மருதாணி பேக்

Kavibhanu

Commander's of Penmai
Joined
Feb 27, 2011
Messages
1,952
Likes
1,333
Location
Trichy
#1
"மருதாணி போடுவதால் வெள்ளை முடி நிறமாகும். தொடர்ந்து நரைக்காது. அதோடு, முடி கொட்டுவதும் நின்று போகும். ஆனால், வெறும் மருதாணி, முடியை வறட்சியாக்கிவிடும். மருதாணியுடன் மேலும் சில அயிட்டங்களை சேர்த்தால் கூந்தல் மிருதுவாகும். சளி பிடிக்காது. சைனஸ் பிரச்னை இருப்பவர்களும் பயன்படுத்தலாம்.
இந்த மருதாணி பேஸ்ட்டை இரண்டு முறைகளில் தயாரிக்கலாம்.
மருதாணி பவுடர் - கால் கிலோ
கடுக்காய் - 25 கிராம்
துளசி பவுடர் - 25 கிராம்
நெல்லிக்காய் - 50 கிராம்
டீத்தூள் டிகாஷன் - 50 கிராம்
2 எலுமிச்சம்பழங்களின் சாறு
யூகலிப்டஸ் ஆயில் - 4 துளி
ஆலீவ் ஆயில் - 4 டீஸ்பூன்
இவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கிரைண்டரில் அரைத்து பேஸ்ட்டாக்குங்கள்.
இதை ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம். மூன்று அல்லது நான்கு மாதம் வரை கெடாது. இந்த "பேக்"கை வாரம் ஒரு முறை தலைக்குப் போட்டு, அரை மணி நேரம் கழித்து அலசுங்கள்.
மருதாணி இலை - 250 கிராம்
கொட்டை நீக்கிய கடுக்காய் - 25 கிராம்
சுத்தம் செய்யப்பட்ட துளசி இலை - 25 கிராம்
கொட்டை நீக்கிய பெரிய நெல்லிக்காய் - 25 கிராம்
இவற்றை நன்றாக நசுக்கி கிரைண்டரில் அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் யூகலிப்டஸ் ஆயில் - 10 துளி, ஆலீவ் ஆயில் - 4 டீஸ்பூன், 2 எலுமிச்சம்பழங்களின் சாறு, டீத்தூள் டீகாஷன் - 100 கிராம் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள்.
இந்த "பேக்" இரண்டு மாதம் வரை கெடாது.
 

ashaaherb

Friends's of Penmai
Joined
May 29, 2011
Messages
275
Likes
336
Location
Dubai
#4
hey friends,

as a cosmetologist i would like to suggest something good to u all..buying henna frm shops contain a chemical called PPD(para phenylenediamine) which is a main ingredient which gives colour to the hair..so friends if u want to avoid the side effects of dye better stay away frm ready made henna powders which is available in shops...dry henna leaves in shade and powder and refrigerate for freshness..what Bhanu has given is a gud combination..but if u add some more ingredients it would enhance the effect of henna

regards
Asha Krishna
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.