மயக்கும் அழகுக்கு மல்லிகை

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,251
Likes
20,719
Location
Germany
#1
சிலருக்கு கன்னங்களில் கருமையும், மூக்கின் மேல் கரும்புள்ளிகளும் தோன்றி, முக அழகைக் குலைக்கும்.
ஒரு கப் உலர்ந்த மல்லிகைப் பூவுடன், 4 லவங்கத்தைச் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் சந்தனப் பொடி சேர்த்து இவை கலக்கும் அளவுக்கு சுடு தண்ணீர் விட்டு பேஸ்ட் ஆக்குங்கள். முகம், மூக்கு, கன்னப் பகுதிகளில் இந்த பேஸ்ட்டால் 'பேக்' போடுங்கள். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். கருமையும், கரும்புள்ளியும் காணாமல் போவதுடன்.. பருக்களும் நீங்கிவிடும்.

உங்கள் முகம் பிரகாசிக்க
ஓட்ஸ் பவுடர் - அரை கப், பச்சைக் கற்பூரம் - 2 சிட்டிகை, மல்லிகைப் பூ சாறு - அரை கப் (ஃப்ரெஷ் மல்லிகைப் பூவை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்).. இவை கலக்கும் அளவுக்கு வெந்நீரைக் கலந்து, முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம் ஒளி வீசி மினுமினுக்கும்

உலர்ந்த மல்லிகை - ஒரு கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், தோல் சீவிய ஆப்பிள் - 4 துண்டுகள்.. இவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை முகத்தில் நன்றாகத் தேயுங்கள். பின்னர், ஒரு கைப்பிடி மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரால் முகத்தைக் கழுவினால்.. இறந்த செல்கள் பறந்து, இரட்டிப்பு பளபளப்பு முகத்தை ஆட்சி செய்யும்.

உதிரி மல்லிகையை வாங்கி வெயிலில் உலர்த்தி, அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடர் 2 டீஸ்பூனுடன், 2 டீஸ்பூன் வெந்தயத்தூள் கலந்து வாரம் இரு முறை தேய்த்துக் குளியுங்கள். மேற்கண்ட பிரச்னைகளைக் களைவதுடன், கூந்தலை மிருதுவாக்கி.. செழிப்பாக வளரவும் செய்கிறது இந்த மல்லிகை பவுடர்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.