ரூம் ஸ்ப்ரே பயன்படுத்தலாமா?

chan

Well-Known Member
#1
ரூம் ஸ்ப்ரே பயன்படுத்தலாமா?உடலில் அடிக்கும் ஸ்ப்ரேக்களிலேயே இவ்வளவு ரசாயனங்கள் என்றால், வீடு புத்துணர்வாக இருக்க அடிக்கும் ஸ்ப்ரேக்களால் என்ன பாதிப்பு வரும்?

“ஆல்கஹால் மற்றும் வீரியமிக்க கெமிக்கல்களில் தயாரிக்கப்படும் ரூம் ஸ்ப்ரேக்களை ஏ.சி அறை, கதவு, ஜன்னல் மூடிய அறையில் அடித்தால் சிலருக்கு அலர்ஜி, இளைப்பு, சரும எரிச்சல் வரலாம். ஆஸ்துமா நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படலாம். அதேபோல் குழந்தைகள், கர்ப்பிணிகள், சுவாசப் பிரச்னை இருப்பவர்கள் இருக்கும் அறையில் ரூம் ஸ்ப்ரே பயன்படுத்தக் கூடாது. இயற்கையான முறையில் தயாராகும் டீ ட்ரீ ஆயில், லாவண்டர், அரோமா, சந்தனம் ஆகியவை ஸ்டிக் வகைகளிலும், எண்ணெய் வகைகளிலும் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்துவதால், எந்தவிதப் பாதிப்புகளும் ஏற்படாது. துர்நாற்றம் நீங்கி, வீட்டின் அறையே சுகந்தமான வாசனையில் நம்மை சுண்டியிழுக்கும்.”

 
Last edited: