மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,076
Location
coimbatore
#1
மருத்துவம் பற்றிய சில விஷயங்கள் :-
====================================

இந்த திரியினை துவங்குவதன் மூலம், நான் படித்த, எனக்கு தெரிந்த சில மருத்துவ விஷயங்களை, பெண்மை வாசகிகளுடன் பகிர நினைக்கிறேன்...

பிடித்தால் படியுங்கள்....
புதுமையானது விஞ்ஞானம்
புதுமையான பல மருத்துவ தகவல்கள் நமக்கு தெரிவதில்லை....
புதுமைகள் அறிவோம்...
பயன்களை பெறுவோம்...
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,076
Location
coimbatore
#2
In Finland, 12,000 kids were affected by asthma. Finland university research scholars took them for a research.

They had found out the corteco steroid medicines which were given for asthmaa, reduces the growth rate of children !!!!

when compared with other normal children, these children who undertake corteco steroids, possess a height of 3 centimetre less... less...!!!!

BUt, these medicines are very effective in controlling asthmaa !!!

the doctors opine that because, the growth rate is decreased, we cannot forego the importance of these medicines in giving relief to asthma...
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,076
Location
coimbatore
#3
6 வகையான விஷயங்கள் மனிதர்களுக்கு உடல் செரிமானம்
=========================================
ஆவதற்கு தேவை :-
==============
1) இரைப்பை முதலியவற்றின் உட்சூடு :-
==================================
இது இயற்கையாக இரைப்பை முதலியவற்றின் இடைவிடாத அசைவினால் பாதுகாக்கப்படுகிறது. (மது பானம் அருந்தினால் இந்த சூடானது பலம் பெற்று வயிற்று புண்களை ஏற்படுத்தும்)
2) வாயுவின் சஞ்சாரம் :-
===============
இடைவெளி இருக்கும் வகையில் இரைப்பையை நிரப்புவது அவசியம். இடைவெளி இல்லை எனில் நெகிழ்ந்த உணவு கீழ் இறங்காது. காற்று எளிதில் இடம் விட்டு, இடம் மாற வாய்ப்பு இருந்தால், உணவும் இடம் மாறும். எளிதில் உணவும் செரிக்கும்.
3) திரவக் கசிவு :-
===========
உணவின் இறுக்கமான தன்மை நெகிழ்ந்து கூழ் போன்ற நிலை பெறும்போது ஜீரண திரவங்கள் ஒரே சீராக பரவி அவற்றை பக்குவப்படுத்த முடியும். , இதற்கு திரவப் பொருளானா தண்ணீர், மோர் போன்றவற்றை உணவின் தன்மைக்கு ஏற்ப சூடாகவோ அல்லது உடல் சூடினுடைய தன்மைக்கு ஏற்பவோ சாப்பிட வேண்டும்.
4) நெய்ப்பு :-
=======
வாயு தடைபாடதிருக்கவும், இரைப்பை சவ்வின் மேல் பாதிப்பு ஏபடாதிருக்கவும், மென்மை ஏபடவும் நெய்ப்பு தேவை. நெயப்பின்றி செல்லும் உணவும் செரிமானத்திற்கு கெடுதலே. நெய், தயிர், எள் , தேங்காய் போன்றவற்றால் இதை நாம் பெறுகின்றோம்.
5) காலம், நேரம் :-
===========
உணவு செரிமானம் ஆவதற்கு நேரம் ஒதுக்கப்பட வேண்டும். ஆறு மணி நேரம் வரை செரிமானம் ஆகும் உணவு பொருட்கள் உண்டு. நேரம் தராமல் மென்மேலும் உணவு உட்கொள்ள நோய் வருகிறது.
6) உணவின் சீரிய அமைப்பு :-
==================
சீரான உணவின் சேர்க்கையானது அதிலிருந்து பிரியும் சத்தான பகுதி தாதுக்களுடைய வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,076
Location
coimbatore
#5
அகத்தி கீரை மருத்துவ பயன்கள்
**************************************************
அகத்தி கீரை மருத்துவ பயன்கள்அகத்தி கீரை குளிர்ச்சி தரும் குணமடையது. உடலில் உள்ள அனைத்து விதமான விஷங்களையும் முறியடிக்ககூடியது. மருந்துகளை உண்ணும் காலங்களில் அகத்திக்கீரையை உண்டால் மருந்தின் குணத்தை முறியடித்துவிடும் எனவே மருந்து உண்ணும் காலங்களில் அக்த்திக்கீரையை எடுத்துக்கொல்லாமல் இருப்பது நல்லது.
இது உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தக் கூடியது அகம் + தீ அதாவது நம் உடலில் உள்ள உஷ்ணத்தை நீக்ககூடியது. அகத்தி கீரையை திணம் தோறும் உண்ணாமல் அடிக்கடி உண்பது நல்லது. அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் இந்த கீரையை குறைவாக சாப்பிடவேண்டும். அகத்திக் கீரையை பற்றி அகத்தியர் பாடிய பாடல்
மருந்திடுதல் போகுங்காண் வன்கிரந்தி வாய்வாம்
திருந்த அசனம் செரிக்கும் – வருந்தச்
சகத்திலெலு பித்தமது சாந்தியாம் நாளும்
அகத்தியிலை தின்னு மவர்க்கு
உடலின் அதிகப்படியான பித்தத்தைக் குறைக்குமாம், ஜீரண சக்தியை அதிகரிக்குமாம். உணவில் கலந்து கொடுக்கப்படும் விஷப்பொருள்களை முறிக்கும் குணமுடையதாம் நிறைய சாப்பிட்டால் வாயு பிரச்சனை உண்டாகுமாம்.
அகத்திக் கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து கரும்பட்டை,தேமல்,சொறி,சிரங்கு உள்ள இடத்தில் பற்றுப்போட்டால் முழுமையாக குணமடையும்.
அகத்திக் கீரை , மருதாணி இலை மற்றும் மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துத் தடவினால்,கால்களில் ஏற்படும் பித்த வெடிப்புகள் குணமாகும்.
அகத்திக் கீரை சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்கள் மீது தடவினால் அவை காய்ந்து விழுந்துவிடும்.
அகத்திக் கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால் உடல் உஷ்ணம் குறையும், இள நரை ஏற்படுவதையும் தடுக்கும்.
அகத்திக் கீரை சாற்றில் சிறிது உப்பு சேர்த்துக் குடித்தால் வாந்தி ஏற்பட்டு பித்த நீர் வெளியாகும். இதனால் உடலில் உள்ள பித்தம் குறையும். அகத்தி கீரையை அரைத்து ஆறாத நாள்பட்ட புண்கள் மீது தடவினால் விரைவில் ஆறிவிடும்.
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,076
Location
coimbatore
#6
சர்க்கரை நோய்க்கு நாவல் பழம் சாப்பிடுவது நல்லது
********************************************************************************
* தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் ஐந்து நாவல் பழங்களை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.
* நாவல் பழத்தில் உள்ள, ஆன்தோசயனின் மிகச் சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகச் செயல்பட்டு, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.
* சர்க்கரை நோயினால் ரத்தக் குழாய், கண்களின் விழித்திரை மற்றும் உடலின் அடிப்படைச் சவ்வுகளில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும்
* நாவல் பழக் கொட்டைப் பொடியை 200 மி.கி அளவு இரு வேளைகளும் உண்ண வேண்டும். இதில் உள்ள கிளைகோஸைடு ஜம்போலின், ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,076
Location
coimbatore
#7
அத்திப்பழம -- சத்துக்கள்
**************************************
அத்திப்பழத்தில் புரோட்டீன், கார்போ ஹைட்ரேட், கால்ஷியம், ஃபைபர், பாஸ்பரஸ், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்கள் ஏ, சி, பி 12 உள்ளது. இதில் அதிக அளவு வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கக் கூடிய Antioxidents உள்ளன.பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
பலன்கள்
***************
பித்தம் தணிக்கும்.
உணவை எளிதாக செரிக்கச் செய்யும்.
ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
உடலை சுறுசுறுப்படைய வைக்கும்.
மலச்சிக்கலைத் தவிர்க்கும்.
அத்திப்பழச் சாறு வயிற்றுப் பிரச்னைகளுக்கு நல்லது.
போதைப் பழக்கம் மற்றும் மற்ற* வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை வினிகரில் ஏழு நாட்கள் ஊற வைத்த*பின், தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிட வேண்டும்.
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,076
Location
coimbatore
#8
வாய்ப்புண் பிரச்னை இதோ இருக்கு தீர்வு
**************************************************************
வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்னை பெரிதாகிவிடும்.
குழந்தை முதல், முதியோர் வரை, இது எல்லோருக்கும் வரலாம். பொதுவாக, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு, வாய்ப்புண் வரும் வாய்ப்பு அதிகம். அடுத்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும், இதன் தாக்கம் அதிகமிருக்கும். தவிர வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடுபவர்கள், புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோருக்கு அடிக்கடி வாய்ப்புண் வரலாம். எந்த நேரமும் வேலை, வேலை என்று பரபரப்பாக இருக்கிறவர்களுக்கும், மன அழுத்தம் உள்ளவர்களுக்கும், வாய்ப்புண் மீண்டும், மீண்டும் வந்து தொல்லை கொடுக்கும்.
நீண்ட நாட்களுக்கு, சரிவிகித உணவைச் சாப்பிடாதவர்களுக்கு, இரும்புச் சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி6 மற்றும் பி12 குறைபாடு ஏற்படும். இதனால், ரத்த வெள்ளை அணுக்கள் குறைந்துவிடும். இதன் விளைவாக, உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, வாய்ப்புண் வரும். ஆண்களைவிடப் பெண்களுக்கு, இந்த தொல்லை அதிகம். காரணம், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில், ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. இதனால், வாய்ப்புண் வருகிறது.
வாய்ப்புண் வருவதற்கு, ஒவ்வாமையும் முக்கிய காரணம். உணவு ஒவ்வாமை – குறிப்பாக செயற்கை வண்ண உணவுகள், மருந்து ஒவ்வாமை, பற்பசை ஒவ்வாமை போன்றவற்றை உதாரணங்களாக கூறலாம். அதிகமாக கவலைப்பட்டாலும், வாய்ப்புண் வரும். உதாரணம், மாணவர்களுக்குத் தேர்வு நேரங்களில், மன அழுத்தம் அதிகரிப்பதால், வாய்ப்புண் வரும் வாய்ப்புள்ளது.
வைட்டமின் பி2 குறைபாடு இருந்தால், வாயின் இரண்டு ஓரங்களிலும், வெள்ளை நிறத்தில் வெடிப்புகள் தோன்றும். இரைப்பையில் புண் உள்ளோருக்கு, அங்கே சுரக்கிற அதீத அமிலம், தூக்கத்தில் உணவுக்குழாயைக் கடந்து, வாய்க்கு வந்துவிடும். அப்போது, தொண்டையிலும், வாயிலும் புண் ஏற்படும். கூர்மையான பற்கள் இருந்தால், அவை உள் கன்னத்தைக் குத்தி, புண்ணை உண்டாக்கும். கவனக்குறைவாகச் சாப்பிடும்போது, கன்னம் கடிபட்டு வாய்ப்புண் ஏற்படலாம்.
பல் துலக்கும்போது, பிரஷ் குத்துவதால் புண் உண்டாகலாம். செயற்கைப் பற்கள் சரியாக பொருந்தவில்லை என்றால், அடிக்கடி வாய்ப்புண் வரும். மிகச் சூடாக காபி/டீ குடித்தால்கூட, வாய்ப்புண் வருவதுண்டு. சிலர் வாயின் ஒரு பக்கத்தில் மட்டுமே உணவை மெல்லுவார்கள். இது, நாளடைவில் வாய்ப்புண்ணுக்கு வழியமைக்கும்.
பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளின் தாக்குதல் காரணமாக வரும் கிரந்தி நோய், வின்சன்ட் நோய், சின்னம்மை, தட்டம்மை, வாயம்மை, எய்ட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படும்போது, வாயில் புண் வருவது வழக்கம். கான்டிடா ஆல்பிகன்ஸ்’ எனும் பூஞ்சைக் கிருமிகளின் பாதிப்பால், நாக்கில் கட்டித் தயிர் போல, வெண்படலம் உருவாகிப் புண் ஏற்படும்.
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,076
Location
coimbatore
#9
மூலநோய் தீர்க்கும் முள்ளங்கி ஜூஸ்
**********************************************************
இயற்கை முறையில், விளைநிலங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் காய்கறி வகைகள், இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது. அதில், பூமிக்கு அடியில் வளர்பவை மற்றும் சூரிய வெளிச்சத்தில் வளர்பவை. பூமிக்கு அடியில் காய்க்கும் முள்ளங்கி, பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
நாம் உண்ணும் உணவிலிருந்து பெறப்படும் சத்துக்களே, உடலுக்கு மருந்தாக பயன்படுகிறது. ஆகையால், சத்துள்ள உணவை உட்கொள்வதற்கான முயற்சியில், ஒவ்வொருவரும் ஈடுபட வேண்டும்.
பரபரப்பான பொருளாதார தேடல் மிகுந்த வாழ்வில், பாஸ்ட்புட் உணவை தவிர்த்து காய்கள், பழங்கள் என உட்கொள்ள ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.
இத்தகைய உணவில், முள்ளங்கி முக்கிய பங்கு வகிக்கிறது. முள்ளங்கியை சாம்பார், பொரியல், கத்தரி வறுவல் உள்ளிட்ட பல உணவு வகைகளாக சமைத்து சாப்பிடலாம். முள்ளங்கி சாறில், நோயை குணப்படுத்தும் ஆற்றல் இருக்கிறது.
மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும், ஒரு டம்ளர் முள்ளங்கி ஜூஸ் குடித்து வந்தால், விரைவில் நோய் குணமாகும். இதனை தொடர்ந்து குடித்து வந்தால், வெகுநாளாக சரியாகாத மூலநோய் கூட, பூரணமாக குணமடைய வாய்ப்புள்ளது.
குழந்தைகளுக்கு, சிறு வயதிலிருந்தே முள்ளங்கியை உணவில் சேர்த்து வந்தால் ஞாபக சக்தி பெருகும்; மூளை சிறந்த வளர்ச்சி அடையும்.
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,076
Location
coimbatore
#10
கோபம் ஏற்படுத்தும் உடல் பாதிப்புகள்
*********************************************************
கோபம் பலவித நோய்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்பது உங்களுக்கு தெரியுமா?
மன அழுத்தம்: அதிகமாக கோபம் வருவதால், மன அழுத்தம் அதிகமாகி அதன் காரணமாக நீரிழிவு, மன இறுக்கம், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் வரும்.
இதய நோய்: கோபம் வரும்போது வரும் படபடப்பு தன்மை, இதய துடிப்பை அதிகப்படுத்தி இதயத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, ஆபத்தான விளைவுகளில் முடியும்.
தூக்கமின்மை: கோபம் வரும் போது, ஹார்மோன்கள் சுறுசுறுப்பாக இருக்கும். இதனால் சரியான தூக்கமின்மை, ஓய்வில்லாமையால் நோய் எளிதாக தாக்கும்.
ரத்த அழுத்தம்: கோபம் வரும் போது உடலில் ரத்த அழுத்தம் உடனடியாக, அதிகப்படியான அளவுக்கு அதிகரிக்கும். அவ்வாறு உடனே அதிகரிக்கும் போது, இதயம் கடுமையாக பாதிக்கப்படும்.
சுவாசக்கோளாறு: ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், கோபப்படும் போது சரியாக சுவாசிக்க முடியாது. ஆஸ்துமா உள்ளவர்கள் அதிகம் கோபப்பட கூடாது. இல்லையெனில் அது மூச்சடைப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும்.
மாரடைப்பு: பெரும்பாலானோர் கோபத்தின் காரணமாகத்தான் மாரடைப்புக்கு ஆளாகின்றனர். எனவே தான், இதய நோயாளிகளிடம் எந்த ஒரு அதிகப்படியான மகிழ்ச்சியான விஷயத்தையோ, கோபமூட்டும் விஷயத்தையோ கூற வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மூளை வாதம்: மூளை வாத நோய் ஏற்படுவதற்கு, மூளையில் உள்ள ரத்த குழாய்கள் வெடிப்பது தான் காரணம். இந்த மாதிரியான ரத்த குழாய்கள் வெடிப்பதற்கு முக்கிய காரணம் கோபம். ஏனெனில் கோபத்தால், ரத்த அழுத்தம் அதிகரிப்பதால், அவை ரத்த குழாய்களை சில சமயங்களில் வெடிக்கச் செய்து, உயிரைப் பறித்துவிடும். ஆகவே அதிக கோபம் ஆபத்து.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.