முகம் ஜொலிக்க ரோஜா பன்னீர்

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,204
Likes
20,717
Location
Germany
#1
ரோஜாவிலிருந்து தயாரிக்கப்படும் பன்னீர், ஒரு அபாரமான அழகுக் கலை நிபுணர். இதை வீட்டிலேயே தயாரிக்கும் விதத்தைப் பார்க்கலாம்.


இதற்கு பிங்க் நிற ரோஜாக்களைத்தான் பயன்படுத்தவேண்டும். வருடங்கள் கடந்தாலும் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும்

இந்த பன்னீர். 50 ரோஜாக்களை இதழ்களாக உதிர்த்துத் தனியாக வைத்துக் கொள்ளவும். 2 லிட்டர் தண்ணீரைக் காய்ச்சி, அதில் ரோஜா இதழ்களைப் போட்டு மிதமான தீயில் கொதிக்க விடுங்கள். தண்ணீர் அரை லிட்டராக சுண்டியதும் ஆற வைத்து, வடிகட்டி, பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். இதுதான் பன்னீர். தேவைப்படும்போது ஐஸ் டிரேயில் நிரப்பிப் பயன்படுத்தலாம்.

ர்ப்பிணிப் பெண்களுக்கு

அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சளுடன் ஒரு டீஸ்பூன் வெள்ளரி விதை பவுடர், கால் டீஸ்பூன் பால், இவை கலக்கும் அளவுக்கு ரோஜா பன்னீரை சேர்த்து, குளிப்பதற்கு முன்பு வயிற்றுப் பகுதியில் 5 நிமிடம் தடவி குளியுங்கள். இதனால் வயிற்றுப் பகுதி வரிகள் மறைந்து விடும். டெலிவரி ஆவதற்கு 2 மாதங்களுக்கு முன்பிருந்தே இந்த பேஸ்ட்டைத் தடவி வரலாம். இப்படிச் செய்தால் வரிகள் விழாது.

பிறந்த குழந்தைகள் சில நேரம் இரவில் தூங்கவே தூங்காது. இதற்கு, அரை டீஸ்பூன் கடலை மாவுடன், பயத்தமாவு, பூலாங்கிழங்கு பவுடர் தலா அரை டீஸ்பூன் எடுத்து இவை கலக்கும் அளவுக்கு பன்னீரைச் சேருங்கள். இந்த பேஸ்ட்டை குழந்தைக்குத் தேய்த்துக் குளிப்பாட்டுங்கள். இந்த வாசனைக்கே குழந்தை நிம்மதியாக உறங்கும். சருமத்துக்கு நல்ல நிறத்தையும் கொடுக்கும் இந்த பன்னீர்க் கூட்டணி

அரை டீஸ்பூன் முல்தானிமெட்டி பவுடருடன் அரை டீஸ்பூன் சந்தன பவுடர் சேர்த்து, இவை கலக்கும் அளவுக்குப் பன்னீரை விட்டு முகத்தில் பூசி கழுவுங்கள். பிறகு 'மேக்கப்' போடுங்கள். முகத்துக்குப் புத்துணர்வைக் கொடுக்கும் இந்த பேக். அதோடு, நீங்கள் வீட்டுக்கு 'பேக்கப்' ஆகும்வரை உங்கள் 'மேக்கப்' கலையாமலும் இருக்கும்.

அரை டீஸ்பூன் வெள்ளரி விதை பவுடருடன், ஜாதிக்காய் பவுடர், சர்க்கரை, வெண்ணெய்.. இவை தலா கால் டீஸ்பூன் எடுத்து, இவை கலக்கும் அளவுக்குப் பன்னீரை விட்டு பேஸ்ட் ஆக்குங்கள். இந்த கிரீமை வாரம் ஒருமுறை முகத்தில் மேலும் கீழுமாகப் பூசி வந்தால் 'பளீரென' முகம் பிரகாசிக்கும். பருக்களும் மறைந்து விடும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.