மர சைக்கிள் பறந்து வருது!

vidhyalakshmi15

Commander's of Penmai
Joined
Oct 12, 2017
Messages
1,497
Likes
720
Location
Switzerland
#1
ஓரம்போ... ஓரம்போ..
நமக்கு மிகவும் பிடித்தமான பொருள், பழுதடைந்துவிட்டால் அதைத் தூக்கி எறிய மனம் வராது. அதை அப்படியே ஓர் ஓரத்தில் ‘பாதுகாப்பாக’ வைத்துவிடுவோம். சில காலம் கழித்து வேறு வழியின்றி அப்புறப்படுத்திவிடுவோம். ஆனால், தன்னுடைய செல்லமான சைக்கிள் பழுதானபோது அதைக் கிடத்தவும் இல்லை; கடாசவும் இல்லை கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த முருகேசன். தன்னுடைய சைக்கிளுக்குப் புத்துயிர் ஊட்ட முடிவெடுத்தார்.
டயர், சக்கரத்தின் ரிம், சங்கிலி, ஹாண்டில் பார், கியரைத் தவிர மற்ற பாகங்களை மரத்தால் இழைத்துத் தன்னுடைய பழைய சைக்கிளைப் புத்தம்புதியதாக மாற்றினார். கோயம்புத்தூரின் தெருக்களில் ஒய்யாரமாகத் தன்னுடைய புதிய மர சைக்கிளை அவர் ஓட்டி வருவதைப் பார்த்தவர்கள் ‘லைக்ஸ்’ போட்டார்கள். “எனக்கும் இதே மாதிரி சைக்கிள் செஞ்சு தாங்க” என்று கேட்டவர்களிடம் “இது வெறும் சைக்கிள் இல்ல ‘ஹைபிரிட் பைக்’” என்று காலரைத் தூக்கிவிட்டவர், தற்போது பத்துக்கும் மேற்பட்ட புதிய மர சைக்கிள்களைத் தயாரித்துக்கொண்டிருக்கிறார் முருகேசன்.

தச்சர் டு டிசைனர்

தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து வீட்டு உள் அலங்காரப் பணிகளைச் செய்துவருகிறார் அவர். ‘இண்டீரியர் டிசைனரான நீங்கள் மரத்தாலான சைக்கிளை வடிவமைத்தது எப்படி?’ என்று கேட்டால், “தச்சு தொழில்செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். குடும்பச் சூழலால் எட்டாவது வரைக்குதான் பள்ளிக்குப் போக முடிஞ்சது.


அதுக்கப்புறம் அப்படியே அப்பாவோட சேர்ந்து தச்சு வேலை செய்ய ஆரம்பிச்சுட்டேன். தச்சர் என்ற நிலையில இருந்து டிசைனர் என்ற நிலைக்கு உயரணும்னா மேலும் படிப்பு தேவைன்னு ஒரு கட்டத்துல புரிஞ்சது. பி.ஏ. அரசியல் அறிவியல் தொலைதூரப் படிப்புல சேர்ந்து படிச்சேன். ‘ஹோம் டெக்கரேட்டர்’ சான்றிதழ் படிப்பையும் படிச்சேன்.
சின்ன வயசுல இருந்தே மர வேலைப்பாடு எவ்வளவு பிடிக்குமோ அதே அளவுக்குச் சூழலியலிலும் ஆர்வம் உண்டு. எங்களுடைய பகுதியில் நடத்தப்படும் சூழலியல் சார்ந்த கூட்டங்களில் தவறாமல் பங்கேற்பேன். அப்போதுதான் ஒண்ணு தெளிவா புரிஞ்சது. காடுகளைப் பாதுகாக்க மரத்தை வெட்டாமல், அதற்கு மாற்றாக பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தும்போது மேலும் சுற்றுச்சூழலுக்குக் கேடும் விளைவிக்கிறோம்.
அதனால வீட்டு அலங்கார வேலைகளுக்குக் குறைந்த அளவில் மரம் விரயமாகும் ‘Engineered Woods’ எனப்படும் பிளைவுட்டைப் பயன்படுத்தத் தொடங்கினேன். இப்படி என்னுடைய சிறுவயதிலிருந்தே மர வேலைப்பாடுதான் என்னுடைய உலகம்கிறதால என்னுடைய ‘ஃபேவரைட்’ சைக்கிளைச் சரிபண்ணனும்னு நினைச்சப்ப உடனடியாகத் தோன்றியது மர சைக்கிள் ஐடியாதான்” என்கிறார் முருகேசன்.

தாக்குப்பிடிக்குமா?

இரண்டு நாட்களை வடிவமைப்புக்காகச் செலவழித்தவர், இரண்டு வாரத்தில் புதிய மர சைக்கிளை உருவாக்கிஇருக்கிறார். கிட்டத்தட்ட ரூ. 25 ஆயிரம் செலவில் தயாரான அவருடைய மர சைக்கள் பார்ப்போரைக் கவர்கிறது. ஆனாலும் சைக்கிளுக்கு இவ்வளவு தொகை செலவழிக்க வேண்டுமா, அதுவும் மரமாச்சே வெயில், மழைக்குத் தாக்குப்பிடிக்குமா?
“இது மரத்தாலான சைக்கிளாக இருந்தாலும் ‘weather coating’ கொடுக்கப்பட்ட பிளைவுட் கொண்டுதான் உருவாக்கியிருக்கிறேன். அதனால, தாராளமாக எல்லாத் தட்பவெட்பத்துக்கும் தாக்குப்பிடிக்கும். இன்னொன்று, மர சைக்கிள் ஏற்கெனவே ஐரோப்பிய நாடுகளில் பிரபலம். ஆனால், கிட்டத்தட்ட ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 1.5 லட்சம்வரை விலைக்கு அங்கே மர சைக்கிள்கள் விற்கப்படுகின்றன.
சூழலியல் பாதுகாப்பு விழிப்புணர்வு அங்குப் பரவலாக இருப்பதால நல்ல வரவேற்பும் உள்ளது. இந்தியாவிலும் சில நிறுவனங்கள் ரூ. 40 ஆயிரத்துக்கு மர சைக்கிளை விற்பனை செய்கின்றன. இதெல்லாம் அடிப்படையா வெச்சு நம்ம ஊருக்கு ஏற்றமாதிரி ரூ.18 ஆயிரம்வரை செலவில் மர சைக்கிளை உருவாக்கிவருகிறேன்” என்கிறார்.
தன்னுடைய சைக்கிளை ‘ஹைப்ரிட் பைக்’ என்று அழைக்கக் காரணம், இது ஏழு கியர் கொண்டது, எஃகுவுக்குப் பதிலாக ஸ்டீலால் ஆனது, எடை குறைவு, இருக்கையின் உயரத்தை ஒரு ‘கிளிக்’கில் கூட்டிக் குறைத்துக்கொள்ளலாம், முன் சக்கரத்தையும் பின் சக்கரத்தையும் எளிதில் கழற்றி மாட்டலாம்....இப்படி ஏகப்பட்ட வசதிகள் உள்ளன என்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, தன்னுடைய மர சைக்கிள் சமதளமான தார் ரோட்டில் மட்டுமல்ல, மலையேற்றத்துக்கும் தாக்குப்பிடிக்கும் என்று அடித்துச் சொல்கிறார் இந்த ‘சைக்கிள் சயின்டிஸ்ட்’.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.