லப்டப் தேவை கூடுதல் கவனம்!

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1


[h=2]சீரற்ற இதயத் துடிப்பு நோய் வாரம் ஜூன் 1-7[/h]மனித உடலில் மார்புக் கூட்டுக்குள் பத்திரமாக உள்ள இதயம்தான், மனிதர் உயிர் வாழ முதன்மை ஆதாரம். இதயம் தன் செயல்பாட்டை நிறுத்திவிட்டால் மனிதனின் இயக்கமும் நின்றுவிடும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இதயம், அதிகமாகத் துடித்தாலும் ஆபத்து; குறைவாகத் துடித்தாலும் ஆபத்து. இந்தப் பிரச்சினை ‘அரித்மியா’ (cardiac arrhythmia) என்றழைக்கப்படும் சீரற்ற இதயத் துடிப்பு நோய்க்கு வழிவகுத்துவிடும். இதிலிருந்து தற்காத்துக்கொள்வதே நமது ஆரோக்கியத்துக்கு அடிப்படை. அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்:
இதயக் கோயில்
# இதயம் என்பது ஒரு உடல் உறுப்பு மட்டுமல்ல. உடலின் ஒவ்வொரு மூலைக்கும் ரத்தத்தைப் பம்ப் செய்து அனுப்புவது இதயம்தான்.
# இரவில் நாம் நிம்மதியாகத் தூங்கும்போதும்கூட இதயம் இடை விடாமல் வேலை செய்துகொண்டே இருக்கும். இதயம், ஒரு நாளைக்குச் சராசரியாக ஒரு லட்சம் முறை துடிக்கிறது.
லப்டப் கணக்கு
# ஒரு நிமிடத்துக்கு இதயம் எத்தனை முறை துடிக்கிறதோ, அதை வைத்துத்தான் இதயத் துடிப்பு விகிதத் தைக் கணக்கிடுகிறார்கள்.
# சாதாரணமாக ஓய்வு நேரத்தில் வயதுவந்தவர்களுக்கு 60 - 100 வரை இதயத் துடிப்பு இருக்க வேண்டும். 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 70-100 வரை இதயத் துடிப்பு இருக்க வேண்டும். இதயத் துடிப்பு 100-ஐத் தாண்டினால் மிகைத் துடிப்பு நோய் என்று அர்த்தம், 60-க்குக் கீழ் குறைந்தால் குறைத் துடிப்பு ஆகும்.
# இதயத் துடிப்பு என்பது எல்லோருக்கும் ஒரே சீராக இருக்காது. பிறந்த சிசு முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்வரை ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்றவாறு இதயத் துடிப்பு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்.
# மனிதர்கள் செய்யக்கூடிய பணிகளைப் பொறுத்து இதயத் துடிப்பு மாறும். தொலைக்காட்சி பார்க்கும்போது, படுத்திருக்கும்போது இதயத் துடிப்பு குறைவாக இருக்கும். விளையாடினாலோ, மிகவும் உற்சாகமாக இருந்தாலோ இதயத் துடிப்பு அதிகமாக இருக்கும்.
# இதயத் துடிப்பு என்பது சீராக இருக்க வேண்டும். அது ஒழுங்கற்று இருந்தால் இதய நோய்க்குச் சிவப்புக் கம்பளம் விரித்துவிடும். இதயத் துடிப்பு அதிகமாக இருந்தாலோ, குறைவாக இருந்தாலோ அல்லது ஒழுங்கற்று இருந்தாலோ, அதைச் சீரற்ற இதயத் துடிப்பு நோய் என்று மருத்துவ உலகம் கூறுகிறது.
அறிகுறிகள்
# சீரற்ற இதயத் துடிப்பு நோய் இருக்கிறதா, இல்லையா என்பதைச் சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும். படபடப்பு, மயக்கம், மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, மயக்கம் வரும் உணர்வு போன்ற பிரச்சினைகள் இருந்தால் சீரற்ற இதயத் துடிப்பு நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
# அறிகுறிகளை மட்டும் வைத்துச் சீரற்ற இதயத் துடிப்பு நோய் வந்துள்ளது என்று நீங்களே முடிவு செய்துவிடக்கூடாது. அறிகுறிகள் தொடர்ந்து வெளிப்பட்டாலோ அல்லது சங்கடமாக உணர்ந்தாலோ மருத்துவரை அணுகிப் பிரச்சினையை அறிய வேண்டும்.
துடிப்பை அறிய...
# இதயத் துடிப்பை நாடியைத் தொட்டுப் பார்த்து மிக எளிதாக அறியலாம். நாடி மட்டுமல்லாமல், முழங் கையை மடக்கும் பகுதி, கவட்டி என்றழைக்கப்படும் இடுப்பும் தொடையும் சேரும் இடம், காதுக்குக் கீழே கழுத்துப் பகுதியிலும் இதயத் துடிப்பை உணரலாம்.
# சீரற்ற இதயத் துடிப்பு நோய் இருக்கிறதா என்பதை அறிய இதயத் துடிப்பை ஒரு முறை மட்டும் பார்ப்பதன் மூலம் அறிந்துகொள்ள முடியாது. குறிப்பாக, ஒரு இடத்தில் இதயத் துடிப்பைப் பார்த்துவிட்டு எந்த முடிவுக்கும் வரக்கூடாது. வெவ்வேறு இடங்களிலும் துடிப்பைப் பார்க்க வேண்டும். ஒரு பணியைத் தொடங்குவதற்கு முன்பும் பின்னரும் இதயத் துடிப்பைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
# செய்யும் பணிகளுக்கு ஏற்ப இதயத் துடிப்பு மாற வேண்டும். ஓய்வு நேரத்தில் குறிப்பாகக் காலையில் படுக்கையில் இருந்து எழுந்த பிறகோ அல்லது இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்போ இதயத் துடிப்பு விகிதத்தை அறியலாம்.
பாதிப்புகள்
# சீரற்ற இதயத் துடிப்பைப் பலரும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். சீரற்ற இதயத் துடிப்பு உள்ளவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம், இதயம் செயலிழப்பு போன்ற கடுமையான பிரச்சினைகள் ஏற்படலாம். சீரற்ற இதயத் துடிப்பால், உலகில் ஏராளமானோர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
# சீரற்ற இதயத் துடிப்பு உள்ளவர்களுக்கு இதயம் ரத்தத்தைப் பம்ப் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டு மூளைக்குப் போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகலாம். எனவே, இந்தப் பிரச்சினை உள்ளவர்களுக்கு அடிக்கடி மயக்கம் வரலாம்.
தடுப்பு முறை
# சீரற்ற இதயத் துடிப்பு பிரச்சினை உள்ளவர்களுக்கு மருந்து, மாத்திரையைவிட ‘பேஸ்மேக்கர்’ கருவி நல்ல பலனைத் தருகிறது. இக்கருவி இதயத் துடிப்பைச் சீராக வைத்துக்கொள்ள உதவுவதால் மருத்துவர்கள் இதைப் பரிந்துரைக்கிறார்கள்.
# குடிப் பழக்கம், புகைப் பழக்கம் மற்றும் அதிக நச்சுத்தன்மை உள்ள குளிர்பானங்கள், காபி போன்ற உணவுப் பொருட்களைக் கைவிடுவதன் மூலம் சீரற்ற இதயத் துடிப்பு நோய் வராமல் தடுக்கலாம். அதன்மூலம் இதய நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வராமலும் பார்த்துக்கொள்ளலாம்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.