ரூ.55 கோடி திருமணம் : யார் இந்த ரவி பிள்ளை?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ரூ.55 கோடி திருமணம் : யார் இந்த ரவி பிள்ளை?
அண்மையில் கேரளத்தில் ரூ. 55 கோடியில் ஒரு திருமணம் நடைபெற்றது. மகள் திருமணத்தை பிரமாண்டமாக மட்டும் நடத்தவில்லை. இதையொட்டி பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.10 கோடி ரூபாய்க்கு மேல் நிதியுதவி செய்துள்ளதாக ரவி பிள்ளை தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல திருமணங்கள் கோடி கணக்கில் செலவழித்து நடத்தப்பட்டாலும் அண்மையில் நடந்த திருமணங்களில் அனைவரையும் ஈர்த்தது, இந்த திருமணம்தான். சரி யார் இந்த ரவி பிள்ளை?

கேரளத்தில் கொல்லம் அருகேயுள்ள சாவாரா என்ற கிராமத்தில் சாதாரண விவசாயிக்கு மகனாக பிறந்த இவர், அங்குள்ள கல்லூரி ஒன்றில் டிகிரி படித்தார். பின்னர் கொச்சியில் எம்.பி.ஏ படிப்பு.சேமிப்பில் அக்கறை கொண்ட கேரள மக்களை பார்த்து முதலில் சீட்டு தொழிலில்தான் ரவி பிள்ளை இறங்கினார். தொடர்ந்து கான்டிரக்ட் தொழில், கட்டுமான தொழிலில் கால் பதித்த ரவி பிள்ளை, திருவாங்கூர் பெர்டிலைசர், ஹிந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட் மற்றும் கொச்சின் ரிஃபெரனைரிஸ் நிறுவங்களுக்காக சில பணிகளை மேற்கொண்டார்.

எனினும் தொழிலாளர் பிரச்னை காரணமாக இந்த தொழில்களை கைவிட்டு விட வேண்டிய நிலை. பின்னர் 1978ஆம் ஆண்டு சவுதிக்கு சென்ற ரவி பிள்ளை, முதலில் சவுதியில் நாஸர் அல் ஹாஜ்ரி என்ற கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து தொழிலை தொடங்கினார். 150 பணியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் படிப்படியாக வளர்ந்தது. பின்னர் ஆர்.பி என்று பெயர் மாற்றப்பட்டு, இன்று 70 ஆயிரம் ஊழியர்கள் பணி புரியும் ஆர்.பி குழுமமமாக வளர்ந்து நிற்கிறது. பஹ்ரைன்,கத்தார், அமீரகம் மற்றும் கிழக்காசிய நாடுகளில் 26க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இன்று வளைகுடா நாடுகளிலேயே, இவரது ஆர்.பி குழுமம்தான் முன்னணி கட்டுமான நிறுவனம் ஆகும்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இதழ், உலகின் 988ஆவது பணக்காரராக இவரை தேர்வு செய்தது. இந்தியாவை பொறுத்தவரை 30வது பணக்காரர் ஆவார். வளைகுடா நாடுகளை பொறுத்தவரை மிகவும் சக்தி வாய்ந்த 4வது இந்திய பிரமுகர் ஆவார். கடந்த 2010ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. தற்போது 62 வயது நிரம்பிய ரவி பிள்ளை கீதா தம்பதியருக்கு கணேஷ், ஆர்த்தி என இரு குழந்தைகள். இதில் ஆர்த்தி- மருத்துவர் ஆதித்யா விஷ்ணு திருமணம்தான் கொல்லத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன் நடைபெற்றது.

இந்த திருமணத்திற்காக கொல்லம் ஆஷ்ரம் மைதானத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் 3.50 லட்சம் சதுரடியில் பிரமாண்டமான செட் போடப்பட்டது. 'பாகுபலி 'பட புகழ் ஆர்ட் டரைக்டர் சாபு சிரில், மூன்று மாதங்களாக உழைத்து இந்த பிரமாண்ட செட்டினை வடிவமைத்தார். இதற்காக மும்பையில் முதலில் இந்த செட்கள் அனைத்தும் களிமண்ணால் வார்ப்படமாக உருவாக்கப்பட்டது. பின் ‘பிளாஸ்டர் ஆப் பாரிஸ் ‘மூலம் அவைகள் இணைக்கப்பட்டன. இதற்கே 40 நாட்கள் பிடித்துள்ளது.
திருமண செட் போடுவதற்கு மட்டுமே ரூ.23 கோடி செலவாகியுள்ளது. அதோடு 30 ஆயிரம் விருந்தினர்கள் அமரும் வகையில் பிரமாண்டமான பந்தலும் போடப்பட்டிருந்தது. மணமேடை மட்டும் விரிந்த தாமரை இதழ் போல அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

சவுதி, அமீரகம், குவைத்,கத்தார் அரச குடும்பத்தினர் பலர் தனி விமானங்களில் திருமணத்தில் பங்கேற்க வந்திருந்தனர். மற்றும் ஏராளமான வெளிநாட்டு பிரதிநிதிகளும் திருமணத்தில் பங்கேற்றனர். ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்கள் மம்முட்டி உள்ளிட்ட கேரள நட்சத்திரங்களும் திருமணத்தில் பங்கேற்றனர். நடிகைகள் மஞ்சு வாரியார், ஷோபனா ஆகியோரது நடன நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. கர்நாடக இசை புகழ் காயத்ரியின் பக்தி இசை கச்சேரியும் நடைபெற்றது.

திருமண பாதுகாப்பு பணியை கேரள போலீசாருடன் இணைந்து தனியார் பாதுகாப்பு நிறுவனம் மேற்கொண்டிருந்தது. அந்த வகையில் 600 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருமண விருந்தில் உள்நாட்டு உணவு வகைகளுடன் வெளிநாட்டு உணவுகளும் இடம் பெற்றிருந்தன.இந்த திருமணத்திற்காக மொத்தம் ரூ.55 கோடி செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து ரவிபிள்ளை கூறுகையில், ''எனது மகள் திருமணத்தை பிரமாண்டமாக நடத்தி காட்ட வேண்டுமென்பது மட்டும் எனக்கு நோக்கமில்லை. இந்த திருமணத்தையொட்டி பல்வேறு மக்கள் நலப்பணிகளையும் மேற்கொண்டுள்ளேன். முக்கியமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அறக்கட்டளைகள் , பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு ரு.10 கோடிக்கு மேல் என நிதியுதவி அளித்துள்ளேன்'' என்றார்.

 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
பாகுபலி அரண்மனை செட் அமைத்து கேரள தொழில் அதிபர் மகளுக்கு ரூ.55 கோடி செலவில் திருமணம்


கேரள மாநிலம் கொல்லத்தில் நகரின் மைய பகுதியில் உள்ள 8 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. சமீபத்தில் இப்பணி நிறைவு பெற்று உள்ளூர் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அந்த பந்தல் சமீபத்தில் திரைக்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 'பாகுபலி' படத்தின் பிரமாண்ட அரண்மனை போல் காட்சி அளித்தது. மயன் சிருஷ்டித்த இந்திரலோகம் போல் மின் விளக்கில் அரண்மனை ஜொலித்தது. ஊரெங்கும் இந்த பந்தல் பற்றியும், அங்கு என்ன நடக்கப் போகிறது? என்பது பற்றியும் பேச்சாக இருந்தது.

இதுபற்றி விசாரித்தபோது, கேரளாவைச் சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர் ரவி பிள்ளையின் மகள் டாக்டர். ஆர்த்திக்கும், கொச்சியைச் சேர்ந்த டாக்டர். ஆதித்யா விஷ்ணுவுக்கும் இன்று திருமணம் நடக்க இருக்கிறது என்று தெரிய வந்தது.

இதற்காகவே இந்த பந்தலில் 'பாகுபலி' அரண்மனை போல் 8 ஏக்கரில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டிருந்ததை அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் தெரிவித்தனர். 'பாகுபலி' படத்தின் கலை இயக்குனர் சாபு சிரில்தான் இதனை நிர்மானித்திருந்தார்.

இதுபற்றி சாபுசிரிலிடம் கேட்டபோது, 'பாகுபலி' படத்தின் அரண்மனையை உருவாக்க 2½ ஆண்டுகள் ஆனது. அது 5 ஏக்கரில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இங்கு 8 ஏக்கரில் 3 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடி பரப்பில் ராஜஸ்தான் அரண்மனை வடிவில் இந்த செட் உருவாக்கப்பட்டுள்ளது. 30 ஆயிரம் விருந்தினர்கள் ஒருசேர அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பந்தலையும், அரண்மனையையும் உருவாக்க ரூ.20 கோடி செலவு ஆகி உள்ளது.

200–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதை உருவாக்கினர் என்றார்.

தொழில் அதிபர் ரவி பிள்ளையின் மகள் திருமணத்தையொட்டி திருவனந்தபுரம் மற்றும் கொல்லத்தில் உள்ள அறக்கட்டளைகளுக்கு ரூ.10 கோடி வரை நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. திருமணத்தில் ஐக்கிய அரபு எமிரேட்டின் இந்திய தூதர், பக்ரைன் ராஜ குடும்ப பிரதிநிதி கத்தார் நாட்டின் அரச குடும்பத்தினர், சவுதி அரேபியா நாட்டின் மன்னர் குடும்பத்தினர், லெபனான் நாட்டின் தூதர் உள்ளிட்ட 42 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.

இவர்களை தவிர பாலிவுட், ஹாலிவுட் மற்றும் கேரள திரையுலக நடிகர், நடிகைகள், அரசியல் பிரமுகர்கள், மத்திய மந்திரிகள், தொழில் அதிபர்களும் மணமக்களை வாழ்த்த நேரில் வருகிறார்கள். இவர்களுக்காக தனி விமானங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு மற்றும் உள்நாட்டு உணவு வகைகளும் திருமண விருந்தில் இடம் பெறுகிறது. திருமண செலவு மட்டும் ரூ.55 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.

ரவி பிள்ளை வளைகுடா நாட்டிலும், கிழக்கு ஆசிய நாடுகளிலும் கட்டுமானம், கனிம மற்றும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். 26–க்கும் மேற்பட்ட நாடுகளில் இவரது நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இங்கு 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்க்கிறார்கள்.
சமீபத்தில் ஆங்கில பத்திரிகை ஒன்று நடத்திய ஆய்வில் கேரளாவைச் சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்களில் ரவி பிள்ளைதான் முதல் பணக்காரர் என்று வெளியிட்டிருந்தது. இவரது வருமானம் 2.8 பில்லியன் டாலர் என்றும் கூறப்பட்டது.

ரவி பிள்ளை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ்களை அளித்தபோது அழைப்பிதழுடன் விலை உயர்ந்த பட்டுச்சேலை, பட்டு வேஷ்டி, அங்க வஸ்திரம் ஆகியவற்றையும் வழங்கினார். திருமண நாளில் விழாவுக்கு வருவோர் அனைவரும் பட்டு வேஷ்டி, பட்டுச்சேலையில் ஜொலிப்பார்கள்.
 
Last edited:

sharamsn

Commander's of Penmai
Joined
Aug 4, 2015
Messages
1,344
Likes
2,124
Location
puducherry
#3
This wedding expenses cost 50 crores in 8 acars land and about 30000 guests from 42 countries...participated...
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,860
Likes
140,750
Location
Madras @ சென்னை
#4
TFS friend.

:thumbsup​
 

sarayu_frnds

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 26, 2011
Messages
6,751
Likes
17,030
Location
Bodinayakanur
#5
adiyaaaathhttttiiiiiiiiiiiiiiiii
 

pet

Friends's of Penmai
Joined
Mar 28, 2012
Messages
303
Likes
360
Location
cochin
#6
:) happy wedding
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.