மாமியாருடன் சுமுகமான உறவுடன் இருப்பது எ

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#1


கீழ்கண்ட ஆலோசனைகள் , புதிதாக கல்யாணம் முடிந்து போகும் பெண்ணுக்கு மட்டுமல்லாமல், திருமணமான அனைத்துப் பெண்களுக்கும் தங்கள் மாமியாருடன் சுமுகமான உறவை தக்க வைப்பது எப்படி என்று விளக்கும் .

இது http://www.penmai.com/forums/laws/69936-tips-maintain-good-relations-mil.html என்ற திரியில் நான் சொல்லியிருந்த ஆலோசனைகளின் தமிழாக்கம் . 

Attachments

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#2
Re: மாமியாருடன் சுமுகமான உறவுடன் இருப்பது &am

உங்களுக்கு கல்யாணம் நிச்சயம் ஆனவுடன் , நீங்கள் கல்யாணத்துக்குப் பிறகு உங்கள் புகுந்த வீட்டில் சந்திக்கப் போகும் சவாலான ஒரு பெண்மணியாக உங்கள் வருங்கால மாமியார் இருப்பார் என்றே , உங்களைச் சுற்றியுள்ள உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் உங்களை கிட்டதட்ட பயமுறுத்தியே இருப்பார்கள் .

அவரை ஏதோ ஒரு ராட்சசியாகவோ அல்லது மிகவும் கொடுமைக்கார ஒரு பென்மணிகவோ மட்டுமே இவர்கள் சித்தரித்து இருப்பார்கள் .

இன்னும் கேட்கப்போனால் , மாமியாரிடம் தங்கள் பெண் கஷ்டப்படக்கூடாது என்று ,பெற்றோரே தங்கள் பெண்களுக்கு மாமியார்
இல்லாத இடமாகப் பார்த்தே கல்யாணம் முடிக்கக் கூட நினைக்கும் நிலை கூட நீடிக்கிறது .

ஆனால் உண்மையில் எல்லா மாமியார்களும் இப்படி இருப்பதில்லை .
அதனால் , அவரைப்பற்றி எதுவுமே தெரியாமல் ,கல்யாணத்திற்கு முன்பிலிருந்தே அவரை எதிர்கொள்ள நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை .

தாராளமாக நீங்கள் , அவரிடம் உங்களுக்கு ஏற்படக்கூடிய பயத்தையும் , அதே சமயம் அவருக்கு உங்கள் மீதுள்ள பயத்தையும் , தயக்கத்தையும் கூட எளிதில் துடைத்தெறிந்து, அவரது மனதை நீங்கள் கொள்ளை கொள்ளலாம் . இதற்கான முக்கிய மந்திரமாவது – அட்ஜஸ்ட்மென்ட் என்னும் விட்டுக்கொடுத்து வாழ்வது .
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#3
Re: மாமியாருடன் சுமுகமான உறவுடன் இருப்பது &#2

கீழ்கண்ட ஆலோசனைகளால் , உங்கள் மாமியாருடன் நீங்கள் சுமுகமான உறவுடன் இருப்பது எப்படி என்பதனை தெரிந்து கொள்ளலாம் .


** புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைக்கும் முன்னரே , உங்களுக்குள் நீங்கள் “இந்த வீட்டில் எனக்கு எந்த ஒரு இக்கட்டான நிலை வந்தாலும் , எதையும் மனதைரியத்துடன் அனைத்தையும் எளிதில் சமாளிப்பேன் “ என்று உருவேற்றிக்கொண்டே நுழைய வேண்டும் .


**இதனால் உங்கள் மனவலிமை பலமடங்கு அதிகரிக்கும் .


**கல்யாணத்திற்கு முன்னரே உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்கள் வரப்போகும் மாமியாரைப் பற்றி பலவிதங்களில் பயமுறுத்தி இருந்தாலும் கூட, ‘முடிந்தவரை அவர் மீது எப்போதும் வெறுப்பை காட்ட மாட்டேன்’ என்றே நீங்கள் உங்களுக்குள் கூறிக்கொண்டு உள்ளே நுழையவேண்டும் .


**இவ்வாறெல்லாம் உங்களுக்குள் நீங்களே தீர்மானம் எடுத்துக் கொள்வதால் ,புகுந்த வீட்டில் நடக்கும் எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் உங்களால் எளிதில் பயமில்லாமல் எதிர்கொள்ள முடியும் . இவையெல்லாமே நீங்கள் இதுவரை சந்தித்திராத விஷயங்களாக இருக்கலாம் .


**உங்கள் சமூகங்களில் மாமியார் , மாமனாரை எவ்வாறு அழைப்பது மரபாக இருந்தாலும் கூட , நீங்கள் உங்கள் மாமியாரை “அம்மா “ என்றும் , மாமனாரை “அப்பா “ என்றுமே அழைக்கலாம் .


**நீங்கள் அவர்களை இவ்வாறு அழைப்பதால் , அவர்களிடம் எளிதாக ஒரு நெருக்கம் உங்களுக்கு ஏற்படுவதாக நீங்கள் தெரிவித்து விடலாம் .


**இதைக் கேட்டவுடனேயே அவர்கள் இருவரும் உங்கள் பக்கம் சாய்ந்து விடுவது உறுதி .


** புகுந்த வீட்டின் நிலைமை உங்களுக்கு இப்போது இரண்டு வகைகளில் அமையலாம் . ஒன்று , ஒரே வீட்டில் ,நீங்கள் உங்கள் கணவர் ,மாமியார் மாமனருடனே இருக்க நேரிடலாம் . அல்லது இரண்டாவதாக , மணமான சில நாட்களில் , நீங்கள் உங்கள் கணவருடன் மட்டுமே அவர் வேலை பார்க்கும் மாநிலத்திற்கோ அல்லது வேறு நாட்டிற்கோ செல்லவும் நேரிடலாம் .


**இரண்டாவது வகையில் நீங்கள் அட்ஜஸ்ட் செய்ய வேண்டியது சிறிதளவுக்கு மட்டுமே இருக்கும் . ஆனால் முதல் வகையில் நீங்கள் எப்போதுமே எல்லாரையும் அட்ஜஸ்ட் செய்து கொண்டு போய் வாழ்வை செம்மையாக நடத்தலாம் .


**இப்போதெல்லாம் கல்யாணத்திற்கு முன்னரே , புகுந்த வீட்டினரும் கல்யாணப் பெண்ணுடன் அடிக்கடி அளவளாவுதல் , வீட்டிற்கு போக வர இருத்தல் என்பவை சகஜமாக உள்ளது . இச்சமயங்களில் நீங்கள் உங்கள் வருங்கால மாமியார் மாமனாருடன் ஒரு அளவோடு மட்டுமே பேசி வரவும் . அனாவசியமாக பேசுதல் , அடிக்கடி பெரிய அளவில் சிரிப்பது போன்றவற்றை கண்டிப்பாகத் தவிர்க்கவும் . இவை உங்களைப் பற்றி ஒரு கெட்ட எண்ணத்தை அவர்களுக்கு உண்டுபண்ணிவிடலாம் .


**நீங்கள் உங்கள் வருங்காலக் கணவருடன் தினமும் பேசுவீர்கள் . இதில் ஏதாவது ஒரு நாளாவது உங்கள் வருங்கால மாமியாருடனும் ஒரு சில வார்த்தைகள் பேசவும் . இதனால் ,கல்யாணத்திற்கு முன்னரே உங்கள் மீது ஒரு நல்லெண்ணம் அவருக்கு உண்டாகும் .


**அவரிடம் பேசும்போது பொதுவான விஷயங்களை மட்டுமே பேசவும் . உங்களுக்கு உள்ள விருப்பு வெறுப்புகளைப் பற்றியெல்லாம் இப்போதே பேசிவிட வேண்டாம் .


**கல்யாணம் முடிந்தபின்னர் புகுந்த வீட்டில் நுழைந்தவுடன் , உங்கள் மாமியார் மாமனார் கால்களில் விழுந்து வணங்கி அவர்களின் ஆசிகளைப் பெறவும் .


**இதன் பிறகு , உங்கள் மாமியார் என்னென்ன சொல்கிறார்களோ அதன்படி செயல்படவும் .
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#4
Re: மாமியாருடன் சுமுகமான உறவுடன் இருப்பது &#2

**மறுநாளில் இருந்து காலையில் சீக்கிரமாக எழுந்து , காலைக்கடன்களை முடித்தவுடன் அடுத்ததாக சமையலறைக்கு சென்று விடவும் .


**சமையலறையில் உங்கள் மாமியாருக்கு நீங்கள் எந்தெந்த வகைகளில் உதவி செய்யலாம் என்பதை கேட்டுக்கேட்டு செயல்படவும் .


**உங்களுக்கு சமையல் அல்லது வேறு எந்தெந்த திறமைகள் இருந்தாலும் அவற்றைப் பற்றியெல்லாம் முதல் நாளிலிருந்தே , தற்பெருமையாகச் சொல்லவே சொல்லாதீர்கள் .


**நீங்கள் சமையலில் மிகவும் திறமைசாலியாக இருந்தாலும் கூட , உங்கள் புகுந்த வீட்டினரின் சமையல் சுவைகள் உங்கள் வீட்டினரிலிருந்து மாறுபடலாம் .


**ஆகவே , முதல் சில நாட்களில் , சின்னச்சின்ன உதவிகளை மட்டுமே சமயலறையில் செய்யவும் . காய்கறி நறுக்குவது ,காபி கலப்பது , அதை எல்லாருக்கும் கொடுப்பது , சாப்பாடு பரிமாறுவது , தேவையானால் பாத்திரம் தேய்ப்பது போன்றவற்றை மட்டுமே செய்து வரவும் .


**ஒருவேளை , சமையலறை மட்டுமோ அல்லது மொத்த வீடுமேவோ பார்க்க சுத்தமாக , அழகாக இல்லாமல் , எல்லாம் அதனதன் இடத்தில் இல்லாமல் இருந்தாலும் , இதைப் பற்றியெல்லாம் முதல் சில நாட்களுக்காவது வாயைத் திறக்காமலே இருந்து விடவும் .


**உங்கள் மாமியாரிடம் , வீட்டின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் என்னென்ன வகையான சமையல் பிடிக்கும் , அதில் யாருக்கு எந்த சுவைகள் பிடிக்கும் /பிடிக்காது போன்றவற்றையெல்லாம் நன்றாகக் கேட்டு வைத்துக்கொண்டு மனதில் இருத்திக் கொள்ளவும் .


**உங்களுக்கு ஏற்கனவே சமையல் தெரிந்திருந்தாலும் , உங்கள் மாமியாரிடம் , அவருக்கு பரந்த அனுபவம் இருப்பதால் , அவரிடமிருந்து நீங்கள் அனைத்து சமையல் வகைகளையும் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என்பதை மறக்காமல் சொல்லவும் . இதனால் அவர் புளகாங்கிதம் அடைந்து விடுவார் .


**அவர் பழங்கால , பாரம்பரிய சமையலையே செய்து கொண்டிருந்தால் , அதற்காக அவரை கிண்டல் செய்து விடாதீர்கள் .


**அவரே உங்களிடம் புதுப்புது சமையல் வகைகளை செய்யச்சொன்னால், உடனே நீங்கள் செய்ய ஆரம்பித்து விடலாம் . இல்லாவிட்டால் , உங்கள் திறமைகளைக் காட்ட மேலும் சிறிது காலம் நீங்கள் பொறுக்க வேண்டிவரும் .


**அவருக்கும் உங்கள் மீது ஓரளவுக்கு பயம் இருப்பதும் சகஜம்தான் . அதாவது , எங்கே நீங்கள், அவர் இவ்வளவு நாட்களாக தக்க வைத்துக்கொண்டு இருந்த சமையல் ராணி , வீட்டை அழகாக , சுத்தமாக வைத்துக் கொள்பவர் போன்ற பட்டங்களை , இனிமேல் நீங்கள் தட்டிப்பறித்து விடுவீர்களோ என்ற பயம்கூட அவருக்கு இருக்கும் .


**அதனால் , ஆரம்பக் காலங்களில் , அவரிடம் கேட்டுவிட்டே சமையல் செய்யும் ஒவ்வொரு பண்டத்தையும் செய்யவும் . அதே போல , வீட்டிற்கு நீங்கள் வாங்க விரும்பும் புதுப்புது பண்டங்கள் , அலங்காரப் பொருட்கள் என அனைத்தையும் பற்றி அவரிடம் விவாதித்து விட்டே செய்யவும் .இதனால் , அவருக்கு இன்னமும் தான்தான் குடும்பத்தலைவி என்ற எண்ணம் அவருக்கு வலுப்பெறும் .


**இப்படியெல்லாம் நீங்கள் அவரிடம் எல்லாவற்றுக்கும் கலந்தாலோசித்தே செயல்படுவதால் , நீங்கள் எந்த விதத்திலும் அவருடைய இடத்தை தட்டிப் பறித்து விட மாட்டீர்கள் என்று உங்கள் மீது அவருக்கு பெரிய நம்பிக்கை ஏற்படும் . அதனால் , அப்போதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து விஷயங்களிலும் உங்கள் ஆலோசனைகளையும் அவர் கேட்கத் தொடங்கிவிட அதிக வாய்ப்புண்டு .
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#5
Re: மாமியாருடன் சுமுகமான உறவுடன் இருப்பது &#2

**முதலிலிருந்தே அவரது விருப்பங்களைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப அவ்வப்போது அவருக்கும் , உங்கள் மாமனாருக்கும் பரிசுகளை , அவை சிறிதாக இருப்பினும் வாங்கித் தாருங்கள் . இதனால் உங்கள் மீதான மதிப்புகள் பன்மடங்காகும் .


**புகுந்த வீட்டினர் அனைவரது பிறந்தநாட்கள் ,திருமண நாட்கள் போன்றவற்றை அவரிடம் கேட்டறிந்து , குறித்து வைத்துக் கொள்ளுங்கள் . இந்நாட்களை மறக்காமல் அனைவருக்கும் திடீர் பரிசுகள் அளித்து வியப்பில் ஆழ்த்துங்கள் . இப்படிச் செய்வதால் , உங்கள் மாமியாருக்கு , குடும்ப உறுப்பினர் அனைவர் மீதும் உங்களுக்குள்ள அன்பும் அக்கறையும் நன்கு புலப்படும் .


**ஒருவேளை நீங்கள் அணியும் மாடர்ன் உடைகள் அவருக்குப் பிடித்தமில்லாமல் இருந்தால் , ஒன்று ,நீங்கள் அவற்றை அவர் எதிரில் அணியாமல் இருந்துவிடலாம் அல்லது அவற்றை நீங்கள் உங்கள் வேலை நிமித்தமாக அணிய நேரிட்டால் , அதைப் பற்றி அவரிடம் நன்கு விளக்கி விடவும் . அப்போதே , நீங்கள் கண்டிப்பாக, கோவில் , திருமணம் போன்ற போகும் இடங்களுக்கு தக்கவாறு உடைகளை அணிவீர்கள் என்றும் உறுதியளித்து விடுங்கள் . இதனால் அவர் மனம் சஞ்சலம் அடையாமல் இருக்கும் .


**எப்போதேனும் அவர் உங்களை நோக்கி கடுமையான வார்த்தைகளை பிரயோகித்தால் , நீங்கள் உடனே அதற்கு பதிலடியான வார்த்தைகளையோ , அல்லது வேறு எந்தவிதமாகவும் அவரை எதிர்க்கக் கூடிய விதமாகவும் நடந்து விட வேண்டாம் .


**சிறிது நேரத்திற்கு பிறகு , ஒன்று அவர் சொன்னதை அப்படியே விட்டுவிடலாம் . அல்லது , அவர் சொன்னது மிகவும் தவறு என்று உங்களுக்குத் தோன்றினால் , சிறிது நேரம் பொறுத்து, அவருக்கு அதை மென்மையாக விளக்கி விடவும் . அப்படியே விட்டுவிட்டாலும் வரும் நாட்களிலேயே தனது தவறை அவர் உணர்ந்து விட வாய்ப்புகள் உண்டு . அதற்காக பின்னர் அவர் உங்களிடம் மன்னிப்பு வேண்டா விட்டாலும் , கண்டு கொள்ளாதீர்கள் . அப்படி மன்னிப்புக் கேட்டால் , தனது ஈகோ பாதிக்கப்படும் என்றும் அவர் நினைக்கலாம் .


**அக்கம் பக்கதினரிடமும் , உங்கள் கணவரின் அனைத்து உறவினர்களிடமும் , உங்கள் மாமியார் மாமனாரைப் பற்றி உயர்வாகவே சொல்லுங்கள் . அவர்கள் யாரிடமும் புகுந்த வீட்டினரைப் பற்றி எந்த வித வம்பும் பேசிவிட வேண்டாம் . இப்படி நீங்கள் உயர்வாக பேசுவதால் , ஒருவேளை உங்கள் மாமியாருக்கு உங்களைப் பற்றின குறைகள் இருந்தால் கூட , தன் எண்ணத்தை மாற்றிக் கொள்வார் .


**வீட்டில் அவர் வேலை செய்து கொண்டிருக்கும்போது , நீங்கள் ஒருபோதும் சும்மா இருக்காதீர்கள் . நீங்களும் கூடமாட உதவுங்கள் . அவரை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு , நீங்கள் வேலைகளைத் தொடருங்கள் .


**புகுந்த வீட்டு உறவினர் அனைவரையும் பற்றி அவரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள் .
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#6
Re: மாமியாருடன் சுமுகமான உறவுடன் இருப்பது &#2

**உங்கள் கணவர் வீட்டிலிருக்கும்போது , உங்கள் மாமியார் மாமனார் எதிரில் , அவர் பின்னோடே சுற்றிக்கொண்டோ அல்லது அவருடன் நெருக்கமாக அமர்வதோ செய்ய வேண்டாம் . இது அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும் .


**நீங்கள் உங்களுக்காக வாங்கும் எந்த பொருளையும் , (உடைகள் போன்றவை ), உங்கள் மாமியாரிடமும் காண்பிக்கவும் . உங்கள் சம வயதில் அல்லது சிறிய நாத்தனார் இருந்தால் , உங்களுக்கு வாங்கும்போது அவர்களுக்கும் மறக்காமல் வாங்கி வந்து கொடுத்தால் ,நீங்கள் உங்கள் மாமியாரின் மனதில் எளிதில் இடம் பிடிக்கலாம் .


**நீங்கள் வேலைக்குச் செல்பவராக இருந்தால் , அதிகாலையில் எழுந்து , முடிந்தவரை அனைத்து சமையல் வேலைகளையும் முடித்து , சமைத்தவற்றை ஹாட்பேக் , ஃப்ளாஸ்க், போன்றவற்றில் பத்திரப்படுத்தியோ , அல்லது மைக்ரோவேவில் சூடு செய்து கொள்ளும்படியோ சொல்லிவிட்டும் போகலாம் . இதனால் தனக்கு வேலைச்சுமை இருப்பதாக மாமியார் எண்ணாமல் இருப்பார் .


**மாலையில் வேலையிலிருந்து வந்த பிறகும் , முடிந்தவரை அவருடன் உதவச் செல்லுங்கள் .


**வீட்டில் ஏதேனும் விசேஷங்கள் இருந்தால் , அப்போதெல்லாம் முடிந்தவரை உங்கள் வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு , வீட்டில் இழுத்துப்போட்டுக்கொண்டு வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் . இப்படிச் செய்தால் , நீங்கள் வேலைக்குச் செல்வதில் அவருக்கு எந்த ஒரு ஆட்சேபணையும் கிளம்பாது .


**தனக்குத் தெரிந்தவர்களிடம் அவர் உங்களைப் பற்றிப் புறம்பேசினாலும், நீங்கள் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் இருப்பதே உத்தமம் . “இன்னா செய்தாரை ஒறுத்தல்” என்பது போல , நீங்கள் அவரைப்பற்றி நல்லவிதமாகவே அனைவரிடமும் சொல்லி வந்தால் , கண்டிப்பாக விரைவில் அவர் தனது தவறை உணர்ந்து மாறிவிட வாய்ப்புண்டு .


**உங்கள் பிறந்த வீட்டினரைப் பற்றி அதிகமாக , புகுந்த வீட்டில் அதிகமாகப் பேசாமல் இருத்தல் நலம் பயக்கும் . அப்படிப் பேசினால் , உங்கள் கணவர் உட்பட அனைத்து புகுந்த வீட்டினருக்கும் அது எரிச்சலைக் கிளப்பும் விஷயமாகும் .
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#7
Re: மாமியாருடன் சுமுகமான உறவுடன் இருப்பது &#2

**உங்கள் குழந்தைகளை அவர்கள் பார்த்துக் கொள்ள நேரிட்டால் , தேவையென்றால் உதவிக்கு யாரையாவது வேலைக்கு அமர்த்திவிடவும். இதனால் வயதான காலத்தில் குழந்தையுடன் ஓடிக்கொண்டே இருக்கமுடியாது என்ற குற்றச்சாட்டும் எழாமல் இருக்கும் .


**அவர்களது உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள் . அடிக்கடி டாக்டரிடமோ , செக்கப்புக்கோ போகவேண்டியிருந்தால் தவறாமல் அழைத்துச் செல்லவும் .


**வேளாவேளைக்கு உணவு ,மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்களா என்று தினமும் விசாரியுங்கள் . அவர்களது மொபைலில் ரிமைண்டர் போன்றவற்றை வைத்துக் கூட அனைத்தையும் ஞாபகப்படுத்தலாம் .


**நீங்கள் உங்கள் கணவருடன் வெளியிடத்தில் இருக்கும்போது , அவர்கள் உங்கள் வீட்டிற்கு வருகைதந்தால் ,தனது வீடுபோலவே அவர்கள் எண்ணுமளவிற்கு நடந்து கொள்ளுங்கள் . அவருக்குப் பிடித்தமான இடங்களுக்கு அழைத்துச்சென்றும், பிடித்த பரிசுகளை வாங்கித் தந்தும் திருப்தி படுத்துங்கள் .


**நீங்கள் வெளி மாநிலத்தில் இருந்தால் , தினமும் , வெளிநாட்டில் இருந்தால் வாரம் ஒருமுறையுமாக மறக்காமல் அவர்களிடம் பேசி , நலம் விசாரியுங்கள் .
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#8
Re: மாமியாருடன் சுமுகமான உறவுடன் இருப்பது &#2

**மொத்தத்தில் உங்கள் மாமியாரை , உங்களது மற்றொரு தாயாக நினைத்து நீங்கள் பழகி நடந்துகொண்டால் ,மாமியாருடனான உங்கள் உறவு மிகவும் சுமுகமாக அமைந்துவிடும் . ஒருவேளை அவர் உங்களை தனது பெண்ணைப் போல நினைக்காமல் இருந்தாலும் கூட , நீங்கள் அவரை உங்கள் தாயாராகவே நினைத்து செயல்பட்டால் , ஒரு நாள் இல்லாவிடில் ஒரு நாள் இதை உணர்ந்து தானும் உங்களை மகள் போல நினைத்து அனுப்பு காட்ட ஆரம்பித்துவிடுவார் .


**உங்கள் புகுந்த வீட்டின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப உங்களை மாற்றிக்கொண்டு நீங்கள் செயல்பட்டால் , உங்கள் மணவாழ்வு மிகவும் சிறப்பாக அமைந்துவிடுவது உறுதி .


**
மேற்கண்ட ஆலோசனைகளைப் பின்பற்றினால் ,உங்கள் மாமியாரின் இதயத்தை நீங்கள் வெல்வது உறுதி . இதனால் அனைத்து புகுந்த வீட்டினரும் உங்கள் பக்கமே .
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,494
Likes
148,303
Location
Madurai
#9
Re: மாமியாருடன் சுமுகமான உறவுடன் இருப்பது &#2

Tamil version kkum Big Thanks Aunty :yo: Superb Like :)
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,102
Likes
107,010
Location
Atlanta, U.S
#10
Re: மாமியாருடன் சுமுகமான உறவுடன் இருப்பது &#2

சூப்பர் அறிவுரைகள்..... கல்யாணம் ஆகாதவர்களுக்கு மட்டுமில்லை, ஆனவர்களுக்கும் கூட பயனுள்ளது... ஷேர் செய்ததற்கு நன்றி அக்கா...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.