மூட்டு வலி அடிக்கடி வருதா? அப்ப இந்த உணவு&

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
மூட்டு வலி அடிக்கடி வருதா? அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...

உங்களுக்கு மூட்டு வலி அதிகமாக வருகிறதா? எந்த வேலையையும் சரியாக செய்ய முடியவில்லையா? குறிப்பாக இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லையா? அப்படியெனில் இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

உடல் அசைவுகளுக்கு மூட்டுகளின் இணைப்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். வயதாகும் போது மூட்டுகளில் உள்ள சவ்வுகள் தோய்வடையும். இதனால் சரியாக நடக்கவோ, சிறு பொருட்களை தூக்கவோ, ஏன் அசைய கூட முடியாது.

எனவே மூட்டுகளில் உள்ள இணைப்புத்திசுக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவுப் பொருட்களை அன்றாட உணவில் சேர்த்து வர வேண்டியது அவசியம்.

இங்கு மூட்டுகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தவறாமல் அவ்வப்போது சாப்பிட்டு வாருங்கள்.

சால்மன் மீன் 30 வயதிற்கு பின், மூட்டுகளில் உள்ள சவ்வுகள் கிழிய ஆரம்பித்து, அதனால் கடுமையான மூட்டு வலியை அவ்வப்போது சந்திக்கக்கூடும்.

எனவே நல்ல கொழுப்புக்கள் நிறைந்த, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகள் வளமாக உள்ள மீன்களான சால்மன், டூனா போன்றவற்றை வாரம் ஒருமுறை சாப்பிட வேண்டியது அவசியம். இதனால் மூட்டுகளில் உள்ள வீக்கம் மற்றும் வலி குறைந்து, மூட்டுகள் ஆரோக்கியமாக இருக்கும்.

பாதாம் பாதாம் மூட்டுகளின் வெளிப்புற சவ்வில் பாதிப்பு ஏதும் நேராமல் பாதுகாப்பு தரும். ஏனெனில் பாதாமில் வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ளது. இவை ப்ரீ ராடிக்கல்களால் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும்.

பப்பாளி பப்பாளி சாப்பிட்டால், சருமம் பொலிவுடன் மாறுவதோடு, மூட்டுகளும் ஆரோக்கியமாக இருக்கும். ஆய்வு ஒன்றில் வைட்டமின் சி குறைபாடு உள்ளவர்களுக்கு தான் மூட்டு சேதம் மற்றும் கீல்வாதம் போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரியவந்துள்ளது. இத்தகைய வைட்டமின் சி பப்பாளில் அதிகம் இருப்பதால், இதனை அன்றாடம் உட்கொண்டு வந்தால், மூட்டு பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

ஆப்பிள் ஆப்பிளில் க்யூயர்சிடின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக இருப்பதால், இவை மூட்டு வலி மற்றும் மூட்டுகள் சேதமடைவதைத் தடுக்கும். எனவே மூட்டு வலி உள்ளவர்கள் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால், நல்ல நிவாரணத்தை வழங்கும். குறிப்பாக ஆப்பிளை தினமும் சாப்பிட்டால், மூட்டு வலியில் இருந்தே விடுபடலாம்.

கேல் கேல் கீரையில் கால்சியம் அதிகம் உள்ளது. இவை மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கு உதவும். மேலும் இதில் உள்ள காப்பர், மூட்டுகளில் உள்ள தசைநார்கள் மற்றும் கொலாஜன்களை கட்டமைக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி இதில் இருக்கும் மாங்கனீசு மூட்டுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்து, இணைப்புத்திசுக்களின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

ப்ராக்கோலி ப்ராக்கோலி சாப்பிட்டால், ப்ரீ ராடிக்கல்களால் மூட்டுகளில் ஏற்படும் பாதிப்புகள் குறையும். மேலும் இதில் கால்சியம் அதிகம் இருப்பதால், இவை மூட்டுகளை ஆரோக்கியமாக பராமரிக்கும்.

ஆலிவ் ஆயில் சமையலில் ஆலிவ் ஆயில் சேர்த்து வருவதன் மூலம், அதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகளின் மூலம் மூட்டுகளில் ஏற்பட்டுள்ள வீக்கம் மற்றும் வலி குறையும்.

இஞ்சி இஞ்சி செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக செயல்பட உதவுவதோடு, மூட்டு பிரச்சனைகளுக்கும் நல்ல நிவாரணத்தை வழங்கும். ஏனெனில் இஞ்சியில் ஜிஞ்சரோல் என்னும் மூட்டு வலி மற்றும் வீக்கத்திற்கான நிவாரணப் பொருள் உள்ளது. எனவே இஞ்சியை டீ செய்து தினமும் ஒரு கப் குடித்து வருவது நல்லது.

க்ரீன் டீ தினமும் ஒரு கப் க்ரீன் டீ குடித்து வருவதன் மூலம், சருமம் அழகாவதோடு, மூட்டுகளும் ஆரோக்கியமாக செயல்படும். அதற்காக க்ரீன் டீ-யை அளவுக்கு அதிகமாக குடிக்க வேண்டாம். ஏனெனில் இவை பெரும் பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.
 
Last edited:

sarojini suresh

Commander's of Penmai
Joined
Dec 13, 2011
Messages
1,108
Likes
1,136
Location
chennai
#2
Re: மூட்டு வலி அடிக்கடி வருதா? அப்ப இந்த உணவு&

Nice tips. thanks for sharing.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.