மூட்டுகளில் உள்ள தசைநார்கள் கிழியாமல் இ&

honey rose

Ruler's of Penmai
Joined
Aug 27, 2013
Messages
10,216
Likes
12,697
Location
chennai
#1
மூட்டுகளில் உள்ள தசைநார்கள் கிழியாமல் இருக்க இந்த பானத்தை தினமும் குடிங்க...

உடலில் உள்ள எலும்பு மூட்டுக்களை பிணைத்திருக்கும் ஒன்று தான் தசைநார்கள். தசைநார்கள் நெகிழ்வுத்தன்மை கொண்டது. இது தசைகளுடன் இணைந்து எலும்புகளை இணைத்துப் பிடிக்கும். தசைநார்கள் இல்லாவிட்டால், எலும்புகள் இணைந்திருக்காது. நம் உடலில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கு ஏற்றவாறு ஒவ்வொரு வகையான தசைநார்கள் இருக்கின்றன.

இந்த தசைநார்கள் நமது கவனக்குறைவினால் கிழியக்கூடும். குறிப்பாக விபத்து ஏற்பட்டால், மிகவும் கடினமான வேலைகளை செய்தால் தசைநார்கள் கிழியும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஒருவருக்கு தசைநார்கள் கிழிந்தால், அதனால் நடக்கவோ, ஓடவோ, பளுவான பொருட்களைத் தூக்கவோ முடியாது. கடுமையான வலியை உணரக்கூடும்.

முக்கியமாக வயது அதிகரிக்கும் போது தசைநார்களின் ஆரோக்கியம் குறைய ஆரம்பிக்கும். எனவே வயது அதிகரிக்கும் போது, தசைநார்களின் வலிமையையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் உணவுப் பொருட்கள் அல்லது பானங்களை உட்கொள்ள வேண்டும்.

இங்கு தசைநார்களின் வலிமையை மேம்படுத்தும் ஓர் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தயாரித்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், தசைநார்கள் கிழிவதைத் தடுக்கலாம்.

இந்த
பானம் தயாரிக்கும் முறை:

* ஒரு டம்ளரில் நீர் மற்றும் 5 கிராம் பட்டைத் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அன்னாசி பழச்சாற்றினை சிறிது எடுத்துக் கொள்ளவும்.

* பின்பு ஒரு கப் ஓட்ஸ் மற்றும் 1 கப் ஆரஞ்சு ஜூஸை எடுத்துக் கொள்ளவும்.

* 20 கிராம் பாதாம் மற்றும் 20 கிராம் தேன் எடுத்துக் கொள்ளவும்.

* ஓட்ஸை பால் சேர்த்து வேக வைத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

* பின் ஆரஞ்சு ஜூஸ், தேன், பாதாம் மற்றும் பட்டை ஆகியவற்றை பிளண்டரில் போட்டு ஒருமுறை அடித்து, ஓட்ஸ் உடன் சேர்த்துக் கொள்ளவும்.

* பின்பு ஓட்ஸ் கலவையை பிளண்டரில் போட்டு, அத்துடன் அன்னாசி பழச்சாற்றினை சேர்த்து நன்கு அரைத்து, பின் பருகவும்

இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர் பருகி வந்தால், உடலினுள் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நன்கு உணரலாம். குறிப்பாக இந்த பானத்தைப் பருகும் போது, தசைநார்களுக்கு வலிமையளிக்கும் உடற்பயிற்சிகளையும் செய்து வந்தால், இன்னும் நல்லது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.