மயக்கம் தரும் மத மையங்கள் , மனம் பேதலிக்க&#3

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,675
Location
Germany
#81
Re: மயக்கம் தரும் மத மையங்கள் , மனம் பேதலிக்&#2965

[h=1]''ஈஷா ஆக்ரமிச்ச 44 ஏக்கர் நிலம் எங்க சனத்துக்கு வேணும்!" - பழங்குடியினப் பெண் முத்தம்மாளின் கோரிக்கையும் ஈஷா விளக்கமும்[/h]
Coimbatore: பிரதமர் கையால் திறந்துவைக்கப்பட்ட 112 அடி உயரத்திலான உலகிலேயே மிகப்பெரிய ஆதியோகி திருமுகம், பெரும்பாலான மாநில முதல்வர்கள் ஆதரவு தெரிவித்த ‘நதிகளை மீட்போம்’ நெடும்பயணம்... என ஏதாவது ஒரு வகையில் பிரமாண்டம் காட்டிக்கொண்டிருக்கிறது ஈஷா அமைப்பு. உறுதிகொண்ட பெண்மணியாக உச்சநீதிமன்றம்வரை சென்று ஈஷாவை எதிர்த்துவருகிறார் வெள்ளியங்கிரி மலைவாழ் பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் முத்தம்மாள். அவரிடம் பேசினோம்.

''உங்களுக்கும் ஈஷாவுக்கும் என்ன பிரச்னை?''

''மடக்காடு, முட்டத்துவயல், கரும்புக்காடு, முள்ளாங்காடு, பட்டியார்பதி, செம்மேடு, பச்சாம்வயல்னு ஈஷாவைச் சுத்தி பல கிராமங்கள் இருக்குது. இந்தக் கிராமங்கள்ல வாழ்ற கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இப்போ இருக்கிறதுக்கு இடமில்லாமப் போச்சு. ஒரு வீட்டுக்குள்ள அஞ்சு, ஆறு குடும்பங்கள் வாழுது. ஒருகாலத்துல இந்தக் கிராமமெல்லாம் பண்ணையாதான் இருந்துச்சு. நாங்கயெல்லாம் அந்தப் பண்ணைங்கள்ல அடிமை வேலைசெஞ்சவங்களோட வம்சாவழியில வந்தவங்கதான்.

அமெரிக்கக் கவுண்டர்ங்கிறவர் தன் பண்ணையில வேலைபார்த்த 13 பேருக்கு முள்ளாங்காடு பகுதியில (ஈஷாவை ஒட்டியுள்ள பகுதி) 44 ஏக்கர் இடம் கொடுத்திருக்கார். அப்போ வி.ஏ.ஓவா இருந்த சுப்பையாங்கிறவர் எங்க மக்களோட அறியாமையைப் பயன்படுத்தி அந்த இடத்தையெல்லாம் அவரோட பேர்லயும், அவர் சொந்தக்காரங்க பேர்லயும் மாத்தி எழுதி வெச்சிக்கிட்டார். ஆனா, இதெல்லாம் எங்க சனங்களுக்குத் தெரியாது; அதை நாங்கதான் அனுபவிச்சிகிட்டு வந்தோம். 2014ம் வருஷம்தான் நாங்க ஏமாற்றப்பட்ட விஷயமே எங்களுக்குத் தெரிய வந்துச்சு. நாங்க கோயம்புத்தூர் கலெக்டர்கிட்ட மனு கொடுத்தோம். ஆர்.டி.ஓ விசாரணையெல்லாம் நடந்துச்சு. அப்போதான், அந்த 44 ஏக்கரும் கரூர், கேரளான்னு பல ஊர்களைச் சேர்ந்தவங்க பேர்ல இருக்குங்கிறதும், அவங்கயெல்லாம் இப்போ ஈஷாவுக்குள்ள இருக்காங்கங்கிற உண்மையையும் கண்டுபிடிச்சோம்.

2016ல நடந்த ஆர்.டி.ஓ விசாரணையில, இதுக்கு ஒரு முடிவு வர்ற வரைக்கும் அந்த இடத்தை ஈஷாவோ, நாங்களோ... ரெண்டு தரப்புமே பயன்படுத்தக்கூடாதுனு சொன்னாங்க. ஆனா, மோடி வர்றதைக் காரணம் காட்டி அந்த இடத்தை ஈஷா கைப்பத்திடுச்சி. இப்போ நாங்க அந்த இடத்துக்குள்ள நுழையமுடியல. அந்த இடத்தைத் திருப்பிக் கொடுங்கனு நாங்க ஈஷாகாரங்ககிட்ட சண்டைபோடலை, போடவும் முடியாது. ஏன்னா அது ஈஷா பேர்ல இல்ல. ஆனா, அவங்கதான் அனுபவிக்கிறாங்க.

யார் பேர்ல இருந்தாலும் சரி, எங்களோட நெலத்தை எங்களுக்கே மீட்டுத்தாங்கனு நாங்க அரசாங்கத்துகிட்டதான் இப்போ கேக்குறோம் .அரசாங்கத்துக்கு எங்களோட தவிப்பு புரியமாட்டேங்குது. இன்னொரு பக்கம், விதிகளை மீறி கட்டடங்களை கட்டியிருக்காங்கனு ஈஷா மேல கேஸ் போட்டிருக்கோம். அந்த கேஸ்லயும் இன்னும் தீர்ப்பு வரலை. நியாயம் ஜெயிக்கும்னு நம்புறோம்.''


''தங்களோட யோகா மையத்தைச் சுற்றியுள்ள பல கிராமங்களைத் தத்தெடுத்திருக்கிறதா ஈஷா நிர்வாகம் சொல்லுது. 'நாங்க இருக்க இடம் இல்லாமல் தவிக்கிறோம்'னு நீங்க சொல்றீங்க..?"
''என்ன செஞ்சிருக்காங்க?! எங்க ஊர்ப் பிள்ளைங்களுக்கு சிலம்பம், ஆட்டம்னு கத்துத்தர்றாங்க. எதுக்காக கத்துத்தர்றாங்க? இவுங்களுக்கெல்லாம் இதெல்லாம் கத்துக்கொடுத்திருக்கோம்னு மேடையில் ஏத்தி போட்டோ புடிச்சி விளம்பரப்படுத்திக்கிறாங்க. விளம்பரத்துக்காகத்தான் இதெல்லாம் செய்யுறாங்களே தவிர வேற ஒண்ணும் இல்லை. எங்க நெலத்தை பறிச்சிகிட்டு எங்களுக்கு சிலம்பமும், டான்ஸும் சொல்லிக்கொடுத்துத் துரத்தியடிக்க நினைக்கிறதுக்குப் பேருதான் தத்து எடுக்கிறதா?''


''மரம் நடுவதாகச் சொல்றாங்க. நதிகளை மீட்க நடைபயணம் போறாங்க. எல்லாம் நல்ல விஷயங்கள்போல தோன்றினாலும், ஈஷா மீது பல விமர்சனங்கள் உள்ளதே?"
''இப்போதான் இதோட பேர் 'ஈஷா'. ஆரம்பத்துல நாங்கயெல்லாம் இதை ஆசிரமம்னுதான் சொல்லுவோம். ஒரு குழந்தையைக் கையில புடிச்சிகிட்டு ஜக்கி வாசுதேவ் ஐயா எங்க ஊருக்கு வந்தார். அப்போ தாடியெல்லாம் வச்சிருக்கமாட்டார். வாரத்துல ரெண்டு நாளுதான் இங்க இருப்பார். மத்த நாளெல்லாம் எங்க போவார்னு எங்களுக்குத் தெரியாது. நாங்க விவசாயம் இல்லாதப்போ,வேலை இல்லாம தவிச்சப்போ நெறைய பேருக்கு வேலைகொடுத்து சோத்துக்கு வழிசெஞ்சது இந்த ஆசிரமம்தான். அதையெல்லாம் நாங்க இல்லைன்னு சொல்லலை.


ஆனா, லிங்கம் வெச்சி, 'ஈஷா'னு பேர் வெச்சதுக்கு அப்புறம் அவங்க கடகடனு வளர்ந்துட்டாங்க. எங்கெங்கிருந்தோ ஆளுங்க வர ஆரம்பிச்சாங்க. என்ன நடக்குதுன்னு இப்போ வரைக்கும் எங்களுக்கு ஒண்ணுமே புரியலை. காலம்காலமா இருந்த யானைங்க பாதையையெல்லாம் அடைச்சிட்டாங்க. காட்டை கொஞ்சம் கொஞ்சமா அழிச்சி விதிகளை மீறி கட்டடம் கட்டிட்டாங்க. இவங்க எங்க மரம் நட்டிருக்காங்க? இருந்த மரங்களையெல்லாம் வெட்டினாங்க. இங்க இவ்வளவையும் செஞ்சிட்டு, நதிகளைக் காப்பாத்தப் போறேன்னு சொல்றாங்க. முதல்ல எங்க காடும், யானைகளும் வாழ வழிவிடச் சொல்லுங்க.''


''பள்ளிக்கூடம் போனதே இல்லை. கூலிவேலை செய்ற இந்த சாமான்ய மனுஷியோட உறுதியும் உரமும் ஆச்சர்யமா இருக்கே..?!"
''பள்ளிக்கூடம் போனவங்களெல்லாம், பெரிய படிப்பு படிச்சவங்களெல்லாம், தான் நல்லா இருக்கணும், தன் குடும்பம் நல்லா இருக்கணும்னுதானே நெனைக்குறாங்க? அதனாலதான் இவ்வளவு பிரச்னையும். எங்க அப்பா கான்ட்ராக்ட் வேலையெடுத்து செஞ்சிகிட்டு இருந்தார். அவர் வீட்டுக்கு வந்து கணக்கு வழக்குப் பேசும்போது அதைப் பாத்துகிட்டே இருப்பேன். உலக விஷயங்கள் கொஞ்சம் புரிஞ்சது. அப்புறம் மகளிர் சுய உதவிக்குழுவுல சத்யஜோதி மேடமும், காமராஜு சாரும் நெறைய கத்துக்கொடுத்தாங்க. பேங்க்னா என்னனு தெரிஞ்சது. கலெக்டர் ஆபீஸுக்குப் போக, வரத் தெரிஞ்சது. மலைவாழ் மக்களுக்கு நல்லது செய்யணும்கிற நோக்கத்துல வந்த நல்ல மனுஷங்கயெல்லாம் நிறைய விஷயங்கள் கத்துக்கொடுத்தாங்க.


இப்போ எங்களோட நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. இவ்வளவு காலமா வாழுறோம், எங்களுக்குனு ஒரு இடம் இல்லை. பட்டா இல்லை. ஆதிவாசிகளுக்குத்தான் காட்டுல எல்லா உரிமையும் இருக்குனு வாய்ப்பேச்சுக்கு வேணும்னா சொல்லுவாங்க. ஆனா, அதுக்கான எந்த அத்தாட்சியுமே எங்களுக்குத் தர்றது இல்லை. நாங்களும் மனுஷங்கதானே? எங்களை ஏன் மனுஷங்களாவே மதிக்க மாட்டேங்குறாங்கனு ஆதங்கமா இருக்கு. இவ்வளவு காலம் அடிமை வாழ்க்கை வாழ்ந்தாச்சு. இனிமேல் வர்ற சந்ததிகளாச்சும் நல்லபடியா வாழணும். அதுக்கு எங்களுக்கு இடம் வேணும். இதுவரைக்கும் 25 போராட்டங்களுக்கும் மேல பண்ணிட்டோம். கலெக்டர்கிட்ட மனு கொடுத்திருக்கோம். கோர்ட்ல கேஸ் போட்டிருக்கோம். நல்லது நடக்கும்னு நம்புவோம்.''
''உங்க குடும்பம் பற்றி..?"
''எனக்கு ரெண்டு பசங்க, ஒரு பொண்ணு. நான் ஈஷாவை எதிர்க்கிறதைப் பார்த்து பயந்துகிட்டு என் ரெண்டு பசங்களும் எங்களைவிட்டு விலகிட்டாங்க. ‘அது கடலும்மா... கடலுகிட்ட மோதணும்னு நெனைக்காத’னு சொல்லிட்டு ஈஷாவுக்கே வேலைக்குப் போயிட்டா என் பொண்ணு. நான் ஈஷாவை எதிர்த்து கேஸ் போட்டப்போ, நான் ஒரு லூசுனு என் மகளை பத்திரிகைகள்ல பேட்டி கொடுக்கவெச்சு என்னை அவமானப்படுத்தினாங்க. என் கதையைக் கேட்டா உங்களுக்கு தூக்கம் வராது. பெத்த பிள்ளைங்களெல்லாம் என்னைவிட்டுட்டுப் போயிட்டாங்க. எனக்கு இருக்கிற ஒரே ஆதரவு என் வீட்டுக்காரர்தான். எதைப்பத்தியும் எனக்குக் கவலை இல்லை. யார் என்னைவிட்டுப் போனாலும் எனக்கு பிரச்னையில்லை. எங்க மக்களுக்காகப் போராடி அவங்களோட நெலத்தை மீட்டுக் கொடுக்கணும். அதுதான் என்னோட லட்சியம்.''


''பிரதமரே ஈஷாவுக்கு வந்துபோயிருக்கிறார். அரசியல்வாதிகளின் ஆதரவும் ஈஷாவுக்கு இருக்குது. எந்த நம்பிக்கையில் ஈஷாவை எதிர்க்கிறீங்க?"
''நியாயத்தை நம்பித்தான் போராடுறோம். வெள்ளியங்கிரி சாமி எங்களை கைவிடாதுனு நாங்க நம்புறோம். ஆதியோகி சிலையைப் பாக்குறதுக்கு வந்த பிரதமர், பக்கத்துல இருக்குற ஆதிவாசிகளோட போராட்டத்தைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு எங்களையும் பார்த்துப் பேசியிருந்தாருன்னா உண்மை என்னன்னு தெரிஞ்சிருக்கும். ஆதியோகிகிட்ட பணம் இருக்கு, ஆதிவாசிகள்கிட்ட இல்லை. பணம் இருக்கிறவங்களைத்தான் எல்லோரும் பார்க்குறாங்க. பாமர சனங்களெல்லாம் எக்கேடு கெட்டுப்போனா என்னனு விட்டுடுறாங்க. இங்க பயந்தா வாழவே முடியாது. இன்னைக்குச் செத்தாலும் சாவுதான், என்னைக்குச் செத்தாலும் சாவுதான். அந்த 44 ஏக்கரை மீட்குற வரைக்கும் என் போராட்டம் நிக்காது. அதுக்குள்ள நான் செத்துப்போனாலும், ஏன் இன்னைக்கே நான் செத்துப்போனாலும்... அந்த இடத்துக்காகப் போராடியே முத்தம்மா செத்துப்போயிட்டான்னுதான் இருக்கும்.''
இது குறித்து ஈஷா மையத்தின் பதிலாக நாம் கேட்டபோது, அவர்கள் தரப்பிலிருந்து...

வணக்கம்.
ஆதியோகி சிலை நிறுவுவதைத் தடுக்கவும், மஹாசிவராத்திரி விழாவை தடைசெய்வதையும் உள்நோக்கமாய்க் கொண்டு சுயநல நோக்கம் உள்ள சிலர் 20.11.2016 தேதியில் துவங்கிய அமைப்புதான், இந்த வெள்ளியங்கிரி மலை பாதுகாப்புக் குழு. இந்த அமைப்பின் தலைவர் முத்தம்மா தொடுத்துள்ள வழக்கு முற்றிலும் அடிப்படையற்றது, ஆதாரமற்றது.


குறிப்பிடப்பட்டுள்ள 44 ஏக்கர் நிலத்திற்கும் ஈஷாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இதுபோல், முழுக்க முழுக்கப் பொய்யான கதைகளைப் புனைந்து, எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல், பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி, ஏமாற்றுப் பாதையில் அழைத்துச் செல்கின்றனர்.


இதற்கு முன் பலமுறை கூறப்பட்டது போல, ஆதியோகி சிலை, ஈஷா அறக்கட்டளைக்குச் சொந்தமான பட்டா நிலத்தில்தான் அமைந்துள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை கூறுகிறோம். கிராம நிர்வாக அலுவலர் முதல், மாவட்ட ஆட்சியர் வரை இந்நிலத்தை ஆய்வுசெய்த பின்னர், முறையான ஒப்புதல் பெறப்பட்ட பின்னர்தான் ஆதியோகி சிலை நிறுவப்பட்டது.


ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த அனைத்து கட்டிடங்களுக்கும் மலைத்தளப் பாதுகாப்புக் குழுவிடமிருந்து (HACA) தொழில்நுட்ப இசைவு பெறப்பட்டுள்ளது. காடுகள் ஆக்கிரமிப்பு, யானை வலசைப் பாதையில் அமைந்திருத்தல் போன்ற குற்றச்சாட்டுக்களை முற்றிலுமாக நிராகரித்து, தமிழக வனத்துறையே பலமுறை பதிலளித்துள்ளது.


இந்தக் குற்றச்சாட்டு சம்பந்தமான அனைத்து ஆவணங்களும் எங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொது மக்களின் பங்கேற்புடன் 3 கோடிக்கும் அதிகமான (3,03,39,094) மரங்களை ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் நட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளின் சுற்றுச்சூழலுக்கான உயரிய விருதுகளை, ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம் பெற்றுள்ளது.


அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு ஆண்டும், தமிழகக் கிராமங்களின் கிராமிய உணர்வினை பறைசாற்றும் வகையில், அங்கு மிக விரிவான, ஈஷா கிராமோத்சவம் எனும் விளையாட்டுப் போட்டிகள், கொண்டாட்டமாய்க் கோலாகலமாய் நடைபெறுகின்றன. கிராமியக் கலை, இசை, கிராமிய உணவுத் திருவிழாக்கள் இதில் முக்கிய இடம்பெறகின்றன. ஜாதி, மத, பாலின பாகுபாடுகளைக் கடந்து, கிராமப்புறங்களின் உயிர்துடிப்பை வெளிப்படுத்துவதாய் இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்படுகிறது.


இவ்வளவு பன்முகப்பட்ட சேவைகளை ஒரே குடையின் கீழ அற்பணிப்புடன் செய்து வரும் நிறுவனங்கள் நாட்டிலேயே வெகு சில. இந்தச் சேவைகளின் தாக்கத்தைக் குறைத்துக்காட்டியும் நோக்கத்தைக் கொச்சைப்படுத்தியும் கிளம்பும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்குச் சில அமைப்புகளும் துணை போவது வேதனை அளிக்கிறது.


ஈஷா மையம் சார்பாக அளித்த பதில்களை முத்தம்மாவிடம் கூறியபோது, அவர், "எங்களைப் போராட்டத்தை நீர்த்துபோகச் செய்ய இந்த விஷயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்றாங்க. எங்கள் தரப்பு நியாயத்தை நிரூபிக்க நாங்க எப்பவுமே தயாராக இருக்கிறோம்." என்றார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,431
Likes
4,439
Location
India
#82
Re: மயக்கம் தரும் மத மையங்கள் , மனம் பேதலிக்&#2965

[h=2]வீடியோ விவகாரம்: ரஞ்சிதாவுடன் இருப்பது நித்தியானந்தா தான் - தடயவியல் ஆய்வில் உறுதியானது[/h]
ராமநகர் மாவட்டம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்தியானந்தா சாமியார். இவரும், நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் கடந்த 2010-ம் ஆண்டு வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான வழக்கு ராமநகர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் ராமநகர் கோர்ட்டில் சி.ஐ.டி. போலீசார், நித்தியானந்தா சாமியார் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளனர். அதனுடன் நடிகை ரஞ்சிதாவுடன், நித்தியானந்தா சாமியார் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் தொடர்பாக ஐதராபாத்தில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட அறிக்கையையும் போலீசார் தாக்கல் செய்திருந்தார்கள்.

ஆனால் சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்த தடயவியல் அறிக்கை பொய்யானது என்றும், நித்தியானந்தா சாமியாருக்கு எதிராக தடயவியல் அறிக்கை தயார் செய்யப்பட்டு இருப்பதாகவும், நித்யானந்தா சாமியார் சார்பில் ஆஜரான வக்கீல் கூறி இருந்தார்.இதையடுத்து, நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா சாமியார் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் அடங்கிய 2 மெமரி கார்டுகள், 2 ஆடைகளை டெல்லியில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு சி.ஐ.டி. போலீசார் அனுப்பி வைத்தனர். அதன்படி, டெல்லியில் ஆய்வு நடத்தப்பட்டு வந்தது.

அந்த மெமரி கார்டுகளில் உள்ள வீடியோ காட்சிகளில் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருப்பது நித்தியானந்தா சாமியார் தான் என்றும், அந்த வீடியோ காட்சிகள் ‘எடிட்’ செய்யப்படவில்லை என்றும் ஆய்வில் சமீபத்தில் உறுதியானது.

இதுதொடர்பான தடயவியல் அறிக்கை பெங்களூரு சி.ஐ.டி. போலீசாருக்கு, டெல்லியை சேர்ந்த டாக்டர் சி.பி.சிங் அனுப்பி வைத்துள்ளதாகவும், அந்த அறிக்கையை சி.ஐ.டி. போலீசார், விரைவில் ராமநகர் கோர்ட்டில் தாக்கல் செய்ய இருக்கிறார்கள் என்றும் நேற்று தகவல் வெளியானது.

இந்த தகவல் வெளியானதும் நேற்று பிடதியில் உள்ள அவரது ஆசிரமம் முன்பு கன்னட அமைப்பினர் திரண்டார்கள். அவர்கள் நித்தியானந்தா சாமியாருக்கு எதிராக திடீரென்று ஆசிரமத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அப்போது அவர்கள் ஆசிரமத்தில் இருந்து நித்தியானந்தா வெளியேற வேண்டும், அவரது சொத்துகளை அரசு ஜப்தி செய்ய வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் ஆசிரமத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றார்கள்.

ஆசிரமம் முன்பு நித்தியானந்தா சாமியார் உருவப்படத்துடன் இருந்த பேனர்களை கன்னட அமைப்பினர் கிழித்து எறிந்தார்கள். ஆசிரமத்தின் முன்பக்கத்தில் உள்ள இரும்பு கதவின் மீறி ஏறியும் கன்னட அமைப்பினர் கோஷங்களை எழுப்பினார்கள்.

இதுபற்றி அறிந்ததும் பிடதி போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினரிடம் சமாதானமாக பேசி அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,675
Location
Germany
#83
Re: மயக்கம் தரும் மத மையங்கள் , மனம் பேதலிக்&#2965

[h=1]நித்யானந்தா வழக்கில் டிச., 19ல் தீர்ப்பு[/h]


மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைய, நித்யானந்தாவிற்கு இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், இறுதித் தீர்ப்பு, வரும், 19ம் தேதி வழங்கப்பட உள்ளது.
மதுரை, ஜெகதலப்பிரதாபன் தாக்கல் செய்த மனு:மதுரை ஆதீன மடத்தின், 292 வது மடாதிபதியாக அருணகிரிநாதர் உள்ளார். திருவண்ணாமலை மற்றும் பிடதியில் தியான பீடம் நடத்தும் நித்யானந்தா, தன்னை மதுரை ஆதீனம் மடத்தின், 293 வது மடாதிபதியாக, 2012ல் அறிவித்தார். பின் மடத்திலிருந்து வெளியேறினார்.மதுரை ஆதீன மடம் நிர்வாகத்தில் நித்யானந்தா தலையிட, மடத்திற்குள் நுழைய நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனு செய்தார்.

மதுரை ஆதீன மடத்திற்குள் நித்யானந்தா, அவரது ஆட்கள் நுழையவும், நிர்வாகத்தில் தலையிடவும் தனி நீதிபதி,இடைக்காலத் தடை விதித்தார்.நித்யானந்தா, '293வது மடாதிபதியாக முறைப்படி நியமிக்கப்பட்டேன். என் நியமனம் ரத்து செய்யப்பட்டதுசெல்லாது. இவ்வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என மனு செய்தார். நேற்று, நீதிபதி, ஆர்.மகாதேவன், ''இறுதித் தீர்ப்பு, டிச., 19ல் பிறப்பிக்கப்படும்,'' என்றார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,431
Likes
4,439
Location
India
#84
Re: மயக்கம் தரும் மத மையங்கள் , மனம் பேதலிக்&#2965

[h=1]பாலியல் தொந்தரவு கொடுத்த சாமியாருக்கு தர்ம அடி![/h]


த்தரப்பிரதேச மாநிலத்தில் சாமியார் ஒருவர், அவரிடம் பக்திப் பாடம் படிக்க வந்த இளம்பெண்களிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தால், அப்பகுதி மக்கள் அவரைப் பிடித்து ஆடையை உருவி தர்ம அடி கொடுத்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள விருந்தாவனத்தைச் சேர்ந்தவர் பாபா பாசுதேவ் சாஸ்திரி. இவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்களுக்கு பக்தி வகுப்பு எடுப்பதாகக் கூறி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், தவறான முறையில் போட்டோக்களை எடுத்து, அதை வைத்து மிரட்டி சில மாதங்களாகப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.


இதுகுறித்து அறிந்த அந்தப் பகுதி மக்கள் சிலர் சாமியரைப் பிடித்துக்கொள்ள அந்த இரண்டு இளம்பெண்கள் அவரது பேன்டை உருவி லத்தியால் அடித்துத் துவைத்து, காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.


சாமியாரைத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வெள்ளை நிற ஆடை அணிந்த சாமியாரின் தலைமுடியை ஒருவர் பிடித்துக்கொள்கிறார். பின்னர் அந்தப் பெண்கள் தாக்கும்போது, சாமியார் அந்த லத்தியைப் பிடித்து தடுக்க முயல, அவரை விடாமல் துரத்தி துரத்தி அடிக்கிறார்கள்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,675
Location
Germany
#85
Re: மயக்கம் தரும் மத மையங்கள் , மனம் பேதலிக்&#2965

[h=1]சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் விவகாரம்..! சாமியார் விரேந்தர் தீக்சித் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு[/h]


பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் அளித்த விவகாரத்தில் டெல்லி சாமியார் பாபா விரேந்தர் தீக்சித் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
டெல்லியில் பாபா விரேந்தர் தீக்சித்துக்குச் சொந்தமான 'அத்யாத்மிக் விஷ்வா வித்யாலயா' இயங்கி வருகிறது.

இங்கு சிறுமிகள் மற்றும் பெண்கள் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாக தகவல் வந்தது. அதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் டெல்லி பெண்கள் ஆணையம் மற்றும் குழந்தைள் நலக் குழுவானது போலீஸாருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர். அந்தச் சோதனையின்போது 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள், சிறைப் போன்ற சூழலில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.


அவர்கள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையாக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. அவர்களில் 41 சிறுமிகளைக் காவல்துறையினர் மீட்டனர். மேலும் பலர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று சி.பி.ஐ தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சாமியார் பாபா விரேந்தர் தீக்சித் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், ஆஷ்ரமத்தில் சோதனை செய்தபோது, தகராறில் ஈடுபட்ட ஒருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,431
Likes
4,439
Location
India
#86
Re: மயக்கம் தரும் மத மையங்கள் , மனம் பேதலிக்&#2965

[h=1]`ஹெச்.ராஜா, நித்யானந்தா மீது நடவடிக்கை எடுங்கள்!' - சென்னை கமிஷ்னரிடம் புகார் அளித்த இளைஞர் கூட்டமைப்பு[/h]ஹெச்.ராஜா மற்றும் நித்யானந்தா சீடர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தமிழ்நாடு மாணவர், இளைஞர் கூட்டமைப்பு சார்பில் சென்னை போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாணவர், இளைஞர் கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட புகாரில்...

`இந்தியா பன்முகத் தன்மைகொண்ட நாடு. இங்கு எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் வாழ்ந்துவருகிறார்கள். சகோதரத்துவம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் வாழ்ந்து வருகின்ற மக்களிடம் மதக்கலவரத்தைத் தூண்டும் விதமாகப் பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேசிவருகிறார். அதுமட்டுமல்லாமல் சமுதாயத்தில் மதிக்கக்கூடிய இடத்தில் இருக்கிற கவிஞர் வைரமுத்துவை கீழ்த்தரமான வார்த்தைகளால் பேசிவருகிறார். இது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல. இவரின் செயல்பாடு பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துவருகிறது. எனவே, இவர் மீது வழக்குப்பதிவு செய்து குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று வேண்டுகிறோம்.

ஹெச்.ராஜாவின் செயல்பாடு மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வை உண்டுபண்ணுகிறது. மேலும், ஆண்டாள் விவகாரத்தில் நித்யானந்தாவின் சீடர்கள் சமூக வலைதளத்தில் ஆபாசமாக அரசியல் கட்சித் தலைவர்களை விமர்சித்து வருகிறார்கள். ஆன்மிகம் என்ற பெயரில் ஆபாசத்தைப் போதிக்கும் நித்யானந்தா மற்றும் அவரின் சீடர்கள் மீது வழக்குபதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,431
Likes
4,439
Location
India
#87
Re: மயக்கம் தரும் மத மையங்கள் , மனம் பேதலிக்&#2965

[h=2]தமிழ்த்தாய் வாழ்த்தின் போது அவமரியாதை: காஞ்சி விஜயேந்திர சுவாமிக்கு தமிழருவி மணியன் கண்டனம்[/h]
சென்னையில் தமிழ் சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


விழா தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது கவர்னர் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நிற்க விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மட்டும் இருக்கையில் அமர்ந்திருந்தார்.


ஆனால் விழா நிறைவில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றவர்களுடன் சேர்ந்து எழுந்து நின்று மரியாதை செய்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


இது குறித்து மதுரை ஆதீனம் கருத்து கூறியதாவது:-
எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அதற்குரிய மரியாதையை செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் காஞ்சி மடாதிபதி இளைய பீடாதிபதிக்கு உண்டு. அவ்வாறு எழாமல் அமர்ந்திருந்தது அவருக்கு சிறுமை சேர்த்திருக்கிறது.


ஏனென்றால் தமிழ் நாட்டில்தான் காஞ்சி சங்கரமடம் உள்ளது. தமிழ் மக்களின் பெருமைகளை சொல்லக்கூடிய மாண்புமிகு நிலைப்பாடுதான் தமிழ்த்தாய் வாழ்த்து. அதை உணர்ந்து இனிவரும் காலங்களில் இப்படிப்பட்ட சூழ்நிலையை தவிர்த்து தமிழுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.


இப்போது நடந்துவிட்ட இத்தகைய சூழல் சமய துறையில் இனிமேல் வரக் கூடாது என்று நாங்கள் கருதுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.


காந்திய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் கூறும்போது: பொதுவாகவே காஞ்சி மடம் தமிழுக்கு எதிராகவே செயல்படக்கூடிய மடம் என்பதில் ஐயமே இல்லை. இவர்களுக்கு வட மொழி தான் உயர்ந்தது.


தமிழ் மொழி தாழ்ந்தது என்று நினைத்தாலும் இவர்களுக்கு ஒரு மேடை மரபு ஒன்று இருக்கிறது என்பது நினைவில் வந்தாக வேண்டும்.


மேடையில் இருக்க கூடியவர் ஏற்க மறுத்தாலும் விருப்பு வெறுப்புகளை கடந்து மேடை நாகரீகம் கருதியாவது எழுந்து நின்றிருக்க வேண்டும். அப்படி எழாமல் போனது தமிழை எந்த அளவுக்கு காஞ்சிமடம் புறக்கணிக்கிறது என்பதை தான் விளக்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,675
Location
Germany
#88
Re: மயக்கம் தரும் மத மையங்கள் , மனம் பேதலிக்&#2965

[h=2]மதுரை ஆதினத்திற்கு உள்பட்ட கோவில்களுக்குள் நித்தியானந்தா நுழைய ஐகோர்ட் தடை[/h]


மதுரை ஆதினமாக தன்னை தானே நித்தியானந்தா அறிவித்துக்கொண்டதற்கு எதிராக ஜெகலதபிராபன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். கைது நடவடிக்கைக்கு பயந்து மதுரை ஆதினமாக அறிவித்துக்கொண்டதை திரும்ப பெறுவதாக கோர்ட்டில் அவர் பதில்மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், மதுரை ஆதின மடத்திற்குகோ, மடத்திற்கு சொந்தமான கோவில்களுக்கோ நுழைய மாட்டேன் என நித்தியானந்தா எழுத்துப்பூர்வ வாக்குறுதி அளித்தால் வழக்கை முடித்து வைப்பதாக கூறினார். இல்லையென்றால், ஜெகலதபிராபன் தாக்கல் செய்த வழக்கு விசாரிக்கப்பட்டு அதன் தன்மைக்கேற்ப தீர்ப்பு வழங்கப்படும் என அறிவுறுத்தியிருந்தார்.


நித்தியானந்தா சார்பில் எந்த முடிவும் எடுக்காத நிலையில், மதுரை ஆதின மடம், மடத்துக்கு சொந்தமான கோவில்களுக்குள் நுழைய நித்தியானந்தாவுக்கு தடை விதிப்பதாக நீதிபதி இன்று உத்தரவிட்டார். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதின மடங்களில் முறைகேடுகள் நடந்தால் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.


மேலும், மடங்களுக்கு வாரிசுகள் நியமிப்பது தொடர்பான வழிமுறைகளை 8 வாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,431
Likes
4,439
Location
India
#89
Re: மயக்கம் தரும் மத மையங்கள் , மனம் பேதலிக்&#2965

[h=2]நித்யானந்தாவை ஆதீன மடத்திலிருந்து வெளியேற்றியது ஏன்? - மதுரை ஆதீனம் பேட்டி[/h]


நித்யானந்தாவை மதுரை ஆதீன மடத்திலிருந்து வெளியேற்றியது ஏன்? என்பது குறித்து திருவண்ணாமலைக்கு வந்த மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி அளித்தார்.


திருவண்ணாமலை தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழப்பேரவை ஆகியவை இணைந்து சமய நல்லிணக்க பெருவிழாவை நேற்று திருவண்ணாமலையில் நடத்தியது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் நேற்று திருவண்ணாமலைக்கு வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாளை மறுதினம் (அதாவது நாளை) அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது. நீதிமன்றத்தின் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகள், உண்ணாவிரத அறப்போராட்டங்கள் நிச்சயமாக வெற்றி பெறும்.

தமிழகத்தில் பல்வேறு ஆறு, நதிகள் உள்ளன. இவற்றில் இருக்கின்ற மற்றும் வருகின்ற தண்ணீரை பாதுகாக்க வேண்டும் என்றால் தமிழக அரசு சார்பில் அணை கட்ட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

கர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தாலும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், கர்நாடக மக்கள் ஒருபோதும் தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் தருவதற்கு அனுமதிக்க மாட்டார்கள். எனவே, காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சொல்கிற கோரிக்கையை கர்நாடக மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் நாம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்ல முடியாது. எல்லா வகையிலும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் இதில் செவி சாய்ப்பதற்கு, உத்தரவு போடுவதற்கு மத்திய அரசிடமும், உச்சநீதிமன்றத்திலும் தான் அதிகாரம் உள்ளது. எனவே, தமிழக அரசு மட்டும் முயற்சி செய்தால் போதுமானது அல்ல. இதற்கு முழு ஒத்துழைப்பு மத்திய அரசு தர வேண்டும். மத்திய அரசு முழு முனைப்போடு இருந்து காவிரி நதிநீர் தமிழகத்திற்கு கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.

தி.மு.க. மற்றும் மற்ற கட்சியினர் காவிரி மேலாண்மை அமைப்பதற்காக அறப்போராட்டங்கள் செய்து வருகின்றனர். அவர்களை பாராட்டுகிறேன்.மதுரை ஆதீனத்திற்குள் நித்தியானந்தா இனி வர முடியாது. அவர், பெங்களூருவில் இருந்து அவருடைய பணிகளை செய்ய வேண்டும். தமிழகத்தில் எங்காவது ஒரு மடத்தில் மடாதிபதியாக அமர வேண்டும் என்று நினைப்பது தவறானது. அவர் எந்த மடத்திற்கும் மடாதிபதியாக வர முடியாது. நித்தியானந்தா சைவ சித்தாந்த மரபுகளை கடைப்பிடிக்கவில்லை. மேலும் அவர் தன்னையே கடவுள் என்று கூறினார். அதனால் அவரை மதுரை ஆதின மடத்தில் இருந்து வெளியேற்றினோம்.

ஆன்மிகம் இல்லாமல் அரசியல் இல்லை. அரசியல் இல்லாமல் ஆன்மிகம் இல்லை. ஆன்மிகம் கலந்தது தான் அரசியல். ஆட்சிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். மத்திய அரசை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று சொன்னால் மோடி அரசில் பக்தி உள்ளது என்பது மட்டுமல்ல. மத்திய அரசின் உதவியின்றி, ஒத்துழைப்பின்றி ஒரு மாநில அரசு செயல்பட முடியாது. அ.தி. மு.க. அரசுக்கு மத்திய அரசு ஒத்துழைப்போடு உள்ளது. மேலும் ஆதரவாக உள்ளது. அதனால் தான் மத்திய அரசை நாங்கள் ஆதரிக்கிறோம்.

ஸ்டெர்லைட் பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு நிச்சயமாக மேற்கொள்ளும் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,727
Likes
22,675
Location
Germany
#90
ஆசாராம் பாபு கற்பழிப்பு வழக்கில் 25-ம் தேதி தீர்ப்பு - பாதிக்கப்பட்ட பெண் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு

1524337641664.png

ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்தவர் ஆசாராம் பாபு(75). ஆசாராம் பாபுவும் அவரது மகன் நாராயண் சாய் ஆகியோர் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்த இரு சகோதரிகள் போலீசில் புகார் அளித்தனர்.

கடந்த 2001 மற்றும் 2006-க்கு இடைப்பட்ட காலங்களில் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் இச்சம்பவம் நடைபெற்றதாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரில் குறிப்பிட்டிருந்தனர்.

இதேபோல், உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாஜஹான்பூர் பகுதியை சேர்ந்த மற்றொரு சிறுமியும், ஆசிரமத்தில் தங்கி படித்துவந்தபோது ஆசாராம் பாபு தன்னை கற்பழித்து விட்டதாக போலீசில் புகார் அளித்திரிந்தார். இதுதவிர மேலும் பல கற்பழிப்பு குற்றங்கள் இவர்மீது சுமத்தப்பட்டன.

பலவித சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவரான ஆசாராம் பாபுவை கற்பழிப்பு மற்றும் சிறுமிகள் பாலியல் பலாத்கார தடை சட்டத்தின்கீழ் கடந்த 31-8-2013 அன்று போலீசார் கைது செய்தனர். தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பல ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஆசாராம் பாபு மீதான கற்பழிப்பு வழக்கில் அரசுதரப்பு முக்கிய சாட்சியாக அவரது ஆசிரமத்தில் நேர்முக உதவியாளராக பணியாற்றிவந்த ராஹுல் சச்சன் என்பவர் இணைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் திடீரென மாயமானார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோ நகரில் உள்ள வான்சி விஹார் பகுதியை சேர்ந்த ராஹுல் சச்சன் திடீரென மாயமானது தொடர்பாக அலகாபாத் ஐகோர்ட்டில் ஆள்கொணர்வு மனுவும், பொதுநல மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுக்களின்மீது நேற்று விசாரணை நடத்திய அலகாபாத் ஐகோர்ட், ராஹுல் சச்சன் காணாமல் போனது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், ஷாஜஹான்பூர் சிறுமி வழக்கில் கடந்த நான்காண்டுகளாக ஜோத்பூர் நகரில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அரசுதரப்பு மற்றும் எதிர்தரப்பு வாதங்கள் கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்றுவந்த நிலையில் ஏப்ரல் 25-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி மதுசூதன் சர்மா தெரிவித்திருந்தார்.

தீர்ப்பு வெளியாக இன்னும் நான்கு நாட்கள் உள்ள நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாஜஹான்பூர் பகுதியில் வசிக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு அதிகபட்சமாக பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.