முப்பது பிளஸ்சிலேயே மெனோபாஸ்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
வரும்...ஆனா, வராது.


மகளிர் மட்டும்

முப்பது பிளஸ்சிலேயே மெனோபாஸ் வருவதாக பயமுறுத்துகின்றன புள்ளிவிவரங்கள். உடல் வியர்ப்பது, படபடப்பு, முறையற்ற மாதவிலக்கு சுழற்சி என சில பொதுவான அறிகுறிகளை மெனோபாஸ் உடன் தொடர்புப்படுத்திப் பார்த்து அரைகுறை அறிவில் பயத்தில் உறைகிற பெண்கள் பலர். இவற்றை வைத்து தனக்கு மெனோபாஸ் வரும்... ஆனா, வராது எனக் குழம்புகிற அவர்களுக்கு மெனோபாஸ் சந்தேகங்களைத் தீர்த்து வைத்துத் தெளிவுப்படுத்துகிறார் மருத்துவர் நிவேதிதா.


மெனோபாஸ் என்பது...தொடர்ந்து 12 மாதங்களுக்கு. அதாவது, 1 வருடத்துக்கு மாதவிடாய் வராமல் இருப்பதையே மெனோபாஸ் என்கிறது மருத்துவத் துறை. முறையற்ற மாதவிலக்கு சுழற்சியில் தொடங்கி, மாதவிடாயேவராமல் நின்றுபோவதே மெனோபாஸ்.மெனோபாஸை எட்டும் சராசரி வயது...


சராசரியாக பெண்கள் 45 முதல் 55 வயதுக்குள் மெனோபாஸை எட்டுகிறார்கள். ஆனாலும் இது சிலருக்கு முன்பாகவோ, சிலருக்கு தாமதமாகவோ நிகழலாம். பொதுவாக அம்மாக்கள் மெனோபாஸை அடைந்த வயதிலேயே மகள்களுக்கும் அது நிகழும். பூப்படைந்த வயதுக்கும் மாதவிலக்கு முற்றுப்பெறும் வயதுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மெனோபாஸின் மிக சகஜமான ஒருஅறிகுறி...உடல் சூடாவது, பெண்ணுறுப்பில் அதீத வறட்சி மற்றும் உறவின் போது எரிச்சலும் வலியும், மனநிலை மாற்றங்கள் என இவை எல்லாமே ெமனோபாஸின் அறிகுறிகள்தான். ஆனால், எல்லாப் பெண்களுக்கும் எல்லா அறிகுறிகளும் இருக்கும் என்றில்லை.

சிலருக்கு இந்த அறிகுறிகள் மிதமாக இருக்கலாம்.சிலருக்கு தீவிரமாகவும் இருக்கலாம்.மெனோபாஸின் மூலம் அதிகமாகிறஒரு ரிஸ்க்...மெனோபாஸை எட்டியதும் ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவதால் இதயநோய்கள் வரும் அபாயங்கள் அதிகம். கூடவே எலும்புகளின் ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டு, எலும்புகள் ஸ்பான்ஜ் போல மாறும் ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னை ஏற்படவும் வாய்ப்புகள் கூடும்.

மெனோபாஸ் காலத்தை எட்டும் நெருக்கத்தில் இருப்பதைக் கண்டறிய டெஸ்ட்டுகள் உள்ளனவா?ஹார்மோன் டெஸ்ட்டோ, ரத்தப் பரிசோதனையோ, வேறு எதுவுமோ மெனோபாஸ் நெருங்கிவிட்டதை உறுதிப்படுத்தாது. இந்தப் பரிசோதனைகளின் மூலம் முறையற்ற மாதவிலக்குக்கான வேறு காரணங்களை வேண்டுமானால் தெரிந்து கொள்ளலாமே தவிர, மெனோபாஸை உறுதி செய்ய முடியாது.மெனோபாஸை நெருங்கும் பெண்களுக்கான சிகிச்சைகள்...

மெனோபாஸுக்கு சில வருடங்களுக்கு முன்பிருந்தே, மருத்துவர்கள் சில பெண்களுக்கு தேவையின் அடிப்படையில் கருத்தடை மாத்திரைகளைப் பரிந்துரைப்பார்கள். அது அவர்களது அதிகப்படியான, முறையற்ற மாதவிலக்கை சரி செய்ய உதவும். தேவையற்ற கர்ப்பத்தையும் தவிர்க்கும். மெனோபாஸின் நெருக்கத்தில் இருப்பவர்களுக்கு ஹார்மோன் தெரபியை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அது அவர்களது உடல் சூடாதல், பெண்ணுறுப்பு வறட்சி போன்றவற்றை சரிசெய்யும்.மெனோபாஸை தாமதப்படுத்தும்விஷயங்கள்...

அறுவை சிகிச்சையின் மூலம் சினைப்பைகளை அகற்றியவர்களுக்கு உடனடியாக மாதவிலக்கு நிற்கும். தவிர, புற்றுநோய் வந்து, அதற்கான ரேடியேஷன் மற்றும் கீமோதெரபி சிகிச்சைகளமேற்கொள்கிற பெண்களுக்கும்மாதவிடாய் முற்றுப்பெறலாம்.

மெனோபாஸுக்கு பிறகு கருத்தரிக்குமா?மெனோபாஸ் வந்ததும் கருப்பைகளின் வேலை நின்று போகிறது. மாதவிலக்கு சரியாக வந்து கொண்டிருக்கும் பெண்ணுக்கு சினைப்பைகள்தான் முதிர்ந்த முட்டைகளை கருத்தரிப்புக்கு ஏதுவாக வெளியிடுபவை. சினைப்பைகளின் வேலையே நின்று விடுவதால் மாதவிலக்கும் நிகழாது. கருத்தரிப்புக்கும் வாய்ப்பில்லை. ஹார்மோன் டெஸ்ட்டோ, ரத்தப் பரிசோதனையோ, வேறு எதுவுமோ மெனோபாஸ் நெருங்கிவிட்டதை உறுதிப்படுத்தாது.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.