மாணவர்களைப் பாதிக்கும் பாக்கெட் ஸ்னாக்&a

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
மாணவர்களைப் பாதிக்கும் பாக்கெட் ஸ்னாக்ஸ்


எச்சரிக்கை பேரண்ட்ஸ்...

எள்ளடை, மோதகம், பொறி உருண்டை, தேங்காய் மிட்டாய், அவல் உருண்டை, கடலை உருண்டை, சீனிச்சேவு, கருப்பட்டி சீரணி, பானகம் பற்றியெல்லாம் இன்றுள்ள மாணவர்களுக்கு தெரியாது. தெரிந்தாலும் அதையெல்லாம் விரும்ப மாட்டார்கள். அவர்களுக்குப் பிடித்ததெல்லாம் ‘மயக்கும்’ சுவை கொண்ட பாக்கெட் ஸ்னாக்ஸ், கேஸ் நிரப்பப்பட்ட பானங்கள், தொண்டையை குளிர்விக்கும் ஐஸ்கிரீம் வகையறாக்கள் தான்... பெட்டிக்கடை தொடங்கி, பெரிய பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் வரைக்கும், கவனத்தை ஈர்க்கும் வண்ணங்களில் சாரை சாரையாக தொங்குகின்றன பாக்கெட் பதார்த்தங்கள். எந்த குற்ற உணர்வும் இல்லாமல் குழந்தைகள் கை நிறைய அந்த பொட்டலங்களை வாங்கிக் கொடுக்கிறார்கள் பெற்றோர்.

உண்மையில் இதுமாதிரியான ஜங்க் ஃபுட்ஸ், பாக்கெட் உணவுகள் எல்லாம் உடலை மட்டுமின்றி மனதையும் பாதிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். கவனக்குறைவு, அடம்பிடித்தல், கூடுதல் ஆக்டிவிட்டி போன்ற உளவியல் பாதிப்புகளையும் இவை ஏற்படுத்தக்கூடும் என்று அவர்கள் எச்சரிக்கிறார்கள். பெரும்பாலான தனியார் பள்ளிகள் தங்கள் வளாகத்துக்குள்ளேயே கேன்டீன் நடத்து கின்றன. அரசுப்பள்ளிகளுக்கு அருகில் சில தனி நபர்கள் கடை நடத்துகிறார்கள். இந்த இடங்களில் எல்லாம் அதிகம் விற்பனையாவது இந்த பாக்கெட் உணவு வகை
யறாக்கள்தான் என்கின்றன ஆய்வுகள்.

மத்திய அரசின் மனிதவள அமைச்சகம், அண்மையில், இந்தியா முழுதுமுள்ள தனியார் பள்ளி கேன்டீன்கள், அரசுப்பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் கடைகளில் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் பெரும்பாலான குழந்தைகள் இந்த பாக்கெட் உணவுகளுக்கு அடிமைப்பட்டுக் கிடப்பதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, அனைத்து பள்ளிகளுக்கும் அவசர சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. குறிப்பிட்ட பொருட்களை பள்ளி கேன்டீன், பள்ளிக்கு அருகில் உள்ள கடைகளில் விற்க தடையும் விதிக்கப்பட்டது.

பாக்கெட் உணவுகள் சாப்பிடு வதால் அப்படி என்ன தான் பாதிப்பு?

“பாக்கெட் உணவுகள் பல நாட்களுக்கு முன்பே தயாரிக்கப்படுபவை. அவை, கெட்டுப் போகாமல் இருப்பதற்காக அமோனியா உள்பட பல ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. தொடர்ந்து அந்த உணவுகளை சாப்பிடும்போது குடல் உறிஞ்சிகள் வீங்கிவிடும். ஜீரண செயல்பாடுகள் தடைப்படும். இரைப்பை அமில சுரப்பிலும் மாறுதல் ஏற்படும். நாளடைவில் அல்சர் பாதிப்பும் வரலாம். உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், அதுவே ‘அல்சரேட்டிவ் கார்சினோமா’ என்ற புற்றுநோயாக மாறவும் வாய்ப்புள்ளது. உடல் எடை கூடவும் வாய்ப்புள்ளது. எனவே, பாக்கெட் பதார்த்தங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்...” என்கிறார் மருத்துவர் சசிகுமார் பாக்கெட்டில் அடைத்து பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களை குளிர்ப்பதன வசதியில் மைனஸ் 18 டிகிரி முதல் 22 டிகிரி வரையிலான தட்பவெப்பத்தில் பாதுகாக்க வேண்டும்.

ஆனால், எந்தக் கடையிலும் அவ்வாறு பாதுகாப்பதில்லை. அப்படியே வெளியில் தூக்கி தொங்கவிடுகிறார்கள். பெரும்பாலான பாக்கெட் உணவுகள் முறைப்படி பதிவுசெய்யப்பட்டு, அனுமதி பெற்று சந்தைக்கு வருவதில்லை. கலர் கலர் பாக்கெட்டில் குறைந்தபட்ச தரம் கூட இல்லாத உணவுப் பொருட்களை அடைத்து விற்கிறார்கள். இவற்றைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டு கொள்வதேயில்லை.

அண்மையில், அதிக காரீயம் இருப்பதாக தடை செய்யப்பட்ட நூடுல்ஸ், இப்போது மீண்டும் சந்தைக்கு வந்துவிட்டது. ஏன் தடை செய்தார்கள்...? ஏன் திரும்பவும் அனுமதித்தார்கள்...? எந்த கேள்விக்கும் விடையில்லை. இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது அதிகாரிகளின் நடவடிக்கை.

ஒருநாள் முழுவதும் நமக்குத் தேவையான உப்பின் அளவு ஆறு கிராம்தான். ஆனால் செறிவூட்டப்பட்ட உணவு வகைகளில் பலமடங்கு அதிக உப்பு இருக்கிறது. அதை தொடர்ச்சியாக சாப்பிடுவதால் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பதார்த்தங்கள் மட்டுமின்றி, இட்லி-தோசை மாவு, மசாலா பொருட்கள், இறைச்சிகள், குளிர்பானங்கள், நூடுல்ஸ் வகைகள் என அனைத்தும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவைதான் என்கிறார்கள். பிள்ளைகள் கேட்கிறார்கள் என்பதற்காக கண்டதையும் வாங்கிக் கொடுக்காதீர்கள் பேரண்ட்ஸ். அவர்களின் மனநலம், உடல் நலம்
காப்பதில் முழுப்பொறுப்பும் உங்களுடையதுதான்!

ஒரு முன்னுதாரணம்

சேலம் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மாணவர்களின் உணவு விஷயத்தில் முன்னுதாரணமாக இருக்கிறது. இப்பள்ளியின் கேன்டீனில் மோர், இளநீர், கம்பங்கூழ், கடலை உருண்டை, சுண்டல், முளைக்கட்டிய பயறு, காய்கறி சாலட், எள் உருண்டை போன்ற உடம்புக்கு கெடுதல் செய்யாத ஸ்னாக்ஸ் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. வீட்டில் இருந்தும் இதுமாதிரி உணவுகளேயே ஸ்னாக்ஸாக கொண்டு வரவேண்டும். பாக்கெட் பதார்த்தங்களுக்கு அனுமதியில்லை.

பள்ளிகள், பள்ளிகளுக்கு அருகில் விற்க தடை செய்யப்பட்ட உணவுகள்:

சிப்ஸ், வறுத்த தின்பண்டங்கள், பாக்கெட் ஸ்னாக்ஸ், ரசகுல்லா, பேடா, குலாப் ஜாமூன், கலாகந்த், நுாடுல்ஸ், பீட்சா, பர்கர், டிக்கா, சூயிங்கம், 30 சதவீதத்துக்கு மேல் சர்க்கரை சேர்க்கப்பட்ட மற்றும் பேக் செய்யப்பட்ட இனிப்புகள், மிட்டாய்கள், சாக்லேட், குளிர்பானங்கள், கேக், பிஸ்கட், பன், பதப்படுத்திய ஜாம், பானிபூரி, பேல்பூரி, மற்றும் ஜெல்லி வகைகள்

ஜங்க் ஃபுட்ஸ் உணவுகளை சாப்பிடும்போது குடல் உறிஞ்சிகள் வீங்கிவிடும். ஜீரண செயல்பாடுகள் தடைப்படும். இரைப்பை அமில சுரப்பிலும் மாறுதல் ஏற்படும். நாளடைவில் அல்சர் பாதிப்பும் வரலாம்.
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#2
Re: மாணவர்களைப் பாதிக்கும் பாக்கெட் ஸ்னாக&#302

Good info ya. Even in my daughter's school junk food is not allowed & it is followed very strictly with a time table. Monday - Sundal, Tuesday - Dry fruits, Wednesday - Veg. Salad, Thursday - Fruits & Friday - Fruit Salad.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.