மெட்-டயட்

#1
வயதானவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய மெட்-டயட்

மெடிடெரனியன் டயட் என்பது இத்தாலி மற்றும் கிரீஸ் நாடுகளில் பரவலாக 1960 களில் அறிமுகப்படுத்தப்பட்டது. சுருக்கமாக மெட்- டயட் என்று அழைப்பார்கள். ஆரம்பத்தில் மற்ற நாடுகளில் இதன் அறிமுகம் தோல்வி அடைந்தாலும், 90 களுக்கு பிறகு பல்வேறு ஆராய்ச்சிகளில் இது மிகவும் முக்கியமான டயட் என்று எல்லாராலும் கூறப்படுகிறது.




என்னெல்லாம் சாப்பிட வேண்டும்?

இந்த மெடி - டயட்டில் அதிக அளவு ஆலிவ் ஆயில் கொழுப்பிற்காக உபயோகப்படுத்தப்படுகிறது, நிறைய பழங்கள், சுத்தகரிக்கப்படாத கோதுமை அரிசி வகைகள், காய்கறிகள் மற்றும் அதிக அளவு மீன், மிதமான அளவு சீஸ், யோகார்ட் மற்றும் ஒயின், மிகக் குறைந்த அளவு இறைச்சி ஆகியவை உள்ளடக்கிய ஆரோக்கியமான டயட் இது.

நன்மைகள் என்ன?


இதய நோய்கள், புற்று நோய் உடல் பருமன் சர்க்கரை வியாதி ஆகியவை உண்டாகாமல் தடுக்கின்றன. இப்போது நிகழ்த்திய புதிய ஆய்வில் இந்த மெட்- டயட் சாப்பிடுவதால் வயதானால் வரும் மனம் பிறழ்வு மற்றும் அதீத ஞாபக மறதி நோயான அல்சைமர் நோய் வரவிடாமல் தடுக்கலாம் என ஸ்வைன்புர்னே பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

புரிந்து கொள்ளும் திறன், கவனம், ஞாபகத்திறன், அகியவை வயதாகும்போது குறைந்துகொண்டே போகும். ஆனால் இந்த டயட்டை பின்பற்றியவர்களுக்கு இளைஞர்களுக்கு உள்ளது போல் இவை அதிகரித்து காணப்படுகின்றன.

இந்த டயட்டை வயதானவர்கள் சாப்பிடுவதால், நுண் சத்துக்கள் அதிகரிக்கின்றன. விட்டமின் மினரல் சமநிலையற்று காணப்படுவதை சரிபடுத்துகின்றன. ஜீரண சக்தியை அதிகப்படுத்துகின்றன. கண் பார்வையை தெளிவாக்குகிறது. வாழ்க்கையின் தரத்தை உயர்த்தும். நல்ல மன நல ஆரோக்கியத்தை தரும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த டயட்டை பற்றி போதிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டால் அடுத்து வரும் 20 வருடங்களில் நல்ல ஆரோக்கியமான உடல் நலத்துடன் வயதானவர்களின் ஆயுளை நீட்டிக்கலாம்.




 

Important Announcements!