மாவிலையைப் பற்றி கட்டாயம் அறிந்து கொள்ள

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#1
மாவிலையைப் பற்றி கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டியவை

இந்தியாவில் இந்துக்களின் எல்லா விசேஷங்களிலும் துளசி , மாவிலை இல்லாமல் இருக்காது. விசேஷங்களுக்கு பயன்படுத்துகிறோம் என்பதைத் தவிர வேறு என்ன மாவிலையைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்கள். இல்லையென்றால் அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மாவிலையில் ஃபீனால், மற்றும் ஃப்ளேவினாய்டு அதிகம் உள்ளது. குறிப்பாக மாவிலை கொழுந்து அதிக சத்துக்களை கொண்டுள்ளது. ஆயுர்வேதத்தில் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.


சர்க்கரை வியாதி:
அடர் சிவப்பு கலந்த மாவிலை துளிர்கள் அற்புத குணங்களை கொண்டுள்ளது. அவைகள் டேனின் எனப்படும் ஆந்தோ சயனிடின் என்ற பொருளை கொண்டுள்ளது. இந்த நிறமி சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும். மாவிலைகளை காயவைத்து பொடி செய்து அதனை தேநீர் செய்து குடித்தாலும் சர்க்கரைவியாதி கட்டுக்குள் வரும்.

ரத்தக் கொதிப்பு :
ரத்தக் கொதிப்பினை குறைக்கச் செய்யும் வலிமை மாவிலைகளுக்கு உண்டு. மாவிலையை காய வைத்து பொடி செய்து ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் மாவிலைப் பொடியை கலந்து கொதிக்க விடவும். நன்றாக அதன் நிறம் நீரில் உள்ளிறங்கியதும், வடிகட்டுங்கள். இந்த மாவிலை தேநீரைக் தொடர்ந்து ஒரு வாரம் குடித்தால், உங்கள் ரத்தக் கொதிப்பு குறைந்திருப்பதை பரிசோதித்து கண்டுகொள்ளலாம்.


வயிற்றுப் போக்கு :
கடுமையான வயிற்றுப் போக்கு இருந்தால் உடலில் நீரிழப்பு ஏற்படும். இது மிகவும் அபாயகரமானது. வயிற்றுப் போக்கை கட்டுக்குள் வைத்திட மாவிலை உதவி செய்கிறது. மாவிலைப் பொடியை நீரில் நீரில் கலந்து தினமும் இருவேளை குடித்தால், நிலமை சீராகும்.


பசியின்மை :
மாவிலையில் விட்டமின் ஏ, பி மற்றும் சி ஆகிய சத்துக்கள் உள்ளன. மற்றும் ஜீரணத்தை தூண்டும் பெப்பைன் என்ற என்சைமும் உள்ளது. இவை ஜீரண சக்தியை அதிகரிக்கும். தேவையான ஊட்டத்தை அளிக்கும். பசியை ஏற்படுத்தும். தினமும் மாவிலைக் கொழுந்து சாப்பிட்டு வர, பசி அதிகரிக்கும்.


மருக்கள் மறைய :
பெரிய மாவிலைகளை அரைத்து, மருக்கள் இருக்கும் இடத்தில் பூசினால் மருக்கள் விரைவில் உதிர்ந்துவிடும். காயங்களுக்கும் மருந்தாக இதனை போட்டால், ரத்தம் வருவது நின்று, காயம் எளிதில் ஆறும்.

மனத் தளர்ச்சி, பதட்டம் :
மாவிலைகள் ஒரு அமைதியான நிலையை உடலில் உருவாக்கும். நரம்புகளில் ஏற்படும் இறுக்கத்தை தளர்த்தி, மனதிற்கு நிதானத்தை தரும் சூழலைக் கொண்டு தரும்.

சிறு நீரக மற்றும் பித்தப்பை கற்கள் கரைய :
மாவிலைகள் சிறுநீரகத்தில் மற்றும் பித்தப்பையில் ஏற்படும் கற்களை கரைக்கச் செய்யும். தினமும் மாவிலைப் பொடியை ஒரு கிளாஸ் நீரில் கலந்து குடித்தால், விரைவில் பிந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
 

Attachments

Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.