முக்கியமான சில கை வைத்தியங்கள்!!!

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
[h=1]
ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான சில கை வைத்தியங்கள்!!!
[/h]தற்போது நவீனமயமாகிவிட்ட இக்காலத்தில், நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியின் அளவு குறைந்து, நோய்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதனால் உடலில் பல பிரச்சனைகளை விரைவில் தொற்றிக் கொள்கின்றன. அப்படி உடலில் ஏதேனும் பிரச்சனை வந்தால், நாம் உடனே பெரிய டாக்டர் போன்று நமக்கு தெரிந்த மாத்திரையை வாங்கிப் போட்டு சரிசெய்து கொள்வோம். அது ஏதேனும் ஒன்று இரண்டிற்கு என்றால் பரவாயில்லை. எதற்கு எடுத்தாலும் மாத்திரை என்று மருத்துவர் பரிந்துரைக்காத மாத்திரைகளையே வாங்கி சாப்பிட்டு வந்தால், ஒரு கட்டத்தில் தீவிரமான பிரச்சனைக்கு உள்ளாகக்கூடும். ஆகவே உடலில்
சிறு பிரச்சனை வந்தால், உடனே மாத்திரைகளைப் போடாமல், ஒருசில கை வைத்தியங்களை தெரிந்து கொண்டு, அவற்றைப் பின்பற்றினால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாமல் தடுக்கலாம். இங்கு அப்படி நமக்கு ஏற்படும் பொதுவான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கான சில கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

*மாதவிடாய் காலத்தில் பெண்கள் கடுமையான வயிற்று வலிக்கு உள்ளாவார்கள். அப்படி வயிற்று வலி வந்தால், அப்போது 2-3 எலுமிச்சையை பிழிந்து, குளிர்ந்த நீரில் கலந்து, குடிக்க வேண்டும். அதிலும் இப்படி தினமும் குடித்து வந்தால், மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

*உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருகிறதா? அப்படியெனில் ஆப்பிளின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கி, அதில் சிறிது உப்பைத் தூவி, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

*வாய்வுத் தொல்லையா? ஒரு டம்ளர் தண்ணீரில் 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து குடியுங்கள். வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

*தொண்டைப் புண்ணிற்கு 2-3 துளசி இலையை நீரில் போட்டு குறைவான தீயில் கொதிக்க விட்டு, பின் அதனை லேசாக குளிர வைத்து, பின் வெதுவெதுப்பான நிலையில் வாயை கொப்பளிக்க வேண்டும்.

*வாய் புண் இருந்தால், நன்கு கனிந்த வாழைப்பழத்தை தேன் தொட்டு உட்கொள்ள வேண்டும் அல்லது அவற்றை பேஸ்ட் செய்து பாதிப்பட்ட இடத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.

*சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள், 1/2 கப் சுடுநீரில், ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 1 சிட்டிகை மிளகுத் தூள் சேர்த்து கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வந்தால், சைனஸ் பிரச்சனை நீங்கும்.

*உயர் இரத்த அழுத்தம் இருந்தால், பாலில் நெல்லிக்காய் சேர்த்து குடித்தால், இரத்த அழுத்தம் குறையும். அதிலும் இந்த முறையை அதிகாலையில் எழுந்ததும் செய்ய வேண்டும்.

*1 டேபிள் ஸ்பூன் தேனில், 1/2 டேபிள் ஸ்பூன் பட்டை பொடி சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் உட்கொண்டு வந்தால், ஆஸ்துமா குணமாகும்.

*பொடுகுத் தொல்லையா? சூடத்தை தேங்காய் எண்ணெயில் போட்டு ஊற வைத்து, பின் அதனை தினமும் இரவில் படுக்கும் முன், ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தேய்த்து ஊற வைக்க வேண்டும். இப்படி செய்து வந்தால், விரைவில் பொடுகுத் தொல்லை நீங்கும்.

*உலர் நெல்லிக்காயை தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்க விட்டு, பின் அந்த எண்ணெயைக் கொண்டு அன்றாடம் தலைக்கு தடவி வந்தால், இளநரை மறையும்.

*கருவளையம் இருக்கிறதா? ஆரஞ்சுப் பழத்தின் சாற்றில் கிளிசரின் சேர்த்து கலந்து, அன்றாடம் இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவினால், கருவளையம் மறையும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.