மெத்தை விரிப்பு உடைகள் தான் வெளிநாடுகளி&

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
மெத்தை விரிப்பு உடைகள் தான் வெளிநாடுகளில் இப்போ பேஷன்


மேற்கத்திய நாடுகளிலிருந்து வந்த பேஷன்…’ எனக் கூறி, நம்ம ஊர் பிரபலங்களும், இளைஞர்களும், ஜீன்ஸ், கவுன், கோட்-சூட் என, விதம் விதமான ஆடைகளை அணிந்து வலம் வந்து கொண்டிருக்க, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளிலோ, நிலைமை தலைகீழாக இருக்கிறது. மெத்தை விரிப்புகளுக்காக பயன்படுத்தப்படும் துணிகளில், உடைகள் தைத்துக் கொள்வது தான், அங்கு இப்போது பேஷன். மெத்தை விரிப்பு துணி என்று கூறுவதை விட, நம் ஊர்களில் பெரியவர்கள் அணியும், பட்டாபட்டி டிராயர் தைக்கப் பயன்படும் துணிகள் என்று கூறினால், “பளிச்’ என புரிந்து கொள்ளலாம்.
ஸ்பீடு, நெட் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்த சாண்ட்ரா புல்லக், பிரிட்டனைச் சேர்ந்த பிரபல நடிகையும், பாடகியுமான ரிகானா, ஹாலிவுட் நடிகைகளும், பாப் பாடகிகளுமான லிண்ட்சே லோகான், சைரஸ் மைலி போன்ற பிரபலங்கள், பார்ட்டிகளுக்கும், முக்கியமான நிகழ்ச்சிகளுக்கும் இந்த மெத்தை விரிப்பு துணிகளால் தைக்கப்பட்ட உடைகளைத் தான் அணிந்து செல்கின்றனர். இவ்வளவு ஏன்? பிரிட்டன் ராணி எலிசபெத்துக்கு கூட, இந்த உடைகளை அணிவதில் ஆசை வந்து விட்டது.
 

Attachments

sowmyasri0209

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 7, 2011
Messages
5,038
Likes
4,808
Location
Trichy
#2
Re: மெத்தை விரிப்பு உடைகள் தான் வெளிநாடுகள&#30

ikkarak akkarai pachchaingaradu ithu thaanaa
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.