யாருடைய மனதையும் புண்படுத்துவது எனது நோ&

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,791
Location
Germany
#1
[h=1]யாருடைய மனதையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல..! வைரமுத்து விளக்கம்[/h]


யாரையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல. புண்பட்டிருந்தால் வருந்துகிறேன் என்று பாடலாசிரியர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஶ்ரீவில்லிபுத்தூரில் நேற்று ஆண்டாள் குறித்து நடந்த கருத்தரங்கத்தில் வைரமுத்து கலந்துகொண்டார். அப்போது, ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுள்களுக்கிடையே உள்ள வேறுபாடு பற்றி அவர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின.

அவருடைய கருத்துக்கு பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தார். இந்தநிலையில் இதுகுறித்த வைரமுத்துவின் ட்விட்டர் பதிவில், 'தமிழை ஆண்டாள் என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன்; அது எனது கருத்தன்று.

ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்து. ஆளுமைகளை மேன்மைப்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமை செய்வதன்று. அதற்கு இலக்கியமே தேவையில்லை.


ஆண்டாளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் என் கருத்துகளெல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசுகின்றன என்பதை அனைவரும் அறிவர். எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று; புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,791
Location
Germany
#2
Re: யாருடைய மனதையும் புண்படுத்துவது எனது ந&#30

[h=2]ஆண்டாள் பற்றி விமர்சனம்: கவிஞர் வைரமுத்துவை மன்னிப்பதுதான் பண்பாடு - நடிகர் விவேக் கருத்து[/h]


ஆண்டாள் பற்றி விமர்சனம் செய்ததாக கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களை நிறுத்திவிட்டு, மன்னிப்பு கேட்ட அவரை மன்னிப்பதுதான் பண்பாடு என்று நடிகர் விவேக் கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ‘தமிழை ஆண்டாள்’ என்ற கருத்தரங்கம் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


வைரமுத்துக்கு பா.ஜனதா தலைவர் எச்.ராஜா, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து வைரமுத்து, தனது பேச்சு யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.


என்றாலும் தொடர்ந்து வைரமுத்துக்கு எதிராக இந்து அமைப்புகளும், பா.ஜனதாவினரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


ஆனால் வைரமுத்து மன்னிப்பு கேட்டதால் அதை ஏற்றுக் கொள்வதுதான் பண்பாடு என்று நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-


அனைத்து மத ஆன்மீக உணர்வுகளையும் நாம் மதிக்க வேண்டும். தாயார் ஆண்டாள் இறையருள் பெற்ற கவி. ஆழ்வார்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். யாரோ வெளிநாட்டில் எழுதிய கட்டுரை தேவையற்றது. கவிஞர் வைரமுத்து மன்னிப்புக் கேட்பதும், அவரை மன்னிப்பதும் பண்பாடு.


தமிழுக்கும், இலக்கியத்துக்கும் திரைப்பாடலுக்கும் பெரும் பங்களிப்பு செய்தவர். அவர் படைத்த “மரங்கள்” கவிதை வனங்களின் தேசிய கீதம். அவரது விளக்கத்தை ஏற்போம். கண்ணியம் காப்போம்.


இவ்வாறு கூறியுள்ளார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,791
Location
Germany
#3
Re: யாருடைய மனதையும் புண்படுத்துவது எனது ந&#30

[h=1]ஸ்ரீவில்லிப்புத்தூரில் வைரமுத்து உருவபடம் எரிப்பு[/h]
ஆண்டாள் குறித்து விமர்சனம் செய்த வைரமுத்துவுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வைரமுத்துவின் பேச்சை கண்டித்து நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் மதுரையில் உள்ள தனது வீட்டில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஆண்டாளை விமர்சித்தவர்களுக்கு இன்னும் என்னவெல்லாம் நேரும் என சொல்ல முடியாது. கண்ணகியால் மதுரை எரிந்தது போன்று, ஆண்டாள் பாசுரங்களை தவறாக பேசியவர்கள் எரிந்து போவார்கள். சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போகிறேன் . எனது கணவரும் என்னுடன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

உண்ணாவிரதம் ஒத்திவைப்பு
இதனிடையே, வைரமுத்துவின் பேச்சை கண்டித்தும், ஆண்டாள் கோயிலில் வந்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திருகோஷ்டியூர் மாதவன் சுவாமிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் மாமுனிகள் ஜீயர் சுவாமிகள், தமிழ்நாடு பிராமண சங்க நிர்வாகிகள், விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் மற்றும் பலர் பேசினர். தொடர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். அப்போது, போலீசார்கேட்டு கொண்டதன் பேரில், வரும் புதன் வரை மன்னிப்பு கேட்க வைரமுத்துவுக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. இல்லையென்றால் போராட்டம் தொடரும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் வைரமுத்து உருவப்படம் , அவரது பேச்சு வெளியிட்ட நாளிதழ் எரிக்கப்பட்டது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,791
Location
Germany
#4
Re: யாருடைய மனதையும் புண்படுத்துவது எனது ந&amp

 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,791
Location
Germany
#5
Re: யாருடைய மனதையும் புண்படுத்துவது எனது ந&amp

[h=1]ஆண்டாள் குறித்து அவதூறு : வைரமுத்துவுக்கு ஜீயர் எதிர்ப்பு[/h]
ஆண்டாள் குறித்து அவதுாறாக பேசிய கவிஞர் வைரமுத்துவுக்கு, ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து, 'தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் பேசும்போது, அமெரிக்க பல்கலை பேராசிரியர் எழுதிய புத்தகத்தை மேற்கோள் காட்டி உள்ளார். அப்போது ஆண்டாள் குறித்து அவதுாறாக பேசி உள்ளார். இது பக்தர்களின் மனதில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்த்தெய்வமாக விளங்கும் ஆண்டாளை, ஒரு தமிழ்க் கவிஞர் அவதுாறாக பேசி உள்ளார் என்பது ஆன்மிக மக்களை காயப்படுத்தி உள்ளது. பக்தர்களின் உணர்வை புண்படுத்தியதற்காக வைரமுத்து மன்னிப்பு கோரவேண்டும். எதிர்காலங்களில் இதுபோன்ற கருத்துக்களை பேசுவதை தவிர்க்கவேண்டும்,
என்றார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,117
Likes
3,169
Location
India
#6
Re: யாருடைய மனதையும் புண்படுத்துவது எனது ந&amp

[h=2]வைரமுத்துவை விமர்சித்த விவகாரம்: எச்.ராஜாவுக்கு பாரதிராஜா கண்டனம்[/h]


ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவை விமர்சித்த பாஜக தலைவர் எச்.ராஜாவுக்கு பாரதிராஜா கடும் கண்டனத்தை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். #Bharathiraja #HRaja #Vairamuthu

சென்னை:

ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவை விமர்சித்த பாஜக தலைவர் எச்.ராஜாவுக்கு பாரதிராஜா கடும் கண்டனத்தை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆண்டாள் விவகாரத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவை மிகக் கேவலமாக இழிவாக விமர்சித்துள்ளார் எச்.ராஜா. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி எழுந்துள்ள நிலையில் வைரமுத்து அமைதி காக்கிறார். அவருக்கு ஆதரவான கட்சிகள் அமைதி காக்கின்றன. திரையுலகம் அமைதி காக்கிறது.ஆனாலும், சமூக வலைதளங்களில் வைரமுத்துவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்துவுக்கு இயக்குநர் பாரதிராஜா ஆதரவு அளித்துள்ளார். வைரமுத்துவை விமர்சித்து வரும் எச்.ராஜாவுக்கு தனது கண்டனங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் பாரதிராஜா கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் தனி மனித உரிமை பறிக்கப்பட்டு எவ்வளவோ நாட்களாகி விட்டன. எழுத்து, கருத்து சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது.

தமிழை உலக உச்சிக்கு கொண்டு சென்ற பெருமைக்குரியவர் வைரமுத்து. அவர் தனி மனிதன் அல்ல. தமிழினத்தின் அடையாளம். நிறைய மனிதர்களின் வாழ்வுக்கு வழிகாட்டியாய் வாழும் மனிதனை நாக்கில் நரம்பில்லாமல் பேசுவதா? எச்.ராஜா போன்றவர்களால் இந்தியா துண்டாடப்பட போகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

வைரமுத்துவின் கருத்துக்களை தவறு என்று தட்டிக்கேட்க யாருக்கும் அதிகாரமில்லை. ஹெச்.ராஜாவால் வைரமுத்து போல் இலக்கியம் எழுத முடியுமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,791
Location
Germany
#7
Re: யாருடைய மனதையும் புண்படுத்துவது எனது ந&#30

[h=2]ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து: கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக வழக்குப்பதிவு[/h]


ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக கவிஞர் வைரமுத்து மீது ராஜபாளையம் போலீசில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்து கடவுள் ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த வைரமுத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த இந்து முன்னணி நகர செயலாளர் சூரி வடக்கு போலீஸ் நிலையத்தில் வைரமுத்து மீது புகார் செய்தார்.


அதில், கடந்த 7-ந்தேதி ராஜபாளையத்தில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்று பேசிய கவிஞர் வைரமுத்து, இந்து கடவுளான ஆண்டாள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதனால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.


ஆண்டாளை அவமதிப்பு செய்தது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.


இந்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் விசாரணை நடத்தி, கவிஞர் வைரமுத்து மீது அவமதிப்பு வழக்குபதிவு செய்துள்ளார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,791
Location
Germany
#8
Re: யாருடைய மனதையும் புண்படுத்துவது எனது ந&#30

[h=1]வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் மெரினாவில் மீண்டும் போராட்டம்[/h]
: 'பிழைப்பிற்காக பெண்களை வர்ணித்து பாட்டு எழுதும் வைரமுத்துவுக்கு, ஆண்டாள் குறித்து அவதுாறு பேச எந்த தகுதியும் இல்லை. அவர், மன்னிப்பு கேட்காவிட்டால், மெரினாவில் மீண்டும் போராட்டம் வெடிக்கும்' என, இந்து மக்கள் கூட்டத்தில் எச்சரிக்கை விடப்பட்டது.

சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில், பாடலாசிரியர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து அவதுாறாக பேசினார். இதற்கு, இந்துக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழகம் முழுவதும், போராட்டங்களும் நடந்து வருகின்றன.

இந்நிலையில் வைரமுத்துவுக்கு எதிராக, 'வாழ்க இந்து நீதி தர்மம்' எனும் தலைப்பில் ஜீயர்கள், மடாதிபதிகள், சிவாச்சாரியார்கள், இந்து அமைப்புகள், ஆன்மிக நல விரும்பிகள் பங்கேற்ற பிரமாண்ட கூட்டம், சென்னை, அரசு விருந்தினர் மாளிகை அருகே நேற்று நடந்தது.

இதில் பங்கேற்றோர் பேசியதாவது: மதமும் ஆன்மிகமும் கற்பூரம் போன்றது. அதன் வாசனை சிலருக்கு தெரியாது. ஆண்டாள் குறித்து அவதுாறு பேச யாருக்கும் அருகதை கிடையாது. இந்து மதம் சகிப்புத்தன்மை நிறைந்தது. இந்துக்கள் சட்டத்தை மதிப்பவர்கள். இந்துக்கள் இணையும் நேரம் வந்துவிட்டது. எது எதற்கோ குரல் கொடுக்கும் மாதர் சங்கங்கள், பெண்மையை இழிவாக பேசிய பேச்சுக்கு குரல் கொடுக்காதது ஏன்?

இவ்வுலகில், பெண்களின் பெயரில் தான் நதி, ஆறுகள் ஓடுகின்றன. பெண் குலத்தின் தெய்வம் ஆண்டாள் நாச்சியார் குறித்து அவதுாறு பேசிய வைரமுத்து, ராமனை கூட அவதுாறாக பேசியுள்ளார். ஆன்மிகம் தேவையில்லை என்போர், அதைப் பற்றி ஏன் பேச வேண்டும். முதல்வர் ஜெ., இருந்திருந்தால், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைத்திருக்கும்.
பிழைப்பிற்காக பெண்களை வர்ணித்து பாட்டு எழுதும் வைரமுத்துவுக்கு, தெய்வப்புலவர் ஆண்டாள் நாச்சியார் குறித்து அவதுாறு பேச எந்த தகுதியும் கிடையாது. ஆரம்பத்தில் தமிழை வளர்த்ததே ராமானுஜரும், ஆண்டாளும் தான். இப்போது உள்ளோர், பிழைப்பிற்காகவும், பதவிக்காகவும் தமிழை வளர்ப்பதாக நடிக்கின்றனர். வைரமுத்துவின் அவதுாறு பேச்சு, இந்துக்களின் எழுச்சிக்கு வித்திட்டு உள்ளது.

தமிழக அரசு இனியும் தாமதிக்காமல், இந்து மற்றும் தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். வைரமுத்து தன் தவறை உணர்ந்து, நாளை மாலைக்குள் ஸ்ரீவில்லிபுத்துாரில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், மெரினாவில் மீண்டும் போராட்டம் வெடிக்கும். இவ்வாறு அவர்கள் பேசினர்.


இந்நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீவில்லிப்புத்துார், மன்னார்குடி, ஆழ்வார் திருநகர் ஜீயர்கள், முத்து சிவாச்சாரியார், வி.எச்.பி., தலைவர் வேதாந்தம், இந்து முன்னணி அமைப்பின், ராம கோபாலன், உபன்யாசகர்கள் வேங்கடகிருஷ்ணன், அனந்த பத்மநாபச்சாரியார், ஆர்.வி.பி.எஸ்.மணியன், தாம்பராஸ் தலைவர் நாராயணன், அரவிந்தலோசனன், நடிகர் விசு, எஸ்.வி.சேகர், குட்டி பத்மினி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,791
Location
Germany
#9
Re: யாருடைய மனதையும் புண்படுத்துவது எனது ந&amp

[h=1]கனிமொழி, வைரமுத்து மீது குவியும் புகார்கள்[/h]


பெருமாள் மற்றும் ஆண்டாள் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்த, தி.மு.க., - எம்.பி., கனிமொழி மற்றும் வைரமுத்து மீது போலீசில், பலர் புகார் அளித்து வருகின்றனர்.
சமீபத்தில், திருச்சியில் நடந்த மாநாடு ஒன்றில், தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜ்ய சபா, எம்.பி., கனிமொழி, ''திருப்பதி ஏழுமலையானுக்கு சக்தி இல்லை,'' என, பேசியுள்ளார்.


அதேபோல, சினிமா பாடலாசிரியர், வைரமுத்து, திருப்பாவை அருளிய ஆண்டாள் பற்றி, தரக்குறைவாக விமர்சித்துள்ளார். இதற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது; வைரமுத்து வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்து முன்னணி நிர்வாகி, முருகேசன் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று புகார் ஒன்றை அளித்துள்ளார்.அதில், 'பெருமாள் மற்றும் ஆண்டாள் பற்றி தரக்குறைவாக பேசி, இந்துக்களின் மனதை புண்படுத்தி உள்ள, வைரமுத்து மற்றும் கனிமொழி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, மேலும் பலரும்புகார் அளித்துஉள்ளனர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,791
Location
Germany
#10
Re: யாருடைய மனதையும் புண்படுத்துவது எனது ந&#30

மதுரையில் வைரமுத்துவை கண்டித்து இந்து அமைப்புகள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் பேசினார்.

 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.