மழைக் காலம்… உஷார்!

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
குழந்தைகளுக்கு நீரைக் கண்டாலே குஷி தான். மழையில் நனைந்து, சேற்றை அளைந்து, குதித்து விளையாடுவது, பச்சைத் தண்ணீரைக் குடிப்பது என, நம் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு, ஆர்ப்பாட்டம் செய்யும் குட்டீஸ் ஏராளம். மழைக் காலத்தில் அவர்களைப் பாதுகாக்க சில யோசனைகள் இதோ:
நீரால் பரவும் நோய்களை தடுப்பது எவ்வாறு?
* தண்ணீரை குறைந் தது 20 நிமிடங்களாவது காய்ச்சிய பின் குடிக்க வேண்டும்; அல்லது சுத்திகரிக்கப்பட்ட நீரை குடிக்க வேண்டும்.

* உணவுப் பொருட்களை கையாளுவதற்கு முன்னும், சாப்பிடுவதற்கு முன்னரும், கழிவறை சென்று வந்த பின்னரும் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.
* வெளியிடங்களில், பச்சைக் காய்கறிகளால் தயாரிக்கப்படும் சாலட்கள் மற்றும் வெட்டி வைத்திருக்கும் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
* வீட்டில் சுகாதாரத்தை பேண வேண்டும்.
* வீட்டிலேயும், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதற்கு முன், அவைகள் முறையாக கழுவப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
வயிற்றுப் போக்கு அறிகுறியில் இருந்து விடுபட:
* வயிற்று போக்கு ஏற்பட்டால், உடலின் நீர் வற்றி விடாமல் இருக்க இளநீர் அல்லது எலுமிச்சை சாறுடன், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து அருந்தலாம்.
* குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கினால் உண்டாகும் நீரிழப்பை ஈடுகட்ட, தண்ணீர் கொடுக்க வேண்டும். உதடு மற்றும் நாக்கு வறண்டு போகாமல் இருக்க, பஞ்சில் நீரை தொட்டு, தேய்க்கலாம்.
* வயிற்றுப்போக்கு நிற்க தொடங்கியதும், படிப்படியாக, எளிதில் செரிமானம் ஆகக்கூடிய ஆப்பிள், சூப், பருப்பு சாதம் போன்ற உணவுகளை சாப்பிட தொடங்கலாம்.
* வயிற்றுப் போக்கில் இருந்து முழுமையாக விடுபடும் வரை, பால், காபி மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
* கண்கள் குழிந்து காணப்படுதல், வெளிறிய தோல், குறைந்த அளவு சிறுநீர் வெளியேறுதல், குளிர்வது போன்ற உணர்வு மற்றும் எவ்வித உணவோ, தண்ணீரோ சாப்பிடாமல் இருந்தால், உடனே டாக்டரிடம் செல்ல வேண்டும்.
கொசு மூலம் பரவும் நோய்களை தடுப்பது எப்படி?
* கொசுக்கள் அதிகம் நிறைந்த பகுதிகளில் வசிப்பவர்கள், படுக்கையை சுற்றிலும், கொசுவலை கட்டுவதோடு, ஜன்னல்களிலும் வலை பொருத்தலாம்.
* கொசு உற்பத்திக்கான காரணிகளை தவிர்க்க வேண்டும். அதாவது, ஏர் கூலர்களில் தண்ணீர் தேங்காமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.
* தோட்டம், குடியிருப்பு மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* கொசுக்கள் அதிகளவில் காணப் பட்டால், வாசனையற்ற கொசுவர்த்திகள் போன்றவற்றை வாங்கி பயன்படுத்தலாம். சிலருக்கு இந்த வாசனைகள், “அலர்ஜி’யை ஏற்படுத்தி விடும்.
* “டெங்கு’ காய்ச்சலை பரப்பும் கொசுக்கள், பகல் நேரத்திலும், மலேரியாவை பரப்பும் கொசுக்கள் மாலை நேரத்திலும் கடிக்கும். எனவே, அனைத்து வேளைகளிலும், கொசு கடிப்பதில் இருந்து உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ளுங்கள்.
பூஞ்சை தொற்றுக்களை தடுப்பது எப்படி?
* உடலை எப்போதும், சுத்தமாகவும், உலர்வாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். தினம் இரண்டு வேளை குளிப்பது நல்லது.
* பூஞ்சை தொற்று ஏற்படாமல் தடுக்கும் சோப்புகளை பயன்படுத்தலாம்.
* பூஞ்சை தொற்றை தடுக்கும் பவுடர்களை, ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை, தொடை, மார்பின் கீழ்பகுதி மற்றும் கால் ஆகிய பகுதிகளில் போடலாம்.
 

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#2
Thanks Guna for sharing such an useful info....its really helpful for those who is having small children's like me...
 

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#4
மழைக்கால நோய்களும் அதைத் தடுக்கும் வழிமுறைகளும்

காலையில் மண்டையை பிளக்கும் வெயில், மாலை நேரத்தில் கொட்டும் மழை. இதுதான் இன்றைய பருவநிலை. ‘‘இதுபோன்ற நேரங்களில் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் தொற்று நோய்களின் பாதிப்பு ஏற்படும்...’’ என்று சொல்லும் குழந்தை மற்றும் பொது நல நிபுணரான டாக்டர் சதீஷ், அதிலிருந்து தப்பிக்கும் வழியையும் விளக்குகிறார்.

‘‘பருவ நிலை மாறும் காலத்தில் மூன்று முக்கிய நோய்களின் பாதிப்பு ஏற்படும். அவை, சளி, வயிற்றுப் போக்கு மற்றும் சரும அலர்ஜி போன்ற பிரச்னைகள்.
இந்த பிரச்னைகள் ஏற்பட முக்கிய காரணம் வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமிகள். வைரஸ் கிருமிகள் குளிர்ந்த காற்றில் பரவும் என்பதால் அவை சளி, இருமல் போன்ற பிரச்னைக்கு முக்கிய காரணமாக உள்ளன. இவை முதலில் தொண்டையைதான் தாக்கும். அது மெல்ல உடலில் ஊடுருவிச் சென்று கண் மற்றும் மூக்கை சுற்றியுள்ள காற்று பைகளை தாக்கும். இதனால் மூக்கடைப்பு, மூக்கொழுதல், தொண்டை வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும். சளி ஒரு தொற்று நோய். மற்றவர்களிடம் இருந்து எளிதாக பரவும்.

குளிர் காலத்தில் வெளியே செல்லும் போது காது மற்றும் மூக்கை மறைத்து செல்ல வேண்டும். எல்லா காலத்திலும் தண்ணீரை சூடு செய்து குடிக்க வேண்டும். கேன் தண்ணீர் என்றாலும் அதனை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். காரணம் தண்ணீர், பாக்டீரியா கிருமிகளின் வாழ்விடம்.

வயிற்றுப் போக்குக்கு மற்றொரு காரணம், அஜீரண கோளாறு. குளிர்காலத்தில் நாம் சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாகாது. எனவே அதிக கொழுப்புள்ள உணவுகள் மற்றும் எண்ணெய் பதார்த்தங்களை தவிர்த்து, வேக வைத்த காய்கறிகள், பழங்கள் மற்றும் எளிதில் செரிமானமாகும் உணவுகளை சாப்பிட வேண்டும்.

குளிர் காலத்தில் வியர்வை வெளியேறாது. அதனால் சருமத்தில் உள்ள துவாரங்களில் அடைப்பு ஏற்பட்டு ஸ்கேபிஸ் என்ற சரும நோய் ஏற்படலாம். எனவே தினமும் இரண்டு வேளை சுடு தண்ணீரில் குளிக்க வேண்டும். மழைக் காலத்தில் சருமத்தை தாக்கும் மற்றொரு நோய், சொரி, படை மற்றும் சிரங்கு. வெயிலின் தாக்கத்தால், பூமியின் தட்டவெப்பம் அதிகமாக இருக்கும். திடீரென்று மழை பெய்யும் போது அது பூமிக்கு அடியில் உள்ள சூட்டை மேலே கிளப்பி விடும். அந்த சமயத்தில் மண்ணில் விளையாடும் குழந்தைகளுக்கு சருமத்தில் சொரி, சிரங்கு, சூட்டுக் கொப்பளங்கள் போன்ற நோய்களின் பாதிப்பு ஏற்படும்.
பொதுவாகவே மழைக் காலங்களில் திராட்சை, ஆரஞ்சு மற்றும் கொய்யா போன்ற பழங்களை தவிர்ப்பது நல்லது. வைட்டமின் சி, இரும்புச் சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லது. வேக வைத்த சுண்டல், பயிறு வகைகள், காய்கறி சாலட், பழங்கள், பாதாம், அக்ரூட் போன்ற பருப்பு வகைகளை குழந்தைகளுக்கும் சாப்பிட கொடுக்கலாம்.

Dinakaran
 

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#6

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.