முக்கியத்துவம் வாய்ந்த மும்மூர்த்தி இல&a

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
முக்கியத்துவம் வாய்ந்த மும்மூர்த்தி இலைகள்!

தென்னிந்திய சமையலில் 3 தாவரங்கள் சுவையுடன் நறுமணத்தையும் மருத்துவத் தீர்வையும் தந்து, இன்றியமையாத அங்கமாக விளங்குகின்றன. அவை கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினா ஆகிய மும்மூர்த்திகளே. மூன்றையுமே இலைகளாக நேரடியாக சமையலில் உபயோகிப்பதால், முடிந்த அளவுக்கு இயற்கை முறையில் வீட்டிலேயே வளர்ப்பது நல்லது. அதன் மூலம் பூச்சிக்கொல்லிகளின் தாக்கத்தை குறைத்துக்கொண்டு ஆண்டு முழுவதும் பயன் படுத்தலாம் என்கிற தோட்டக்கலை நிபுணர் பா.வின்சென்ட், உரிய வழியையும் காட்டுகிறார்.


கச்சிதமான கறிவேப்பிலை!

காலை உணவுக்கு முன் 5 - 10 கறிவேப்பிலை இலைகளை உண்ண நன்கு பசியெடுக்கும்.

கறிவேப்பிலையின்றி கறி இல்லையெனக் கூறும் அளவுக்கு நம் சமையலில் இடம் பிடித்துள்ளது. கறிவேப்பிலையின் மருத்துவ மகிமை அறியாதவர்களோ பதார்த்தத்தி லிருந்து அதை எடுத்துவிட்டு உண்பார்கள். இது மிகச் சிறந்த மருத்துவ குணமிக்க மணமூட்டி. ‘வெண்புள்ளி’ குறைபாட்டுக்கு இது மாமருந்து. கறிவேப்பிலையுடன் கீழாநெல்லி சேர்த்து, காலை உணவுக்கு அரை மணி நேரம் முன் உண்டு வர வெண்புள்ளிகள் மறைந்து இயற்கையான சரும நிறம் கிடைக்கும். இதற்குப் பத்தியம் உண்டு. வெள்ளை சர்க்கரையை கண்டிப்பாக சேர்க்கக் கூடாது.

காலை உணவுக்கு முன் 5 - 10 கறிவேப்பிலை இலைகளை உண்ண நன்கு பசியெடுக்கும். நீரிழிவின் தாக்கம் குறையும். பார்வை தெளிவு பெறும். நல்ல கருமையான கூந்தலை பராமரிக்கவும் வாய்நாற்றத்திலிருந்து விடுபடவும் உதவும். விலைவாசி உயர்வு காரணமாக, முன்பு இலவசமாக தந்த கறிவேப்பிலையை இன்று குறைந்தது 2 ரூபாய்க்கு விற்கிறார்கள். இது பல்லாண்டுப் பயிர். அதனால், ஒரு முறை வீட்டுத் தோட்டத்தில் 5 அல்லது 6 செடிகளை வைத்துப் பராமரித்தால், தினமும் 2 ரூபாய் சேமிப்பதோடு ஆரோக்கியத்தையும் பெறலாம்.

இதில் பல ரகங்கள் உள்ளன. ‘செங்காம்பு’ ரகம் நல்ல மணத்துடன் இருப்பதோடு பிரபலமாகவும் உள்ளது. நல்ல சூரிய ஒளி தேவை. வளர்ச்சி குன்றியிருக்கும் போது நன்கு புளித்த மோரை இதற்கு ஊற்றுவார்கள். அதனால் நன்கு வளரும். இது பாரம்பரியத் தொழில் நுட்பமே!

புகழ்மிக்க புதினா!

சிறந்த மணமூட்டியான புதினா, நல்ல ஜீரண சக்தியும் அளிக்கும். புதினாவில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் வேறுவிதமான பயன்பாட்டை தருகிறது. நாம் இங்கு பார்க்க விருப்பது சமையலுக்கான ரகம். சிறந்த மணமூட்டி. நல்ல ஜீரண சக்தி அளிக்கும். வாய்நாற்றம் போக்கும். காய்ச்சலின் போது உணவு பிடிக்காமல் போகுமே... அப்போது புதினா துவையலுடன் உண்ண நன்றாக இருக்கும்.

இதனை மிக எளிதாக உற்பத்தி செய்யலாம். கடையில் வாங்கி வரும் புதினாவின் இலைகளை எடுத்துக்கொண்டு தண்டுப் பகுதியை மண்ணில் ஊன்ற அடுத்த 10 - 15 நாட்களில் புதிய தளிர்கள் உருவாகும். நன்கு வளர்ந்த பின் நுனிப்பகுதியை உற்பத்திக்குப் பயன்படுத்தலாம். தரையில் படரும் தாவரம் என்பதால், ஆழம் குறைந்த - ஆனால், நன்கு அகலமான தொட்டிகள் தேவை. வருடத்தின் எல்லா நாட்களிலும் பறிக்கலாம்.

கொண்டாட்டமான கொத்தமல்லி!

கொத்தமல்லித் தழையை ‘சூப்’ செய்து குடிக்க சிறுநீரகம் சார்ந்த பிரச்னை குறையும்.

தழையாகவும் விதையாகவும் (தனியா) நம் சமையலில் கோலோச்சும் நறுமணப் பயிர்... சில மாதங்களுக்கு முன் கிலோ 140 ரூபாய் வரை விற்பனையானது.
காய்ச்சலின் போது மல்லி விதையை சுடு நீரில் கொதிக்க வைத்து அருந்துவார்கள். தழையை ‘சூப்’ செய்து குடிக்க சிறுநீரகம் சார்ந்த பிரச்னை குறையும்.
வீட்டிலேயே வளர்க்கலாம். விதையை இரண்டாக உடைத்து விதைக்க முளைப்புத் திறன் அதிகமிருக்கும். விதைத்த 30 - 40 நாட்களில் தழையை அறுவடை செய்யலாம்.

மெக்சிகன் கொத்தமல்லி / தாய்லாந்து கொத்தமல்லி (Culantro)

இலையமைப்பு, வளர்ப்பியல், வளரும் காலம் ஆகியவற்றில் முற்றிலுமாக வேறுபட்டு - ஆனால், மணம், குணம், பயன்பாட்டில் சில தாவரங்கள் ஒன்றுபட்டிருப்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். நாம் உபயோகிக்கும் கொத்தமல்லி இலையும் (Cilantro), மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் மத்திய அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட மெக்சிகன் கொத்த மல்லி / தாய்லாந்து கொத்தமல்லியும் (Culantro) இதற்குச் சிறந்த உதாரணம்.

நமது கொத்தமல்லியைக் காட்டிலும் 2 - 3 மடங்கு மணம் அதிகம். இலைகள் தடிமனாக நீண்டிருக்கும். இலைகளின் ஓரம் ரம்பம் போன்று இருப்பதாலும் பூக்கும் காலத்தில் பூவைச் சுற்றி இலைகள் முட்கள் போன்று இருப்பதாலும் பாதுகாப்பது எளிது. 6 மாதங்களுக்குப் பிறகு இலைகளைப் பறிக்கலாம். பூத்து முடிந்த பின், சில மாதங்களில் விதைகள் சிதறி, இளஞ்செடிகள் தானாகவே தாய் செடியைச் சுற்றி வளரும். தாய் செடியிலிருந்து தோன்றும் இளஞ்செடிகளையும் பிரித்து வளர்க்கலாம். நேரடியான சூரிய ஒளியில் இலைகள் சிறுத்துக் காணப்படும். நிழல் பகுதியில் இலைகள் நல்ல வளர்ச்சியுடன் அதிக வாசனையுடன் இருக்கும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.