லக்ஷ்மி குபேர பூஜை - Lakshmi Kubera Pooja!

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,098
Likes
76,890
Location
Hosur
#1

கருணைக் கடலான திருமகள், திருமாலை மணந்த தினமாக, தீபாவளித் திருநாள் கருதப்படுகின்றது. அன்றைய தினம், திருமகளையும், செல்வத்துக்கு அதிபதியும், சிறந்த சிவபக்தனுமான குபேரனையும் வழிபடுவது சிறப்புகள் பல தர வல்லது.

குபேர பூஜை செய்யும் முறை:

பூஜை தொடங்குவதற்கு முன்பு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு இடையில் எழுந்திருக்காமல் மனதை ஒருமுகப்படுத்திச் செய்ய வேண்டும். பூஜை தொடங்கும் முன் ஒரு முறை குளிக்கலாம். காலையில் குளித்திருந்தால் மஞ்சள் நீர் தெளித்துக்கொண்டு, சிவப்பு நிறப் புடவையை அணிய வேண்டும். இரண்டு குத்து விளக்குகள், ஒரு காமாட்சி தீபம் ஏற்றி பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

தீபாவளி கொண்டாடும் ஐப்பசி மாத அமாவாசை மிகுந்த நல்ல நாளில் மாலை 6 மணிக்கு மேல் குபேரனை நினைத்து பூஜை செய்தால், செல்வம் பெருகும். குடும்பம் நலம் அடையும். குபேரனின் திருவுருவப் படத்திற்கு பூமாலைச் சாற்றி 12 அகல் விளக்கை ஏற்றி வைத்து பால் பாயசம் செய்து, நைவேத்தியம் செய்ய வேண்டும். பூ, அட்சதையை கையில் எடுத்துக் கொண்டு 12 முறை இந்த ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்.

த்வாதஸ லிங்கஸ்துதி:

சௌராஷ்ட்ரே
ஸோமனாதஞ்ச ஸ்ரீசைல்யே
மல்லிகார்ஜூனம் உஞ்சைன்ய
மஹாகாளீம் ஓங்கார மமலேஸ்வரம்
பால்யம் வைத்யனாதஞ்ச டாகின்யாம்
பீமஸங்கரம் ஸேது பந்தேது ராமேஸம்
நாகேஸம் தாறுகாவனே
வாரணஸ்யாம்ஸூ விஸ்வேஸம்
த்ரியம் பகம்கௌதமீதடே
ஹிமாலயேது கேதாராம் குஸ்மேஸஞ்ச
சிவாலயே ஹேதானி ஜ்யோதி லிங்கானி
ஸாயங்கால ஹபடேர் நித்தயம்
ஸப்த ஜன்மக்ருதம் பாபம்
ஸ்மரணேன வினிஸ்யதி:

குபேர நாமாவளி:

ஓம் குபேராய நம:
ஓம் நரவாகனாய நம:
ஓம் சிவஸகாய நம:
ஓம் ஸ்ரீநிவாச ஸந்துஸ்டாய நம:
ஓம் பம்மாவதி ப்ரிய அனுஜாய நம:
ஓம் யக்ஷராஜாய நம:
ஓம் தனதான்யாதிபதயே நம:
ஓம் மணி பத்ரார்ச்சிதாய நம:
ஓம் மான்யாய நம:
ஓம் மஹனீயாய நம:
ஓம் மஹார்ஹ மணி பூஷணாய நம:
ஓம் ஸ்ரீவித்யா மந்த்ர உபாஸஹாய நம:
ஓம் ஸ்ரீ லலிதாம்பிகா ப்ரிய பக்தாய நம:
ஓம் திக்பாலாய நம:
ஓம் நவநாயகாய நம:
ஓம் நிதினாம் பதயே நம:

பின் குபேரனுக்குரிய சுலோகம், அர்ச்சனைகளைச் செய்து பால் பாயசத்தை நைவேத்தியம் செய்த பின் கற்பூர ஆரத்தி எடுத்து, குங்குமத்தைக் கரைத்து, அதையும் ஆரத்தி எடுத்து நிறைவு செய்யவேண்டும்.

குடும்பத்தில் அனைவரும் இதில் கலந்து கொண்டு செய்வது நல்லது. பூஜை முடிந்தபின் எல்லோரும் பூ, அட்சதையைச் சேர்க்க வேண்டும். பூஜை செய்யும் முன் குபேரன் படத்தருகே வீட்டில் உள்ள காசு, பணம், வெள்ளிப் பத்திரங்கள், தங்க நகைகள் எல்லாவற்றையும் வைத்து அலங்கரிக்க வேண்டும். இந்தப் பொருள்களிலும் அட்சதையைச் சேர்த்து நமஸ்கரிக்க வேண்டும்.

அக்கம் பக்கம் உள்ளவர்களும் வந்து இதைப் பார்க்கச் சொல்லி அவர்களையும் அட்சதைப் போடச் சொல்லி அவர்களுக்கு பால் பாயசத்தைக் கொடுத்து வெற்றிலைப் பாக்கு, தாம்பூலம் தருதல் நல்லது. குபேரனுக்குப் பிடித்த பிரசாதம் பால் பாயசம். அதனால் தான் அன்று இதைச் செய்து நைவேத்தியம் செய்வது வழக்கம்.

ஓம் யஷயாய குபேராய வைஸ்ரவனாய
தனதாந்யாதி பதயே
தநதாந்ய ஸம்ரும்திம்மே,
தேஹி தபாயஸ்வாஹ!

என்ற குபேர மந்திரத்தை தினமும் சொல்லி குபேரனின் பேரருளைப் பெறுவோம்.

மனம் ஒன்றி, இம்மாதிரி பூஜைகள் செய்வது, நிச்சயம், குடும்ப ஒற்றுமை, மன அமைதி முதலியவற்றைத் தரும். ஒற்றுமையான, சச்சரவுகளற்ற குடும்பத்தில், திருமகள் நித்தமும் வாசம் செய்கிறாள். நமக்குத் தேவை என்பதே ஏற்படாத வண்ணம் நல்லருள் புரிகின்றாள்.

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Oct 2016. You Can download & Read the magazines HERE.
 

Attachments

Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.