மெகந்தி கோன் ஒரு விளக்கம்

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,124
Likes
20,708
Location
Germany
#1
மெகந்தி கோன் ஒரு விளக்கம்

'மெகந்தி பயன்படுத்தியதால் மும்பை சிறுமிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இறந்துவிட்டார். அதனால், யாரும் மெகந்தி இட்டுக்கொள்ள வேண்டாம்.’

ரம்ஜான் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாட விரும்பிய இஸ்லாமியப் பெண்கள் பலரும் மெகந்தியால் தங்களை அழகுப்படுத்திக்கொண்டு இருந்த நேரம் அது. எஸ்.எம்.எஸ். பீதியில் இஸ்லாமியப் பெண்கள் பலரும் பதறியடித்துக்கொண்டு மருத்துவமனை நோக்கிப் படையெடுத்தது வேதனையான நிகழ்வு.

மும்பையில் தொடங்கிய இந்த வதந்தி கர்நாடகம், ஆந்திரம், தமிழகம், கேரளம் எனத் தென் மாநிலங்களுக்கும் பரவியது. வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் மட்டும் ரம்ஜான் பண்டிகை தினத்தில் பீதி காரணமாக ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளை முற்றுகையிட்டனர்.

சிகிச்சைக்கு வந்தவர்களைக் கட்டுப்படுத்த போலீஸ் தடியடி நடத்தும் அளவுக்கு விபரீதச் சூழல்.

கை மற்றும் கால்களில் மேற்பூச்சாகப் பூசப்படும் மெகந்தியால் வாந்தி, மயக்கம், தடுமாற்றம் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பே கிடையாது. தெரியாமல் வாய் வழியாக மெகந்தி வயிற்றுக்குள் போனால் மட்டும்தான் வாந்தி, மயக்கம் ஏற்படும்

வியாபாரரீதியாக மெகந்தி கோன் தயாரிக்கும்போது மருதாணி இலையைக் காயவைத்துப் பொடியாக்கி பாராபெனிலீன்டைஅமின் என்ற டை உள்பட சில பவுடர்களையும் கலப்படம் செய்கிறார்கள். இதனால், மருதாணியின் தரம் குறைய வாய்ப்பு உள்ளது.

ஆனால், இந்த மெகந்தி கோனைப் பயன்படுத்தும்போது சிவப்பு நிறம் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே தோலில் படியும். இதனால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை ஆங்கிலத்தில் 'கான்டாக்ட் டெர்மடைடிஸ்’ (சிஷீஸீtணீநீt பீமீக்ஷீனீணீtவீtவீs) என்று சொல்கிறோம்.

இதனை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். கையில் மெகந்தியைப் பூசியவுடன் உடனடியாக அரிப்பு ஏற்படுத்தினால் அது 'இரிடன்ட் டெர்மடைடிஸ்’ (மிக்ஷீக்ஷீவீtணீஸீt ஞிமீக்ஷீனீணீtவீtவீs). மெகந்தி பூசிய 48 மணி முதல் 72 மணி நேரத்துக்குள் தோலில் அரிப்பு ஏற்பட்டால் அது, 'அலர்ஜிக் டெர்மடைடிஸ்’ (கிறீறீமீக்ஷீரீவீநீ ஞிமீக்ஷீனீணீtவீtவீs).

ஆனால், எந்த வகை டெர்மடைடிஸ் ஏற்பட்டாலும் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பே கிடையாது.

சமீபத்தில் பரவிய வதந்திகூட, தரமற்ற மெகந்திகளால் ஏற்படும் தோல் ஒவ்வாமைதான்.

இதைத் தவிர்க்க வேண்டுமானால், இயற்கையான மருதாணி இலைகளை அரைத்துப் பயன்படுத்தலாம். இயற்கையான இந்த மருதாணிதான் தோல் மற்றும் நகங்களுக்கும் மிகவும் நல்லது!''
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.