யார் பிள்ளை தனுஷ் ?

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,092
Likes
20,708
Location
Germany
#1


மதுரை மாவட்டம் மலம்பட்டியைச் சேர்ந்தவர் கதிரேசன். ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி மீனாட்சி.

இவர்கள் மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், “பிரபல நடிகர் தனுஷ் 7.11.1985-ல் எங்கள் மகனாக பிறந்தார். கலைச்செல்வன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தோம்.

எங்கள் மகன் ஒன்று முதல் 8-வது வகுப்பு வரை மேலூர் தனியார் பள்ளியிலும், 9, 10-வது வகுப்புகளை மேலூர் அரசு பள்ளியிலும் படித்தான். 11-வது வகுப்பை திருப்பத்தூர் அரசு பள்ளியில் படித்தான். பாதியிலேயே படிப்பை நிறுத்திய எங்கள் மகன் சென்னை சென்று இயக்குனர் கஸ்தூரிராஜாவிடம் பணிபுரிந்தான்.

பின்னர் திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகர் ஆனார். இதையடுத்து எங்கள் மகனை பார்க்க சென்னை சென்றோம். ஆனால் கஸ்தூரிராஜா அனுமதிக்கவில்லை. எனவே மகன் தனுசுடன் எங்களை சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

இந்த வழக்கு வருகிற 12.1.2017 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனுஷ் அப்பா திரைப்பட டைரக்டர் கஸ்தூரிராஜாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

இதுபோன்ற ஒரு செய்தியை கேள்விப்படுவதே எனக்கு வருத்தமாக இருக்கிறது. இது பதில் சொல்ல தகுதியான வி‌ஷயம் அல்ல.

என்னை எனது நண்பர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் 40 வருடங்களாக தெரியும். சிறு வயதில் இருந்தே எனது மகன் தனுசை எல்லோருக்கும் நன்றாக தெரியும். அவருடன் இங்கு படித்த நண்பர்கள் இருக்கிறார்கள்.

மக்களுக்கு பயன்பட வேண்டிய நீதி துறையின் பொன்னான நேரம் இது போன்ற பொய்யான வழக்குகளால் வீணாகிறதே என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது.

நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. தேவையான பல பிரச்சினைகளை நீதிமன்றம் தீர்க்க வேண்டியது இருக்கிறது. அவற்றை செய்ய விடாமல் இது போன்ற வழக்குகளுக்கு நேரம் வீணடிக்கப்படுகிறதே என்பது எனது கவலை. நீதித்துறையை நான் மதிக்கிறேன். வேறு எதையும் சொல்ல விரும்பவில்லை.

இவ்வாறு கஸ்தூரிராஜா கூறினார். 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,092
Likes
20,708
Location
Germany
#2
[h=1]காணாமல் போன என் மகன் தான் நடிகர் தனுஷ்" - போட்டோ ஆதாரங்களுடன் போராடும் கிராமத்து பெற்றோர்[/h]
சிவகங்கை பேருந்து நிலையத்தில் டைம் கீப்பராக பணியாற்றுபவர் கதிரேசன். இவரது சொந்த ஊர் திருப்பாசேத்திப்பக்கத்திலுள்ள கல்லூரணி. மனைவி மீனாள். இவர்களுக்கு இரண்டுகுழந்தைகள் . மூத்தவன் கலைச்செல்வன். இவரைத்தான் தனுஷ் என்கிறார் கதிரேசன்.
இரண்டாவது தன பாக்கியம். எஸ்.எஸ்.எல்.சி வரை வரைமேலூர் ஆண்கள் பள்ளியில் படித்த கலைச்செல்வன் 11 ஆம் வகுப்பை திருப்பத்தூரில் உள்ள ஆறுமுகம் சீதையம்மாள் பள்ளியில் தொடர்ந்தாராம்.

பள்ளியில் உள்ள ஹாஸ்டலில் தங்க வைத்துள்ளனர். பிளஸ் 1 ல் அறிவியல் பாடம் பிடிக்காததால் சொல்லி பார்த்தும் பெற்றோர் கேட்காததால் 2002 ஆம் ஆண்டு அம்மா, என்னை மன்னிடுங்க.எனக்கு இந்த படிப்பு பிடிக்கலை. நான்ஊரைவிட்டே போறேன். எனக்கு எப்பத்தோணுதோ, அப்ப உங்களை தேடிவருவேன்." என்று எழுதிவைத்து விட்டு மாயமானார் தனுஷ் மன்னிக்கவும் கலைச்செல்வன்.


பையனைத் தேடி அலைந்து எங்குமே கிடைக்கவில்லை என்ற நிலையில் ஒரு நாள், தனுஷ் டி.வி-யில் கொடுத்த ஒரு பேட்டியில் நான் மதுரைக்காரன் என்று கூறி மதுரை அருகில் உள்ள மேலூரை சேர்ந்தவன் என்று கூறினாராம்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,092
Likes
20,708
Location
Germany
#3


இந்த பேட்டியை பார்த்த அக்கம்,பக்கத்தில் இருந்தவங்க எல்லாம் காணாமல் போன உன் மகன் கலை தான் தனுஷ் அடித்து கூறியிருக்கின்றனர். அதற்கு பிறகு தான் தனது கலையின் போட்டோவை வைத்து பார்த்துள்ளார். அது தனது மகன் தான் என்று புரிந்ததாம்.
கதிரேசன் ஊரில் இருப்பபவர்களும் தனுஷ்தான் கதிரேசனைன் காணாமல் போன மகன் என்று அடித்து சொல்கின்றனர். கதிரேசனின் நண்பர் டிரைவர் ஆபிரகாம் என்பவர் அவர்கள் ஊர் பக்கம் ஷூட்டிங்குக்கு வந்த தனுஷிடம் உங்க அப்பா கதிரேசன் இங்க கஷ்டப்பட்டுக்கிட்டுஇருக்காரு என்று சொன்னாராம்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,092
Likes
20,708
Location
Germany
#4
அதற்கு தனுஷ் " அவர் ஏன்.?கஷ்டப்படனும்.. என்னை வந்துப் பார்க்கசொல்லுங்க.." சொல்லிட்டு ஷூட்டிங்க் போயிட்டாராம். ஊர்ல,வேலைப் பார்க்கிற சிவகங்கையில என எல்லோருக்கும் தெரியும் என் மகன் கலைதான் தனுஷ் என்று அடித்து சொல்கிறார் கதிரேசன். என் மகன் தான் தனுஷ் என்பதை நிரூபிக்க போராடிக்கிட்டு இருக்கிறோம் , சி.எம்.செல்லுக்குக் கூட மனு அனுப்பினேன்.விசாரிக்க சிவகங்கை தாலுகா போலீஸ்ஸ்டேசனுக்கு வர சொன்னாங்க. ஏனோ பெரிய இடத்து விவகாரம் என்று அதோடு நிறுத்திகிட்டாங்க என்கிறார் கதிரேசன்.

 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,092
Likes
20,708
Location
Germany
#5
தனுஷ் படங்களையும், தன் மகன்கலைச்செல்வனின் படங்களையும் வைத்துப் பார்த்துக் கொண்டே காலம் தள்ளுகிறார் தாய் மீனாள்.."உறுதியாய் சொல்றேன். என் மகன் கலைசெல்வன் தான் தனுஷ். பெத்தவளுக்கு தெரியாதா.?பிள்ளை யாரென்று..? என்கிறார் தாய் மீனாள். தனது மகன் யாருக்கோ பயப்படுவதாக சொல்லி அழுகிறார்.
இதே போல் தனுஷ் திருமணத்தின் போதும் ஒரு ஆசாமி கிளம்பி வந்து எங்களதுபிள்ளை தனுஷ். திரும்பத் தாருங்கள் என கேட்க கஸ்தூரி ராஜா வடபழனி காவல் நிலையத்தில் புகார்செய்து பிரச்சனை தீர்ந்தது.

இது ஒருபுறமிருக்க தனுஷின் இளவயது படம் தந்தை மற்றும் அண்ணன் செல்வராகவன் , அக்காவுடன் இருப்பது இருக்கிறது. ஆகவே இது போன்ற பிரபலங்களுக்கு இது ஒரு பிரச்சனை. கலைச்செல்வன் தான் நேரில் வந்து இதற்கு விடை சொல்ல வேண்டும். தற்போது இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்று ஜனவரி 12 ஆம் தேதி நேரில் ஆஜராக நடிகர் தனுஷுக்கு சம்மன் அனுப்பி உள்ளார் மேலூர் மாஜிஸ்ட்ரேட்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,092
Likes
20,708
Location
Germany
#6
[h=2]யாரோ ஒருத்தர் தனுசை எனது மகன் என்கிறார்: படவிழாவில் கஸ்தூரி ராஜா வேதனை[/h]
சென்னை வடபழனியில் நடந்த வி.கே.மாதவன் தயாரித்து ஜெய் செந்தில்குமார் இயக்கத்தில் அர்ஷா-சாரா ஜோடியாக நடித்துள்ள ‘பார்க்க தோணுதே’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தனுசின் தந்தையும், டைரக்டருமான கஸ்தூரிராஜா கலந்து கொண்டார். அப்போது தனுஷ் பற்றி எழுந்துள்ள சர்ச்சைக்கு அவர் விளக்கம் அளித்து கஸ்தூரிராஜா பேசியதாவது:-

“நடிகர் தனுஷ் எனது மகன்தான். இதில் சந்தேகம் இல்லை. நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அப்போது எனக்கு 4 ஆயிரம் ரூபாய்தான் சம்பளம் கிடைத்தது. குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக நகர்ந்தது. எங்களுக்கு செல்வராகவனும் தனுசும் மகன்களாக பிறந்தார்கள். ஒரு மகளும் உள்ளார். செல்வராகவனுக்கு நடிக்க ஆசை இருந்தது. ஆனால் அவர் இயக்குனராகி விட்டார்.

தனுசுக்கு நடிப்பில் விருப்பம் இல்லை. பள்ளியில் தனுஷ் படித்துக்கொண்டு இருந்தபோது ‘துள்ளுவதோ இளமை’ படத்தை எடுக்க தயாரானேன். அந்த படத்தில் தனுசை நடிக்க வைக்க முடிவு செய்தேன். தனுசிடம் அதில் நடிக்கும் படி கேட்டபோது எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்று சொல்லி ஒதுங்கினார். ஆனாலும் வற்புறுத்தி அந்த படத்தில் நடிக்க வைத்தேன்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு என் வாழ்க்கையில் இருந்த சந்தோஷம் இப்போது இல்லை. பெயர் புகழ். பணம் எல்லாம் வந்து விட்டது. ஆனாலும் அப்போதைய மகிழ்ச்சி இல்லை. யாரோ ஒருத்தர் தனுசை எனது மகன் என்கிறார். தனுஷ் எனது மகன். என்னுடைய மகனேதான்.”

இவ்வாறு கஸ்தூரி ராஜா பேசினார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,092
Likes
20,708
Location
Germany
#7
[h=2]தனுஷ், கஸ்தூரிராஜாவின் மகன் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்த விசு[/h]

விசு வெளியிட்ட போட்டோ ஆதாரம்

நடிகர் தனுஷ் யாருடைய மகன் என்ற சர்ச்சை கடந்த சில நாட்களாக நீடித்து வருகிறது. நடிகர் தனுஷ் எங்களுடைய மகன் என மேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாள் தம்பதியினர் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். இதற்காக அவர்கள் நீதிமன்றத்துக்கே சென்றுள்ளனர்.

தனுஷ் எங்களுடைய மகன் என்பதை நிரூபிக்க மரபணு சோதனை செய்யவும் நாங்கள் தயார் என கூறுகின்றனர் அந்த திடீர் பெற்றோர்கள். இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான விசு அளித்த பேட்டியில் தனுஷ் கிருஷ்ணமூர்த்தியின் மகன் தான் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்.

அவர் கூறுகையில், என்னிடம் 15 படங்களுக்கு மேல் உதவி இயக்குனராக கிருஷ்ணமூர்த்தி என்ற கஸ்தூரி ராஜா வேலை செய்தார். இவரின் குடும்பம் ஏழ்மையில் இருந்தபோதிலிருந்து பார்த்து வருகிறேன். தனுஷை நான் சிறுவயதிலிருந்தே பார்த்திருக்கிறேன் என்று அடித்து கூறுகிறார். மேலும் அவர் தன்னுடன் தனுஷ் குடும்பம் இருந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் அதில் சிறு வயது தனுஷும் உள்ளார்.


 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,092
Likes
20,708
Location
Germany
#8
[h=1]மேலூர் நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் மனு[/h]
'நடிகர் தனுஷ், சிறு வயதில் காணாமல் போன எங்கள் மகன். அவரை எங்களிடம் சேர்க்க வேண்டும்' என்று மேலூரைச் சேர்ந்த தம்பதியினர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். தற்போது, அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று நடிகர் தனுஷ் சார்பில் மேலூர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
16,382
Likes
3,099
Location
India
#9
[h=2]நடிகர் தனுஷின் அசல் கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க ஐகோர்ட்டு உத்தரவு[/h]


மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் மேலூர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘சினிமா நடிகர் தனுஷ் எங்களுடைய மகன். வயதான எங்களுக்கு அவர் பராமரிப்பு செலவுக்கான தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

அவர்கள் பொய்யான தகவல்களுடன் வழக்கு தொடர்ந்து உள்ளனர். அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பினரும் தங்களிடம் உள்ள பள்ளி மாற்றுச்சான்றிதழ் உள்ளிட்ட ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறு கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இரு தரப்பினரும், தனுஷ் படித்ததாக கூறப்படும் பள்ளிகளின் வருகைப் பதிவேடு, மாற்றுச்சான்றிதழ்களின் நகல்களை சமர்பித்தனர்.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, அசல் ஆவணங்களை சமர்பிக்க உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை நாளை (17-ந்தேதி)க்கு ஒத்திவைத்தார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
16,382
Likes
3,099
Location
India
#10
[h=2]மகன் என உரிமை கோரி தொடர்ந்த வழக்கு: தனுஷ் நேரில் ஆஜராக மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு[/h]
மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர், நடிகர் தனுஷ் எங்களுடைய மகன், எங்களுக்கு வயதாகி விட்டதால் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கு பொய்யானது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் நடிகர் தனுஷ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இரு தரப்பினரிடமும் உள்ள நடிகர் தனுசின் பள்ளி மாற்று சான்றிதழ்களை தாக்கல் செய்யுமாறு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டு இருந்தது. அதன்படி இருதரப்பினரும் சான்றிதழ்களை தாக்கல் செய்தனர்.


நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சான்றிதழ்களில் அங்க மச்சம் அடையாளம் குறிப்பிடவில்லை என எதிர்தரப்பினர் வாதிட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று, நீதிபதி சொக்கலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகர் தனுசின் அங்கமச்ச அடையாளம் காண அவர் வருகிற 28-ந்தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை அன்றைக்கு ஒத்தி வைத்தார்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.