மாரடைப்பு வருவதை தடுக்கும் சோயா பீன்ஸ்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
மாரடைப்பு வருவதை தடுக்கும் சோயா பீன்ஸ்சோயா பீன்ஸில் அதிக அளவில் புரோட்டீன், மிதமான அளவில் கொழுப்பு, நார்ச்சத்து, பி வைட்டமின்கள், ஃபோலிக் அமிலம், பொட்டாஷியம், கால்சியம் மற்றும் இரும்புச் சத்துகள் நிறைந்துள்ளன. அதே போன்று, சோயா பால் தோற்றத்திலும் குணாதிசயத்திலும் பண்ணை பால் போலவே உள்ளது.

பல்வேறு வயதில் உள்ளோருக்கும் தேவையான 9 வகை அமினோ அமிலங்களைக் கொண்டுள்ள புரோட்டீனை வழங்கும் ஒரே தாவர உணவாகும். பால் பானங்களைத் தவிர்க்க விரும்புவோருக்கு மாற்று பானம் சோயா புரோட்டீன் பானம்தான். சோயாவிலுள்ள PUFA எனப்படும் Poly Unsaturated Fatty Acids இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது.

சோயாவில் கரையும் நார்ச்சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. சோயா உணவு கெட்ட கொலஸ்ட்ரால் என்னும் LDL (Low Density Lipo proteins) அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் HDL (High Density Lipoproteins) அளவைக் கூட்டுவதன் மூலம், மாரடைப்பைக் குறைக்கிறது. தினசரி சோயா உட்கொள்வதன் மூலம் பல்வேறு வகையான புற்று நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

முக்கியமாக நாள்பட்ட பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்துவதில் சோயா பெரும் பங்காற்றுகிறது. சோயா உணவு மாதவிடாய் நின்ற பின் உடலில் ஏற்படும் சங்கடங் களைக் குறைத்து, எலும்புகளின் சீரழிவைத் தடுக்கிறது. சோயா உடல் முதிர்ச்சியைத் தாமதப்படுத்துகிறது. இரும்புச்சத்தும், கால்சியமும் நிறைந்துள்ளதால், இவ்வுணவு கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஏற்றது.

அனைத்துப் பருப்புகளிலும் உள்ள புரதச் சத்தைவிட மும்மடங்கு புரதச்சத்து சோயா வடகத்திலுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கும் இது மிக அவசியமான
ஊட்டச்சத்து உணவு.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
நோய்களை தடுக்க சோயா "பெஸ்ட்'

நல்ல உடல் ஆரோக்கியம் தரும் உணவு வகைகளை, ஆராய்ந்த விஞ்ஞானிகளில் பலரின் பார்வை சோயா புரோட்டீன் மீதே உள்ளது. அனைத்து தரப்பினரும் சோயாவை உண்ணலாம்.

நிறைந்த ஊட்டச்சத்து: சோயா பீன்சில், அதிக அளவில் புரோட்டீன், மிதமான அளவில் கொழுப்பு, நார்ச்சத்து, பி வைட்டமின்கள், போலிக் அமிலம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்துகள் நிறைந்துள்ளன.

சோயா பால் தோற்றத்திலும், குணாதிசயத்திலும், பண்ணைப்பால் போலவே உள்ளது. பல்வேறு வயதில் உள்ளோருக்கும் தேவையான, ஒன்பது வகை அமினோ அமிலங்களைக் கொண்டுள்ள புரோட்டீனை வழங்கும், ஒரே தாவர உணவு சோயா மட்டுமே. பால் பானங்களை தவிர்க்க விரும்புவோருக்கு, மாற்று பானம் சோயா புரோட்டீன் பானம்தான்.

சோயா புரோட்டீன் பயன்கள்: இதய நோய்களுக்கு, பெரும்பாலும் ரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து சேருவதே, காரணமாக உள்ளது.

சோயா புரோட்டீனில், கொழுப்பு இல்லாததால், இந்த ஆபத்து பெருமளவு குறைக்கப்படுகிறது. சோயா புரோட்டீன் எலும்பு தேய்வதை தாமதப்படுத்துகிறது.
சோயா புரோட்டீனை தொடர்ந்து சாப்பிடுவதால், ஹார்மோன் குறைபாடுகளால், இறுதி மாதவிடாய் காலங்களில், மகளிருக்கு ஏற்படும் அரிப்பு, இரவில் வியர்ப்பது போன்ற, துன்பங்கள் குறையும்.

சோயா புரோட்டீனை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம், ஹார்மோன் குறைபாடுகளால் உருவாகும். சில வகை புற்று நோய்களையும் தடுக்க முடியும். ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பியின் நலனுக்கும் இது உகந்ததாகும்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவசியமுள்ளோருக்கும், எடையில் கவனம் செலுத்த தேவையுள்ளோருக்கும், "சோய்விட்டா டயபட்டிக்' சிறந்த ஒன்றாகும்.
 
Last edited:

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.