முகப் பரு ஓடிப் போக

chan

Well-Known Member
#1
முகப் பரு ஓடிப் போகவாழைத் தண்டைப் பாதியாப் பிளந்து, முகப் பரு இருக்கிற இடத்துல தினமும் இரண்டு நிமிஷம் தேய்ச்சுட்டு வந்தா, பரு ஓடிப் போயிடுங்கிறதச் சொன்னாக் கேட்கணும்ல.

முகத்துல சுருக்கம் விழுதுன்னா, நடுத்தர வயசுக்காரப் பொம்பளைங்க தினமும் வாயை 'உப்’புன்னு ஊதி வைச்சுக்கிட்டுக் கொஞ்ச நேரம் கழிச்சு, வாயைத் திறந்து காற்றை வெளியேவிடணும். இந்தப் பயிற்சி செய்றதுக்குக் காசா, பணமா என்ன; 'வீட்டு வாசல்ல காவேரி, முழுக மாட்டாளாம் மூதேவி’ன்னு, நம்மகிட்ட இயற்கையாக் கிடைக்கிறத வைச்சே நாம நல்லா அழகாத் தெம்பா, ஆரோக்கியமா நம்ம தோலைப் பாதுகாத்து பொக்கிஷமா வைச்சுக்கலாம்'.- மண் வாசம் தொடரிலிருந்து 
Last edited: