மூட்டு வலி குணமாக

myworld

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 3, 2011
Messages
3,181
Likes
6,924
Location
Tirunelveli
#1
மூட்டு வலி:



மூட்டு வலி சிலருக்கு மாச, ஏன் சிலருக்கு வருஷ கணக்குல கூட இருக்கும் .எத்தனையோ டாக்டர் (ஒரிஜினல்) கிட்ட போய் காட்டினாலும் அவர் சில பல டெஸ்ட் செய்ய சொல்லி ஆட்டோமேடிக்கா நமது பர்ஸை குறைச்சி பல்ஸை அதிகமாக்கி பட்டை பட்டையா மருந்து மாத்திரையை குடுத்து அனுப்புவார் .

அப்போதைக்கி சரியாகி கொஞ்ச நாள் கழிச்சி திரும்பவும் வந்துடும்.. நாமளும் பழைய டாக்டரை (ஒரிஜினல்) நல்லா திட்டிட்டு வேற புது டாக்டரை பார்க்க போயிடுவோம்.. இது ஒரு தொடர் கதையாகி போகும்.. இது வீட்டில் இருப்பவங்களுக்கு ..இதே வெளியே வேலைக்கு போகும் ஆண்களா இருந்தா ரொம்பவும் பாவம். சிலருக்கு அலைய முடியாமல் வேலையே போகும் பரிதாப நிலையும் வரலாம் .

இதை செலவே இல்லாமல் குணமாக்க முடியும்.. அதுவும் வீட்டில் இருக்கும் பொருளைக்கொண்டே ..என்ன ஆச்சிரியமா இருக்கா... !! இதுப்போல எத்தனையோ பொருட்கள் இருக்கு ஆனா நமக்கு அதன் அருமை ,பெருமை புரிவதில்லை..



விஷயம் இதுதான் வீட்டில் இருக்கும் வெள்ளை பூண்டு நாலு அதாவது நாலு பல் எடுத்து அதை கத்தியால் சின்ன சின்னதா நறுக்கி கொள்ளவும். அதை அரைக்கவோ நசுக்கவோ கூடாது. இரவு தூங்கப்போகும் போது அதாவது பெட்டில போய் தூங்கப்போகும் கடைசி நேரத்தில அப்படியே வாயில் போட்டு முழுங்கி தண்ணீர் குடிக்க வேண்டியதுதான் ..தட்ஸ் ஆல்..... மறு நாள் காலை எழுந்து பார்க்கும் போது வித்தியாசம் தெரியும் ..

காரணம் இது ரத்தத்தின் அடர்த்தியை கொஞ்சம் குறைப்பதால இதயம் பம்ப் செய்ய அதிக மெனக்கெடுவதில்லை சாதாரனமாகவே பம்ப் செய்வதால் . ரத்தம் உடல் முழுக்க அதன் முழு பலத்துடன் பாய்வதால் மூட்டுக்களில் தேங்கி இருக்கும் கொழுப்பு தானாக கரைந்து அந்த இடத்திலிருந்து நகர்ந்து விடுகிறது ..நான்கு பூண்டுப்பல் ஒரு விலையே இல்லை அப்படியே இருந்தாலும் அது அதிகபட்சம் ஒரு ரூபாய் வருமா..?

அடுத்த தடவை யாருக்காவது மூட்டு வலி மாதிரி இருந்தால் , தெரிந்தால் டக்டரிடம் போவதுக்கு முன் இதை செய்யுங்கள்.. தெரியாதவருக்கும் தெரியப்படுத்துங்கள்..

-jailaani
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.