முகத்தை ஜொலிக்க வைக்கும் மஞ்சள் நீராவி...!!!

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,959
Location
Atlanta, U.S
#1மஞ்சளை அரைத்துப்பூசினால் தான் அழகு கிடைக்கும் என்றில்லை.

மஞ்சள் கலந்த நீராவி கூட அழகைக் கூட்டும், தெரியுமா!!!மூன்று கப் தண்ணீரை கொதிக்க வையுங்கள். பசும் மஞ்சள் கிழங்கு (அல்லது கஸ்தூரி மஞ்சள்) ஒன்றை அரைத்து அதன் சாறை எடுத்து, கொதி நீரோடு கலந்து ஆவி பிடியுங்கள்.
அடுத்து ஒரு கைப்பிடி அளவு துளசியைப் போட்டு ஆவி பிடிக்க வேண்டும்.

பிறகு 3 எலுமிச்சை இலை அல்லது அரை மூடி எலுமிச்சை சாறு சேர்த்து ஆவி பிடியுங்கள்.இத்தனையும் ஒன்றன் பின் ஒன்றாக செய்து முடித்ததும், கடைசியில் ஐஸ் கட்டியை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தேயுங்கள். (சருமத் துவாரங்கள் விரிவடையாமல் இருக்க ஐஸ் ஒத்தடம் அவசியம்) பின்னர், ஏதேனும் ஒரு ஃபேஸ் பேக்கை பூசி முகத்தை அலசுங்கள்.அப்புறம் பாருங்கள்... `நானே நானா... மாறினேனா..!' என்று உங்கள் விழிகள் விரியும்.
அந்தளவுக்கு துடைத்து வைத்த குத்து விளக்காக உங்கள் முகம் ஜொலிக்கும்.சீசனில் தான் பசும் மஞ்சள் கிடைக்கும். இதனை காய வைத்தால், அது கஸ்தூரி மஞ்சள், பசும் மஞ்சள் கிடைக்காத சீசனில், மாற்றாக கஸ்தூரி மஞ்சளைப் பயன்படுத்தலாம்.
கஸ்தூரி மஞ்சள் வகை மஞ்சள் தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.
துளசி நாள்பட்ட சொறி , படை சிரங்குகள் கூட மறைந்துவிடும்.
முகப்பரு,கரும்புள்ளி நீங்க,சிவப்பு அழகு பெற :

தேவையான பொருட்கள்:-செய்முறை :

1 - முல்தானி மட்டி பொடி - 200,கிராம்
2 - கஸ்தூரி மஞ்சள் பொடி - 50, கிராம்
3 - பூலாங்கிழங்கு பொடி - 50, கிராம்
4 -கோரைக் கிழங்கு பொடி - 50, கிராம்
5 -நன்னாரி வேர் பொடி -50, கிராம்,


இவைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றன வாங்கி ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும்.இதனை இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து பால் சிறிது விட்டுக் குழப்பி முகத்தை நீரில் கழுவித் துடைத்து விட்டு முகத்திலும் கழுத்துப் பகுதிகளிலும் பூசி விட்டு அமர்ந்து அரை மணிநேரம் கழித்து குளிர்ந்தநீரில் கழுவி விடவும் .இதே போல் வாரம் இரண்டு முறை செய்து வர முகப்பரு ,கரும்புள்ளி, இவைகள் நீங்கும் மேலும் முகத்தின் தோல் பகுதியில் உள்ள இறந்த செல்
களை அகற்றும்,முகம் மென்மையாகும்,சிவப்பு அழகு கிடைக்கும்.
முகத்தில் அம்மை வடு ,தழும்பு நீங்க :


1 -- கருவேப்பிலை - ஒரு கை பிடி
2 - கசகசா - ஒரு டீ ஸ்பூன்
3 - கஸ்தூரி மஞ்சள் - சிறிய துண்டு

இதனை அரைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம்
கழித்து குளித்து வர அம்மை தழும்பு மறைந்துவிடும்.

Moderator's Note:This Article has been published in Penmai eMagazine January 2016. You Can download & Read the magazines HERE.

 
Last edited by a moderator:

ilakkikarthi

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 27, 2014
Messages
882
Likes
2,180
Location
delhi
#3
Re: முகத்தை ஜொலிக்க வைக்கும் மஞ்சள் நீராவி...!

very usefull info thenu sis..............
 

suryasindhuja

Friends's of Penmai
Joined
Apr 2, 2014
Messages
206
Likes
201
Location
salem
#4
Re: முகத்தை ஜொலிக்க வைக்கும் மஞ்சள் நீராவி...!

Thx 4 sharing...:thumbsup
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,959
Location
Atlanta, U.S

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,544
Likes
40,141
Location
france
#6
Re: முகத்தை ஜொலிக்க வைக்கும் மஞ்சள் நீராவி...!

அருமையா அழகு குறிப்பு ரேணு... ட்ரை பண்ணுறேன்... சரி ஏற்கினவே தங்கம் மாதிரி ஜோலிகிறேனே...மேலும் அழகுக்கு அழகு சேர்த்தா தப்பா போய்டாது...


பின் குறிப்பு :' பல்லை நறநறன்னு கடிச்சி பாதிப்பு வந்தா நான் செலவை ஏத்துக்க மாட்டேன் சொல்லிட்டேன்...
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,959
Location
Atlanta, U.S
#7
Re: முகத்தை ஜொலிக்க வைக்கும் மஞ்சள் நீராவி...!

அருமையா அழகு குறிப்பு ரேணு... ட்ரை பண்ணுறேன்... சரி ஏற்கினவே தங்கம் மாதிரி ஜோலிகிறேனே...மேலும் அழகுக்கு அழகு சேர்த்தா தப்பா போய்டாது...


பின் குறிப்பு :' பல்லை நறநறன்னு கடிச்சி பாதிப்பு வந்தா நான் செலவை ஏத்துக்க மாட்டேன் சொல்லிட்டேன்...ஹாஹா..... Rolling on the floor பார்த்து இருந்துக்கோ Glo...
என்னடா இது..., கடையில இருக்க வேண்டிய தங்கம், இங்க இருக்குதேன்னு... யாராவது வந்து வெட்டி எடுத்து, நகைக் கடையில வச்சிட போறாங்க.... :pray1::pray1:

நறநறன்னு கடிக்கிறதா...?? வேண்டாம் விட்டுடு.... :tape:
 

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,544
Likes
40,141
Location
france
#8
Re: முகத்தை ஜொலிக்க வைக்கும் மஞ்சள் நீராவி...!

ஹாஹா..... Rolling on the floor பார்த்து இருந்துக்கோ Glo...
என்னடா இது..., கடையில இருக்க வேண்டிய தங்கம், இங்க இருக்குதேன்னு... யாராவது வந்து வெட்டி எடுத்து, நகைக் கடையில வச்சிட போறாங்க.... :pray1::pray1:

நறநறன்னு கடிக்கிறதா...?? வேண்டாம் விட்டுடு.... :tape:

ரொம்ப உருளாதே ஒடுக்கு விழுந்துட போகுது.. உண்மைய சொன்னா இப்படி தான் சிரிப்பிங்க... உண்மை சொன்ன ஏசுவையே கல்லால் அடிச்சா உலகம் தானே

(நீ முடிய பிச்சுகிறது ஸ்க்ரீன் ஷாட்ட கண்ணுல தெரியுது)
 

sharamsn

Commander's of Penmai
Joined
Aug 4, 2015
Messages
1,344
Likes
2,124
Location
puducherry
#9
Re: முகத்தை ஜொலிக்க வைக்கும் மஞ்சள் நீராவி...!

nice sharng.thnx a lot...
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.