மாய விளையாட்டுகள்!

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
[h=1]மாய விளையாட்டுகள்![/h] couplearguing.jpg


சமீப காலங்களில் சங்கிலித் தொடர் போல ஒவ்வோர் சமூக நிறுவனமும் மற்றதன் மேல் தன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழில் மயமாதல் என்பது எல்லா நாடுகளுக்கும் பொருந்தி வருகிற ஒன்றாக இருந்தாலும் அது ஒரே மாதிரியான போக்கையோ அல்லது மாறுதல்களையோ சமூகங்களில் ஏற்படுத்துவதில்லை என்பது நடைமுறை உண்மையென்றாலும் முதிய பெற்றோரை விட்டுவிட்டு வெளிநாடுகளில் குடியமர்ந்துவிடும் பிள்ளைகள், கணவன்-மனைவி சட்டபூர்வமாக பிரிந்துவிடும்போது குழந்தைகள் யாராவது ஒரு பெற்றோரிடம் வாழும் சூழல் இவையெல்லாம், மேலைநாடுகளைப் போன்ற நிலை இந்தியாவிலும் வந்துவிட்டதென்பதையே காட்டுகின்றன.


அனைத்து உறவுகளிலும் கணவன்- மனைவி உறவு என்பது பல்வேறு காரணங்களுக்காக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டாவது பெற்றோர் உதாரண மனிதர்களாக திகழவேண்டியது அவசியமாகிறது.


பிரச்னைகள் இல்லாத குடும்பங்களே இல்லை. கூட்டுக் குடும்பங்கள் பெரும்பாலும் மூன்று தலைமுறைகளை உள்ளடக்கிய சமூக நிறுவனமாக விளங்கின. வீட்டில் உள்ள பெரியவர்கள் பிரச்னைகளை தீர்த்துக் கொண்டிருந்தார்கள். இன்றைய சூழலில், குறிப்பாக தொழில்மயமான சமூகங்களில் கூட்டுக் குடும்பங்கள் மறைந்து தனிக்குடும்பங்கள் உதயமாகிவிட்ட நிலையில் குடும்பங்கள் பிரச்னைகளின் நிலைக்களனாகி நிம்மதியை தொலைத்த இடங்களாக காணப்படுகின்றன. கணவன்-மனைவி உறவை பலப்படுத்தும் காரணிகளுக்குச் சமமாக பலவீனப்படுத்தும் காரணிகளும் தனிக்குடும்ப சூழலில் காணப்படுவதுதான் வருந்தத்தக்க ஒன்றாகும். ஆணுக்கும் பெண்ணுக்கும் கிடைத்திருக்கும் அபரிமிதமான பொருளாதாரச் சுதந்திரம் ஒருவர் மற்றவரை எடுத்தெறிந்து பேசும் நிலையை உருவாக்கியுள்ளது.


வார்த்தைகளில் வரம்பு மீறுதல், வறட்டு வாதங்களால் அடுத்தவரை வதைப்பது போன்றவை உறவுகளைச் சிதைக்கின்றன. வீட்டில் உரக்கக் குரலெடுத்து, முரட்டுத்தனமாகவும் மூர்க்கத்தனமாகவும் கணவன் கத்தித் தீர்த்தாலோ அல்லது புற சூழல்களைக் கண்டுகொள்ளாமல் மனைவி அவலங்களை அள்ளித் தெளித்தாலோ என்ன நிகழும்? அண்டை வீடுகளில் வசிப்போரும் சாலையில் செல்வோரும் நமட்டுச் சிரிப்போடு நம்மை கவனிக்கிறார்கள் என்ற எண்ணமாவது இவ்வகை மனிதர்களின் செயல்பாடுகளை மாற்றினால் அது ஒரு நல்ல மாற்றமே. நண்பர் வட்டங்களிலும்கூட ஆரோக்கியமான சூழல்கள் காணப்படாதது வேதனையான உண்மை. எதிர்பார்ப்புகள் அதிகமிருந்தால் நட்பு நீடிக்காது என்பது யதார்த்தம் என்றாலும் சிலவகையான போக்குகள் நட்பை பாதிக்கும் என்பது உறுதி.


உறவிலும் சரி நட்பிலும் சரி சில மனிதர்கள் எங்கெல்லாம் தங்கள் அதிகாரம் செல்லுபடியாகிறதோ அங்கெல்லாம் வரம்பு மீறிச் செயல்படுகிறார்கள். உதாரணமாக சொல்ல வேண்டுமானால் தனது வாழ்க்கைத் துணைவியை அல்லது துணைவரை பிறரிடம் பேச, பழக அனுமதிக்காதவர்கள், தங்களைப் பொறுத்த வரையில் அதே கட்டுப்பாட்டை விதித்துக் கொள்வதில்லை. அடுத்த பெண்களிடமோ, ஆடவரிடமோ சர்வ சுதந்திரத்தோடு பேசிப் பழக முயற்சிப்பார்கள். இந்த இரட்டை நிலை இன்று பலரிடம் காணப்படும் ஒரு நிலைப்பாடாக உள்ளது.


பால்ய காலத்தில் உயிர்த் தோழர்களாய் பழகியவர்களில் பலர் உயர்ந்த நிலையை அடைந்துவிட்டால் உண்மையான நட்பை உதாசீனப்படுத்துகிறார்கள். மனதிற்கினிய நண்பர்களாய் பழகியிருந்தும்கூட, நட்பை மறந்துவிடுதல் அல்லது மறந்துவிட்டதைப் போல நடித்தல் போன்ற நிலைகளைக் காண்கிறோம். இந்த இரண்டுமே வேதனைக்குரியவை. பல சம்பவங்களை சம்பந்தப்பட்டவர்கள் நினைவு கூர்ந்து பேசினாலும், ஒன்று மறந்திருப்பார்கள் அல்லது மறந்ததைப் போல பாவனை செய்வார்கள். இவையெல்லாம் காலம், இடம், கல்வி, தொழில், வருமானம் இவைகளில் ஏற்படும் மாற்றங்கள் செய்யும் மாயவிளையாட்டுகளாகும்

-dinamani
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
உறவிலும் சரி நட்பிலும் சரி சில மனிதர்கள் எங்கெல்லாம் தங்கள் அதிகாரம் செல்லுபடியாகிறதோ அங்கெல்லாம் வரம்பு மீறிச் செயல்படுகிறார்கள். உதாரணமாக சொல்ல வேண்டுமானால் தனது வாழ்க்கைத் துணைவியை அல்லது துணைவரை பிறரிடம் பேச, பழக அனுமதிக்காதவர்கள், தங்களைப் பொறுத்த வரையில் அதே கட்டுப்பாட்டை விதித்துக் கொள்வதில்லை. அடுத்த பெண்களிடமோ, ஆடவரிடமோ சர்வ சுதந்திரத்தோடு பேசிப் பழக முயற்சிப்பார்கள். இந்த இரட்டை நிலை இன்று பலரிடம் காணப்படும் ஒரு நிலைப்பாடாக உள்ளது.

Read more: http://www.penmai.com/forums/married-life/67476-a.html#ixzz2vdD9bRbo
I fully agree with you sir! thank you!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.