மருதாணி - Mehandi

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#1


மருதாணி


அல வணம்
ஐ வணம்
மரு தோன்றி
சரணம்
மருதாணி

இத்தனை பெயர்களை கொண்ட ஒரு மூலிகை, அழகு சாதன மூலப்பொருள் இப்போது வழக்கொழிந்து போய் விட்டது என்பது அதிர்ச்சியான உண்மை. எந்த விசேஷமானாலும், இப்போது இடம் பிடித்துக் கொள்ளும் ஒரு சடங்கு மருதாணி இட்டுக் கொள்வது. ஆனால், ஆற அமர வீட்டில் பலகாரம் செய்து, நிதானமாக உட்கார்ந்து சாப்பிடுவது எப்படி இப்போது அவுட் ஆப் பேஷன் ஆகி விட்டதோ, அதேபோல் மருதாணி இலைகளை பறித்து அதனுடன் களிப்பாக்கு, சிறிது சுண்ணாம்பு சேர்த்து அம்மியில் மைய அரைத்து (யார் அரைப்பது என்பது பெரிய போராட்டம்) ஒவ்வொருவராக தவில் வித்வான் போல பத்து விரல்களிலும் தொப்பி போட்டுக் கொள்வது இப்போது போயே போச்சு.கண்ணிமைக்கும் நேரத்தில் சரசரவென, கைகளில் அழகழகாய் கலை நயத்தோடு, ஐந்து ரூபாயிலிருந்தே கோலம் போடும் மெஹந்தி கோன்கள் கிடைக்கின்றன.

மருதாணி போடுவதால் என்ன என்ன பலன்கள், மருத்துவ ரீதியாக எப்படியெல்லாம், நமக்கு நல்லது செய்கின்றன என்பதை, தெரிந்து கொள்வதை விட, இப்படி கண்ணிமைக்கும் நேரத்தில், நம் கைகளை அழகுபடுத்தும் கோன்களை பற்றி தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

மெஹந்தி தொடர்ந்து பயன்படுத்துவதை தவிர்க்கலாம். நிறம் கூடுதலாக வேண்டும் என்பதற்காக சேர்க்கப் படுகின்ற, 'பாராபெனலீன்டையமின்' என்ற சாயப் பொருள் முதலில் அலர்ஜி ஏற்படுத்தி அரிப்பு, எரிச்சல், சிவந்து போதல், கொப்புளங்கள், வெடிப்பு போன்ற பாதிப்புகள் தொடர்ந்து உண்டாக்கும்.

எந்த சாயமாக இருந்தாலும் அது தோலின் துளைகள் வழியாக உடலுக்குள் இறங்கி சிறுநீரகம் வழியாக வெளியேறும். தொடர்ந்து மெஹந்தி பயன்படுத்தம்போது, அதிலுள்ள ரசாயனத்தால் சிறுநீரகங்கள் பாதிப்படைய அதிக வாய்ப்புகள் உண்டு. 'லுக்கேமியா' என்ற புற்று நோய் வரக் கூடிய ஆபத்தும் உண்டு.

பத்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் மருதாணி வைத்துக் கொள்ளாத பெண்களே கிடையாது. அதன் பூக்களை கூட பறித்து தலையில் வைத்துக் கொண்ட பெண்ணை கூட பார்த்திருக் கின்றோம். ஒரு கிருமி நாசினியாக, எதிர்ப்பு நுண்ணுயிர் பண்புகளை கொண்ட ஒரு மூலிகையாக, தோல் காப்பானாக விளங்கும் மருதாணியை அரைத்து, கைகளில் வைத்துக் கொள்வது ஆடம்பரமற்ற அமைதியான அழகு தரக்கூடியது. முடிகருப்பாக வளரஇரும்பு வாணலியில் தேங்காய் எண்ணெய் 500 மி.லி., விட்டு, மருதாணி இலைகளை போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு சேர்ந்து சிவப்பாக மாறியிருக்கும் எண்ணெய்யில் வாசனைக்காக, 10 கிராம் சந்தனத் துாள் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரை மாறும். நரை மாற மருதாணி விழுது, எலுமிச்சை சாறு, தேங்காய் எண்ணெய், நெல்லி முள்ளி துாள் இவற்றுடன் தயிர் கலந்து இரவு ஊற வைத்து, காலையில் அந்த கலவையை எடுத்து, தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து, சிகைக்காய் போட்டு தலை முடியை அலசினால் நாள்பட்ட நரைக் கூட மாறும்.

-வைத்தீஸ்வரி.
 

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#2
மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது மருதாணி. நகசுத்தி வராமல் தடுக்கும், புண்களை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகுபடுத்தலாம்..
பால்வினை நோயான மேக நோய்க்கு இதுசிறந்த மருந்து. இதன் இலை 10 கிராம், 6 மிளகு, ஒரு பூண்டுதிரி, 5 கிராம் மஞ்சள் ஆகியவற்றை அரைத்து நாளும் வெறும் வயிற்றில் குடித்துப் பால் அருந்தவும். புளி, புகை, காரம் கூடாது, இதனால் மேக நோய் அதனால் ஏற்படும் புண், அரிப்பு ஆகியன குணமாகும். 10 - 20 நாள் சாப்பிட வேண்டும்.

இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.

தூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின்மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.

கரும்படை, வண்ணான் படை கால் இடுக்கிலும், இடுப்பிலும், கழுத்து, கை இடுக்கிலும் வரும். இதற்கு ஒரு பிடி மருதாணி இலையுடன் 5 கிராம் 501 பார் கதர்சோப்புவைத்து அரைத்துக் களிம்புபோல தடவி வந்தால் கரும்படை யாவும் சுகமடையும். 10 -15 நாள் பூச வேண்டும். வண்டு கடிக்கும் சொறி, சிரங்கிற்கும் இதனை மருந்தாகப் பயன்படுத்தலாம்.
 

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#3
கூந்தல் பராமரிப்பிற்கு மருதாணி

சிலருக்கு தலை முடி பலமிழந்து காணப்படும். தலை வரும்போதே அதிக அளவு உதிரும். மருதாணி பவுடரை ஒரு பாத்திரத்தில் போட்டு, பிறகு அதில் கொதிக்க வைத்த டீ தூள் டிக்காஷனை ( ஆறிய பிறகு) அதில் ஊற்றி திடமாக கிளறி, பின் முட்டையின் வெள்ளை கரு, தயிர், சேர்த்து நன்கு கிளறி, பின் எலுமிச்சை பழ சாறு ஊற்றி 4 மணி நேரம் ஊற வைத்து, உங்கள் தலை முடியில் முழுவதுமாக படரும் படி ஊற வைத்து 3 மணி நேரம் கழித்து வெறும் தண்ணீரில் அலச வேண்டும். உங்கள் கூந்தல் உதிர்வது ஒரு முறை உபயோகத்தில் குறைந்துவிடும்.


* கூந்தல் சிறிது நிறம் மாறும். வெயிலில் மட்டுமே சிறிது கோல்டன் கலராக தெரியும். அது மிகவும் அழகாக தான் தெரியும்.

* நிறம் தேவை இல்லை என்றால், கூந்தலில் தேங்காய் எண்ணெய் போட்டு ஊற வைத்து, பின் மருதாணியை போடுங்கள்.

* சிறிது சிவப்பு நிறம் வேண்டும் என்றால் டீ தூளுக்கு பதிலாக பீட்ரூட் காயை வேகவைத்த தண்ணிரை மருதாணியில் ஊற்ற வேண்டும்.

* நீண்ட கூந்தல் என்றால் 2 எலுமிச்சை,2 முட்டை வெண்கரு, ஒரு கப் தயிர் போதும். சிறிய கூந்தல் என்றால் அனைத்திலும் 1 போதும். இவ்வாறு மாதம் ஒரு முறை (அ) இரண்டு முறை செய்து வாருங்கள். வித்தியாசம் தெரியும். இதனால் முடி உதிராது. நன்கு திடப்படும்.
 

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#4
இளநரையை போக்கும் மருதாணி


இன்றைய இளைஞர்களுக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம். மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெல்லி முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள்.இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும். பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள இளநரை மறைந்துவிடும். இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.
இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும்.
நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்
 

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#5
மருதாணி தைலம்

ஒரு கைப்பிடி அளவு மருதாணி இலையை எடுத்து மைபோல அரைத்து அத்துடன் 50 மிலி தேங்காய் எண்ணெயையும் 25 மிலி தண்ணீரும் சேர்ந்து காய்ச்சி எண்ணெயை எடுத்து வடிகட்டி வைத்துக் கொண்டு தினசரி குளிக்கும் முன்பு தலையில் அரைமணி முன்பாக தடவி பின்பு குளித்து வர, நரை நீங்கும்.

மருதாணி பொடி – 1 டீஸ்பூன், தயிர் – 1 டீஸ்பூன், வெந்தயப்பொடி – 1 டீஸ்பூன், காபி – 1 மேஜைக்கரண்டி, புதினா சாறு – 2 மேஜைக்கரண்டி, துளசி சாறு – 2 மேஜைக்கரண்டி, இந்த விழுதை தலையில் 2 லிருந்து 4 மணி நேரம் வைத்து ஊறவைக்கவும். பிறகு இயற்கை ஷாம்புவால் அலசவும்.
 

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#6
மருதாணிப் பூ மகிமை!


முந்தைய காலங்களில் மருதோன்றி (மருதாணி)ப் பூவைத் தலையில் வைத்துக் கொள்ளும் பழக்கம் பெண்களிடையே இருந்தது. முடிக்கு வாசனை கொடுக்கும் வல்லமை பெற்றது மருதாணிப் பூ என்று சொல்வர். ஆனால் உண்மைக் காரணம் அதுவல்ல. மருதாணிப் பூவின் வாசத்திற்கு பேனை விரட்டும் சக்தி உண்டு. துளசியுடன், மருதாணிப் பூவையும் அரைத்துத் தலையில் தடவி ஊறிக் குளித்தால், பேன் மறைந்து விடும்.
 

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#7
குளிர்ச்சியை ஏற்படுத்தும் தன்மை !!


மருதாணியில் குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீக்கத்தை கட்டுப்படுத்த அதனை அழற்சி நீக்கி பொருளாகவும் பயன்படுத்தலாம். அதன் இலைகளை பேஸ்டாக மாற்றி வீங்கிய பகுதியில் தடவி, அது காயும் வரை அப்படியே விட்டு விடுங்கள். பின் அதனை கழுவி விடுங்கள். வீக்கம் முதுவாக வற்ற ஆரம்பிக்கும். பேஸ்ட் வடிவில் இருக்கும் மருதாணி இலைகளை உடல் சூட்டை தணிக்கவும் பயன்படுத்தலாம். இரவு தூங்கும் போது மருதாணி பேஸ்டை பாதத்தில் தடவினால் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். இது சிறப்பாக செயல்படுகிறது என்று நிரூபிக்கப்பட்டும் உள்ளது
 

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#8
குளிர்ச்சியை ஏற்படுத்தும் தன்மை

மருதாணியில் குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீக்கத்தை கட்டுப்படுத்த அதனை அழற்சி நீக்கி பொருளாகவும் பயன்படுத்தலாம். அதன் இலைகளை பேஸ்டாக மாற்றி வீங்கிய பகுதியில் தடவி, அது காயும் வரை அப்படியே விட்டு விடுங்கள். பின் அதனை கழுவி விடுங்கள். வீக்கம் முதுவாக வற்ற ஆரம்பிக்கும். பேஸ்ட் வடிவில் இருக்கும் மருதாணி இலைகளை உடல் சூட்டை தணிக்கவும் பயன்படுத்தலாம். இரவு தூங்கும் போது மருதாணி பேஸ்டை பாதத்தில் தடவினால் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். இது சிறப்பாக செயல்படுகிறது என்று நிரூபிக்கப்பட்டும் உள்ளது
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#9
மிகவும் உபயோகமான பகிர்வுகளுக்கு மிக்க நன்றி uncle.
 

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#10
தலை முடி காப்பான்

அனைத்து வகை தலைமுடி பிரச்சனைகளுக்கும் பவுடர் அல்லது பேஸ்ட் வடிவில் உள்ள மருதானை இலைகளை பயன் படுத்தலாம். வாரம் ஒரு முறை இந்த பேஸ்டை யங்கள் தலை முடியில் தடவினால் பொடுகு குறைந்து, தலைமுடியை மென்மையாக்கி, பளபளப்பை உண்டாக்கும். மேலும் நரை முடியை மறைப்பதற்காகவும் அதனை பயன்படுத்தலாம். மருதாணி இலைகள் உங்கள் முடிகளை சரி செய்து மீண்டும் பொழிவை பெறச் செய்யும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய தெல்லாம் இது தான் - சீரான முறையில் மருதாணியை பயன்படுத்த வேண்டும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.