மூலிகைச் சாறுகளின் பயன்கள் - Benefits of herbal juice

lavanyap

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 14, 2012
Messages
7,046
Likes
17,100
Location
UAE
#1
நம் முன்னோர்கள் நோயின் தாக்கம் இன்றி வாழ அவ்வப்போது வீடுகளில் மூலிகைச் சாறு கொடுப்பார்கள். இந்த மூலிகைச் சாறுகளின் மருத்துவப் பயன்களை அன்றே உணர்ந்த முன்னோர்கள் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெளிவாக பாடியுள்ளனர். இந்த மூலிகைச் சாறுகளின் பயன்களை பார்ப்போமா....

எலுமிச்சை சாறு:
எலுமிச்சை சாற்றை அருந்தினால் பித்த மயக்கம், வாந்தி, கண்நோய், இரத்த சோகையால் ஏற்பட்ட சோர்வு முதலியவை நீங்கும். உடலுக்கு புத்துணர்வை தரும். நன்கு பசியைத் தூண்டும். தாகத்தைத் தணிக்கும். எலுமிச்சம் சாற்றை தலையில் தேய்த்து குளித்து வந்தால் மனநோய், மன அழுத்தம் நீங்கும். உடலில் தேய்த்து குளித்தால் தோல் சம்பந்தப்பட்ட சில வியாதிகள் குணமடையும். நகச்சுற்றுக்கு இதன் சாறே சிறந்த மருந்து. யானைக்கால் வியாதி, கண்ணோய், காதுவலிக்கும் எலுமிச்சை சாறு சிறந்த மருந்து.
இஞ்சி சாறு:
நம் முன்னோர்கள் காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என்றார்கள். இம்மூன்றையும் தினமும் உட்கொண்டால் நோய் என்பதே நம்மை நெருங்காது.
இஞ்சியை சாறு எடுத்து சிறிதளவு தினமும் அருந்தினால் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், வாந்தி, குடல்நோய், பித்த மயக்கம், போன்றவை நீங்கும். நீரிழிவு நோயாளிகளுக்கும் இது உற்ற மருந்தாகும். மேலும் தொண்டைப்புண், குரல் கம்மல், இவைகளைக் குணப்படுத்தும்.
கரிசலாங்கண்ணிச் சாறு:
கரிசலாங்கண்ணிச் சாறு ஜலதோஷம், காய்ச்சல், உடல்வலி, விஷக்கடி, சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல் போன்றவற்றை குணப்படுத்தும். இதன் சாறை காலையில் அருந்துவது நல்லது. அல்லது மதிய உணவுக்குப்பின் சூப் செய்து அருந்தலாம்.
பொன்னாங்கண்ணிச் சாறு:
பொன்னாங்கண்ணி பல வகையான தைல வர்க்கத்தில் அதிகம் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த பொன்னாங்கண்ணி கீரையை சூப் செய்து காலை மாலை இருவேளை என 15 நாட்களுக்கு அருந்தி வந்தால் கண் நோய்கள் ஏதும் அண்டாது. உடலின் வெப்பத்தைக் குறைத்து உடலுக்கு புத்துணர்வை கொடுக்கும்.
 
Last edited:

lavanyap

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 14, 2012
Messages
7,046
Likes
17,100
Location
UAE
#2
தூதுவளைச் சாறு:
வறட்டு இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைப்புண், அடிக்கடி ஜலதோஷம் உள்ளவர்கள் தூதுவளைச் சாறு அருந்தி வந்தால் சளித் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
அருகம்புல் சாறு:
அருகம்புல் சாறானது இரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன் உடலுக்கும் புத்துணர்வை கொடுக்கிறது. உடலில் தேங்கியுள்ள அசுத்த நீர் அனைத்தையும் வெளியேற்றுகிறது.
தண்*ணீர் விட்டான் கிழங்கு சாறு:
தண்ணீ*ர் விட்டான் கிழங்கின் சாறை எடுத்து தினமும் காலையில் அருந்தி வந்தால் உடல் சூட்டை தணித்து பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதலைத் தடுக்கும். தாது புஷ்டியை கொடுக்கும்.
பித்தம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.
வெள்ளைப் பூண்டு சாறு:
வெள்ளைப் பூண்டு சாற்றை காதில் இரண்டு சொட்டு விட்டால் காது மந்தம் குறையும். உள்நாக்கில் தடவினால் உள்நாக்கு வளர்ச்சி (டான்சில்) குறையும். மேலும் சிறிது அருந்தினால் இருமல், சுவாசம் அடைப்பு, மலக்கிருமிகள் நீங்கும். உடலின் மேல் சுளுக்கு ஏற்பட்ட பகுதிகளிலும் தடவலாம்.
வெற்றிலைச் சாறு:
வாத பித்த கபத்தினை அதனதன் நிலையில் சமப்படுத்த வெற்றிலைச் சாறு சிறந்த மருந்தாகும். சளியைப் போக்கும். காணாக்கடிகளுக்கு இதன் சாறு சிறந்த மருந்து. அஜீரணத்தைப் போக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும்.
வேலிப்பருத்தி சாறு:
சுவாசம், காச நோய்களுக்கு சிறந்த மருந்தாகும். கருப்பையிலுண்டாகும் பக்க சூலைக்கு இதன் சாறு தேன் கலந்து கொடுத்தால் பக்க சூலை நீங்கும். கை கால் வீக்கங்களுக்கு மேல் பூச்சாகத் தடவலாம்.
 

anitprab

Friends's of Penmai
Joined
Sep 13, 2011
Messages
419
Likes
580
Location
madurai
#5
பயனுள்ள தகவல் குறிப்புகளுக்கு நன்றி.................லாவண்யா.
 

lavanyap

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 14, 2012
Messages
7,046
Likes
17,100
Location
UAE
#8

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.