மிடுக்காக தோன்ற வேண்டுமா?

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
சிறிது குண்டாக இருக்கும் பெண்கள், பிளைன் கலர் புடவைகள் கட்டி, சிறு சிறு பூப்போட்ட பிளவுஸ் அல்லது பார்டர் வைத்த பிளவுஸ் தைத்து போட்டால், மிக அழகாக இருக்கும். பெரிய, பெரிய பூக்கள் போட்ட புடவைகள் கட்டுவதை தவிர்த்து விடுங்கள். சிலர் காட்டன் புடவையை விறைப்பாக கட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என நினைப்பர். தினமும் அயர்ன் செய்து கட்ட முடியாத பொருளாதார சூழ்நிலை. கவலையே வேண்டாம்.[/FONT]
உங்கள் காட்டன் புடவையை லேசாக கஞ்சி (நீரில் கஞ்சியை கலக்கவும்) போட்டு, காயப் போடும் போது, எல்லா பக்கங்களிலும் சுருக்கம் இல்லாமல், நீவி விட்டு, காயப் போட்டு விடுங்கள். புடவை காய்ந்ததும் நன்றாக மடித்து, படுக்கும் மெத்தையின் கீழ் அல்லது தலையணையின் கீழ் வைத்து படுத்துக் கொள்ளுங்கள். காலையில் அயர்ன் செய்த அளவுக்கு இல்லாவிட்டாலும், அயர்ன் செய்தது போல் நன்றாக படிந்து இருக்கும். கஞ்சி போடும் போது, கஞ்சியை பெரிய வடிக்கட்டியிலோ அல்லது துணியிலோ வடிகட்டிவிட்டு, பின்பு குறைவான கஞ்சியில் புடவையை முக்கி எடுங்கள். இடுப்பில் பாவாடையை இறுக்க வேண்டாம் உள் பாவாடை இறுக்கமாக கட்டினால், கறுப்பாக இடுப்பைச் சுற்றி ஒரு அடையாளம் உண்டாகும். இதனால், சற்று லூசாக பாவாடைகளை கட்டிக் கொள்ளுங்கள். புட வை அவிழ்ந்து விடும் என்று பயந்தால், சேப்டி பின் போட்டுக் கொள்ளுங்கள்.[/FONT]
தையல் காரரிடம் சொல்லுங்கள்... சிலருக்கு பிளவுசை மீறி, தோள்பட்டையில் பிரா பட்டை வெளியில் தெரியும். இதைத் தவிர்க்க, பிளவுசில், பிரா லூப் வைத்துத் தைத்துக் கொள்ளலாம். பிரா ஸ்டிராப்பை, லூப் இடையே வைத்து, பட்டன் போட்டு விட்டால், ஸ்டிராப் வெளியே வராது.

புடவைக்கு பால்ஸ் அவசியம்!: சில பெண்களுக்கு காட்டன், கோட்டா புடவைகள் கட்ட நிரம்ப ஆசை. ஆனால், அவற்றில் சாரி பால்ஸ் வைத்து தைக்க சிலர் விரும்புவதில்லை. இதனால், நடக்கும் போது புடவை முழ ங்கால் அளவுக்கு தூக்கிக் கொள்கிறது. எனவே, இம்மாதிரி புடவை கட்ட விருப்பமுள்ள பெண்கள், புடவை வாங்கியவுடன் உடனே சாரி பால்ஸ் வைத்து, தைத்து விடுங்கள். உள் பாவாடை கட்டும� � போது, பாவாடையின் விளிம்பு பாதத்தில் உள்ள முட்டியைத் தொடும் அளவுள்ளதாக பார்த்து வாங் குங்கள்.
சிலர், முழங்கால் அளவுள்ள பாவாடைகளை கட்டி, அதன் மேல் மெலிதான புடவை கட்டும் போது, பார்க்க நன்றாக இருக்காது. பிளைன் புடவையில் வெகு ஜோர் சிறிது குண்டாக இருக்கும் பெண்கள், பிளைன் கலர் புடவைகள் கட்டி, சிறு சிறு பூப்போட்ட பிளவுஸ் அல்லது பார்டர் வைத்த பிளவுஸ் தைத்து போட்டால், மிக அழகாக இருக்கும். பெரிய, பெரிய பூக்கள் போட்ட புடவைகள் கட்டுவதை தவிர்த்து விடுங்கள். பெரிய பூக்கள� � போட்ட புடவைகளை கட்ட நேர்ந்தால், பிளைன் பிளவுசுகளையே இம்மாதிரி புடவைகளுக்கு தேர்ந்தெடுங்கள். பெரிய பூப்போட்ட சேலை, அதே போல் பிளவுஸ், நிச்சயம் பூச்சாண்டி வேஷம் போட்ட மாதிரிதான் இருக்கும்.

-senthilvayal
[/FONT]
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#2
hi guna sir,
useful info... aana indha threada unga kitta irundhu edirpaarkala....
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.