முக அமைப்பினை மாற்றும் வில் புருவங்கள்

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#1
வில்லென வளைந்த புருவம்’ என்று கவிஞர்கள் பெண்களின் புருவத்தை வில்லுக்கு ஒப்பிடுவார்கள். புருவமானது பெண்களின் முகத்தையே மாற்றி அழகாக்கும் தன்மை கொண்டது. சாதாரணமான இருக்கும் பெண்கள் கூட பியூட்டி பார்லர் சென்று புருவத்தை திருத்திய உடன் 50 சதவிகிதம் அழகாகி விடுகிறார். அந்த அளவிற்கு முகத்தின் வடிவமைப்பையே மாற்றும் தன்மை புருவத்திற்கு உண்டு.


கண்களை பெரிதாக்கும்


சில பெண்கள் பார்க்க அழகாக இருப்பார்கள் ஆனால் அவர்களது கண்களைப் பார்த்தால் இடுங்கிய மாதிரி இருக்கும். இப்படி இடுங்கிய மாதிரி இருப்பதற்கு புருவங்கள் திக்காக இருப்பதும் ஒரு காரணம் தான். புருவங்கள் "திக்'காக இருப்பவர்களுக்கு கண்கள் சிறியதாகத் தெரியுமே தவிர உண்மையில் அவர்களின் கண்கள் சரியான அளவில்தான் இருக்கும். எனவே புருவத்தை மெல்லியதாக திரடிங் செய்து கொண்டால் கண்களின் அழகு எடுப்பாகத் தெரியும். அதோடு லைட் கலரில் ஐ ஷடோவும் மஸ்காராவும் பயன்படுத்தவும். கண்கள் இன்னும் அழகாகத் தெரியும்.

அழகு புருவங்கள்

சிலருக்கு புருவங்கள் இருப்பதே தெரியாது. அத்தோடு புருவ முடிகள் மிகவும் குறைவாக இருக்கும். இவர்கள் புருவத்தை திரடிங் செய்தால் புருவங்கள் அழகாகத் தெரியும் ஆனால் புருவத்தை மிகவும் மெல்லியதாக ஷேப் செய்யாமல் சற்று "திக்'காக வைத்துக் கொள்ளலாம். புருவத்தை திரடிங் செய்து கொள்ளப் போகும் போது "ஐபுரோ' பென்சிலால் வரைந்து கொண்டு போவது நல்லது. ஏனென்றால் நாம் விரும்பியபடி புருவத்தை ஷேப் செய்து கொள்ளலாம்.

பெரிய நெற்றியா கவலை வேண்டாம்

நெற்றி பெரியதாக இருக்கிறதே. நெற்றியின் அளவைக் குறைத்து காட்டுவதற்கு என்ன செய்யலாம் என்று சில பெண்கள் எப்போது கவலையுடன் இருப்பார்கள். இவர்கள் தங்கள் நெற்றியின் அளவைக் குறைத்துக் காட்டுவதற்கு புருவத்தை அதற்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ள முடியும். தவிர புருவத்தை ஷேப் செய்வதால் மட்டும் நெற்றியை சிறியதாக காட்ட முடியாது.

நெற்றியை மறைக்கும் படி முடியை முன்புறம் விட்டு ஹேர் ஸ்டைல் பண்ணலாம் அல்லது முடியை முன்புறமாக விட்டு பிரிஞ்ச் கட் செய்து கொள்ளலாம். பின்னர் புருவத்தை மேலே தூக்கலாக தெரியும்படி ஷேப் செய்து கொண்டால் நெற்றியின் அகலம் தெரியாது. பார்க்கவும் மிகவும் அழகாகத் தெரியும்.

நிரந்தர புருவம்

சிலருக்கு புருவத்தில் முடியே இருக்காது. புருவ முடி உதிர்ந்து விட்டதே அல்லது எனக்கு புருவத்தில் முடி இல்லையே எனக் கவலையே பட வேண்டாம். விளக்கெண்ணெயை லேசாகச் சூடு செய்து புருவத்தில் தடவி மசாஜ் செய்தால் முடிகள் நன்றாக வளரும். ஐபுரோ ஒயில் வாங்கி வந்து அதை புருவத்தில் தடவி மசாஜ் செய்தால் விரைவில் முடி முளைத்து புருவங்கள் அழகாகும்.

புருவமே இல்லாதவர்கள் நிரந்தரமாக புருவத்தை அமைத்துக் கொள்ள ஐபுரோ டாட்டூ முறையைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஐபுரோ டாட்டூ என்பது புருவங்கள் உள்ள இடத்தில் டாட்டூ பிக்மென்டேஷனை நிரப்பி நிரந்தரமாக புருவங்களை அமைக்கும் மேக்கப் பாகும். இதனால் முகத்திற்கு அழகு கிடைப்பதுடன் உங்களுடைய மனக்குறையும் அகன்று விடும்.
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#4
hi nisha,
puruvam pathi niraya information solli asathi irukkeenga.... tatoo kooda irukkapa? gr8

Anitha.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.