யோகாசனம் செய்தால் கர்ப்பப்பை பலப்படும்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
யோகாசனம் செய்தால் கர்ப்பப்பை பலப்படும்

உடல், மனம் இரண்டும் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் முக்கியமான ஒன்று மாதவிடாய் பிரச்னை. இந்த பிரச்னையை, யோகா மூலம் எப்படி தீர்ப்பது? வாழ்க்கை முறை மாற்றங்களால் இன்று, பெண்களின் உடல் தசைகளின் இயக்கம் குறைந்து விடுகிறது. தவிர, பலர் பசியைத் தணிக்கவோ, அல்லது போரடிக்கிறது என்றோ ஜங்க் புட்ஸ் எனும், ரெடிமேட் வகை உணவுகைள சாப்பிட பழகி விட்டார்கள். முன் காலத்தில் இடுப்புச் சதைகளுக்கு வலிமை தரும், உளுந்து கலந்த உணவை அதிகமாக சாப்பிட்டார்கள்.


தற்போதோ இடுப்பிலும், உடம்பிலும் சதை போடும் இனிப்பு, ஐஸ்கிரீம், சிப்ஸ் போன்ற வறுத்த, பொரித்த உணவுகளை சாப்பிடுவதால் இடுப்புப் பகுதியிலும், கர்ப்பப்பையிலும் கொழுப்பு தேங்கி விடுகிறது. இதைக் கரைப்பதற்கென்று தனியாக எந்த வேலையையும் செய்வதில்லை. முன்பு ஆட்டுக்கல், அம்மிக்கல் போன்றவற்றில் இடுப்பை அசைத்துச் செய்யும் வேலைகள் அதிகமாக இருந்தது. இப்போதோ அந்த வேலைகளை கிரைண்டர், மிக்ஸி போன்ற சாதனங்கள் செய்து விடுகின்றன. இதனால் சத்துக்கள் எல்லாம் இடுப்பில் தேங்கி விடுகிறது.


சினைப்பையில் தேங்கும் நீர், கொழுப்பு காரணமாக நீர் கட்டிகள், கொழுப்பு கட்டிகள் உருவாகின்றன. இதனால் ஹார்மோன் சுரப்பு தடைபட்டு, மாதவிடாய் பிரச்னைகள் வருகின்றன. அழுகையை அடக்கும் போது டென்ஷன் அதிகமாகி, இடுப்புப் பகுதி தசைகளில் இறுக்கம் ஏற்படுகிறது. இந்த இறுக்கம் கர்ப்பப்பையை பாதிக்கிறது. இதைத்தான் பெண் மருத்துவர்கள் மருத்துவ ரீதியாக, நாம் அழாமல் இருந்தால், நமது கர்ப்பப்பபை அழும் என்பர்.

இந்த பிரச்னைகள் வராமல் தடுக்கவும், வந்தால் சரி செய்யவும் என்ன செய்ய வேண்டும்?

இடுப்பு பகுதியில், இருக்கும் கரத்திற்குப் பெயர், ஸ்வாதிஷ்டானம்.

இந்த கர திதான், இடுப்புப் பகுதியின் இயக்கத்தையும் மனவலிமையையும் சீராக வைக்கிறது. ஸ்வாதிஷ்டான கர தியை பலப்படுத்தும், மர்ஜரியாசனம், புஜங்காசனம், தனுராசனம், அர்த்தசலபாசனம், பச்சி மோத்தாசனம் போன்ற யோகாசனங்கள் இடுப்பு பகுதியை சீராக இயக்க வைத்து, கர்ப்பப்பையை
பலப்படுத்துகின்றன.

அடிவயிற்றில் உள்ள கொழுப்பு கரையவும் உதவுகின்றன. இந்த ஆசனங்களை ஒரு பயிற்சி பெற்ற ஆசிரியரின் மேற்பார்வையில்தான் செய்யவேண்டும்.

இதற்கான உணவு முறை என்ன?

தினமும், ஏதாவது ஒருவேளை, சமைத்த உணவிற்கு பதிலாக நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்களை சாப்பிட்டால், ஸ்வாதிஷ்டானத்தில் சக்தி அதிகமாகும். இந்த கரம், நீர் ஆதாரத்தைக் கொண்டதால், நீர்ச்சத்து சேரும் போது சக்தி அதிகரிக்கிறது. நார்ச்சத்தோ, கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.
வாரத்தில் இரண்டு நாளாவது உளுந்து மாவு சேர்ந்த (புளிக்காத) உணவைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மாதவிடாய் நேரங்களில் உளுந்துக் களியை தினமும் சாப்பிடலாம். இந்த உளுந்து உணவுகள், எலும்பை பலப்படுத்தும். வாயு மற்றும் எண்ணெய் சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

 

Attachments

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#2
Re: யோகாசனம் செய்தால் கர்ப்பப்பை பலப்படும&#302

Very good info, Latchmy.
Vayiru matrum iduppu perukkam than indraya pengalin muthal pirasai.
Thanks for sharing.
 

XXXXXX

Friends's of Penmai
Joined
Jul 23, 2011
Messages
155
Likes
98
Location
dddddd
#3
Re: யோகாசனம் செய்தால் கர்ப்பப்பை பலப்படும&#302

Very good info
 

premabarani

Commander's of Penmai
Joined
May 25, 2012
Messages
2,397
Likes
6,995
Location
Doha,Qatar
#5
Re: யோகாசனம் செய்தால் கர்ப்பப்பை பலப்படும&#302

Hi Chan
Useful info.
Thankyou
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.