாக இருப்பதில் பலதரப்பட்ட சிரமங்கள் உண்டு. சகித்துக் கொள்ள முடியாத சிரமங்களில் பெண்ணின் உடல், மனப் பிரச்னை களும் அடக்கம். அவற்றில் முக்கியமானது சிறுநீரை அடக்க முடியாமை. இந்தப் பிரச்னையின் பின்னணியில் உள்ள பலவித காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சைகள் பற்றிப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் மீரா ராகவன்.

சிறுநீரை அடக்க முடியாத பிரச்னையை ஆங்கிலத்தில் Urinary incontinence என்கிறோம். இது டீன் ஏஜ் பெண்களுக்கும் வரலாம். ஆனால், இது மெனோபாஸ் பருவத்தில் உள்ள பெண்களுக்கு மிக அதிகம். இந்தப் பிரச்னையை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அளவுக்கு அதிகமாக வேலை செய்கிற சிறுநீர்பை திசுக்களின் அழற்சி, இடுப்பெலும்புத் தசைகளின் பலவீனம், சிறுநீர்பையின் திறப்புப் பகுதி குறுகிப் போவது என 3 முக்கிய காரணங்களால் இந்தப் பிரச்னை வரலாம்.

அறிகுறிகள்

*அடிக்கடி சிறுநீர் கழிக்கிற உணர்வு.
*எங்கே வெளியிடத்துக்குச் சென்றாலும் முதல் வேலையாக பாத்ரூம் எங்கிருக்கிறது எனத் தேடுவது.
*அதைப் பற்றி நினைத்தாலே உடனே சிறுநீர் கசிவது.
*சிறுநீர் கழிக்கத் தயாராவதற்கு முன்பே கசிவு.
*இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது.

தீர்வுகள்

வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவது... உதாரணத்துக்கு பருமனைக் குறைப்பது, இனிப்பு உணவுகளைத் தவிர்ப்பது, காபி, டீ, ஏரியேட்டட் பானங்களை தவிர்ப்பது...அடிக்கடி பாத்ரூம் செல்வது அல்லது அபூர்வமாகப் போவது என இரண்டையும் சரி செய்ய வேண்டும்.நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்துக்கான மருந்துகளைத் தவறாக எடுத்துக் கொண்டாலும் இந்தப் பிரச்னை வரலாம். அதை சரி செய்ய வேண்டும்.

அளவுக்கு அதிகமாக வேலை செய்கிற சிறுநீர் பை திசுக்களைக் கட்டுப்படுத்த மருந்துகள் உள்ளன. அவற்றை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பிரச்னைக்காக எடுத்துக் கொள்கிற மருந்துகள் சில நேரங்களில் மலச்சிக்கல், வாய் உலர்தல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். மருந்து உட்கொண்ட பிறகும் சிறுநீர் கசிவு இருந்தால், அதை நீண்ட காலம் அலட்சியப்படுத்தியதும், பக்க வாதம் இருப்பதும், பார்க்கின்சன் டிசீஸ் என்கிற பிரச்னை இருப்பதும் காரணங்களாக இருக்கலாம். அதற்கான பரிசோதனைகளும் சிகிச்சைகளும்உடனடியாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

சிறுநீர் கசிவுப் பிரச்னையானது பெண்களை மன அழுத்தத்தில் தள்ளக்கூடியது. சுத்தம் காரணமாக டயாப்பர் உபயோகிக்க மறுப்பார்கள். மற்றவர் முன் சகஜமாக நடமாட முடியாது. அவசரமாக எழுந்து கழிப்பறைக்கு ஓடும்போது தவறி விழுந்து எலும்பு முறிவுகளை ஏற்படுத்திக் கொள்வார்கள் வயதான பெண்கள்.

லேட்டஸ்ட்சிறுநீர்பைக்குள் கேமரா போட்டு, திசுக்களின் வேலையைக் கட்டுப்படுத்த போடாக்ஸ் ஊசி போடுகிற சிகிச்சை ரொம்பவே லேட்டஸ்ட். இந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் ஒன்றரை வருடங்களுக்கு மருந்து, மாத்திரைகள் தேவையிருக்காது. சிறுநீர் கசிவுப் பிரச்னையும் சரியாகும்.இப்பிரச்னைக்குக் காரணமான இடுப்பெலும்புத் தசைகள் தளர்வு, சிறுநீர்பை வாய் குறுகுவது பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.சிறுநீர் கசிவுப் பிரச்னையானது பெண்களை மன அழுத்தத்தில் தள்ளக்கூடியது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.