மூளைப் பாதிப்பைக் குணப்படுத்த உதவும் பு&

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
மூளைப் பாதிப்பைக் குணப்படுத்த உதவும் புதிய ஆய்வு


புத்திசாலித்தனம் என்றால் என்ன என்று கேட்டால் அதற்கு பதில் எப்படி இருக்கும்?


ஒருவர் தனது செயல்களை வெற்றிகரமாக செய்து முடிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தனது அறிவுத்திறனால் அலசி ஆராய்ந்து முடிவெடுத்து அதன்படி நடப்பது என்று சுருக்கமாக சொல்லலாம்.


விஞ்ஞானிகள் இது தொடர்பாக ஆய்வு செய்து புதிய கருத்தை தெரிவித்துள்ளனர். அதாவது ஒருவர் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளும்போது அவரது மூளை அமைப்பு எப்படி இருக்கும், மூளை நரம்பியல் அமைப்புகள் எப்படி செயல்படும் என்பது குறித்து ஆய்வு நடத்தினார்கள்.


இதன் மூலம், புத்திசாலித்தனம் குறைந்த ஒருவரைக்கூட புத்திக்கூர்மை நிறைந்தவராக மாற்ற முடியுமா என்பது தான் விஞ்ஞான ஆய்வின் முயற்சி. அதோடு மூளைப் பாதிப்பு மற்றும் பக்க வாதம், அல்சீமர் போன்ற நோய் பாதிப்புகளால் உடல் உறுப்புகள் இயங்காமல் இருக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க இந்த ஆய்வு எந்த அளவுக்குப் பயன்படும் என்பதும் விஞ்ஞானிகளின் முயற்சி ஆகும்.


அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் மூளை நரம்பியல் துறை பேராசிரியர் அரூன் பார்பி தலைமையிலான குழுவினர் இது தொடர்பான ஆய்வுகளை நடத்தினார்கள். இந்த ஆய்வுக்காக மூளை நரம்பியல் நோய் தாக்கிய 122 நபர்களை தேர்வு செய்து அவர்களின் மூளையை சி.டி. ஸ்கேன் எடுத்தனர். அதே போல புத்திசாலித்தனம் நிறைந்த சிலரின் மூளையையும் சி.டி. ஸ்கேன் எடுத்தனர்.


புத்திசாலித்தனம் நிறைந்தவரின் மூளைப்பகுதி மற்றும் மூளை நரம்புகள் எப்படி செயல்படுகின்றன என்பதை ஆய்வு செய்து ஒரு வரைபடம் தயாரித்தனர். அதே போல மூளை நரம்பியல் பாதிப்பு உள்ளவர்களின் மூளை நரம்புகள் எப்படி உள்ளது என்பதையும் வரைபடமாக தயாரித்தனர்.


இந்த இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து மூளையின் எந்தப்பகுதி நரம்புகள் புத்திசாலித்தனத்திற்கு காரணமாக அமைகின்றன என்பதை கண்டுபிடித்தனர். இந்தப்பகுதியை மட்டும் தூண்டி விடுவது அல்லது இந்தப்பகுதியில் உள்ள குறைபாடுகளை நீக்குவது போன்றவற்றின் மூலம் மூளை நரம்பியல் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


---------------------------


புத்திசாலித்தனம் நிறைந்த ஒருவரின் மூளை அமைப்பு எப்படி இருக்கும் என்பதை காட்டும் படம். இதில் சிவப்பு மற்றும் ஆரஞ்சு வண்ணத்தில் உள்ள பகுதிகள் பொதுவான புத்திசாலித்தனத்தை குறிப்பதாகும், மஞ்சள் நிறம் செயல் திறனை குறிப்பதாகும்.


---------------------------


மூளையில் கார்டெக்ஸ் பகுதியில் உள்ள வலது மற்றும் இடது புறங்களில் உள்ள நரம்புகளின் செயல்பாடுகளே புத்திசாலித்தனத்திற்கு அடிப்படையாக அமைவது இந்த ஆய்வுகளின் மூலம் தெரியவந்தது. திட்டமிடுதல், சுய கட்டுப்பாடு மற்றும் ஒரு செயலைச் செய்யும் திறன் போன்ற பொதுவான அம்சங்களுக்கு மூளையின் இந்தப்பகுதியின் செயல்பாடுகள் மிக முக்கிய மாக கருதப்படுகிறது. இதற்கு இப்போதைய ஆய்வு முடிவுகள் உதவும் வகையில் அமைந்துள்ளன.


புத்திசாலித்தனத்தின் உயிரியல் அமைப்பு எப்படி இருக்கும் என்ற இந்த ஆய்வின் மூலம், ஒரு புத்திசாலியின் மூளை அமைப்பு எப்படி இருக்கும் என்பதை ஓரளவு தீர்மானிக்க முடிகிறது. இந்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வுகளின் மூலம் மூளை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளிக்கும் காலம் விரை வில் வரும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கையாகும்.

-senthilvayal
 

umaravi2011

Minister's of Penmai
Joined
Nov 28, 2011
Messages
3,874
Likes
7,533
Location
Hyderabad
#2
Re: மூளைப் பாதிப்பைக் குணப்படுத்த உதவும் ப

மிகவும் தேவையான பதிவு

எனக்கு தேர்ந்த ஒரு பெண் பதிமூன்று வயதாகிறது திடீரென்று வலிப்பு போல வந்து ஸ்கூல் ல விழுந்திட்டா


ஸ்கேன் எல்லாம் பண்ணி பார்த்த ஒண்ணுமே இல்லை நு நரம்பியல் டாகடர் சொல்லிட்டார் ஆனா இந்த வலிப்பு அடிக்கடி வர ஆரம்பிச்சது அவ சில நேரம் எனக்கு ஒன்னுமே தெரியலை blank ஆக இருக்குனு சொல்லறா


இப்ப மறுபடியும் ஸ்கேன் பண்ணிபார்த்தல் மெல்லிய அதிர்வு மூளைல இருக்குனு சிகிச்சை பண்ணறாங்க


இந்த மாதிரி விழிப்புணர்வு கட்டுரைகள் மிகவும் அவசியம்
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.