லெக்கின்ஸ் ஆபாச உடையா?

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
37,848
Likes
75,306
Location
Chennai
#21
நம்ம வீட்டில் இருக்கும் இளவயது பெண் ஆண் நம்ம கண்ணுக்கு ஐம்பது வயதனாலும் குழந்தையா தான் தெரிவாங்க அக்கா....ஆனா பிறர் கண்ணுக்கு அவங்க முழுமையான ஆண்,பெண்...அதனால் வீட்டில் இருப்பவர் சொல்வது இல்லை..உதாரணம் என் தம்பி பொண்ணு ...நானே சொல்லிட்டேன்..லாங் டாப் போடுன்னு....
நீங்க சொல்றது சரிதான் உமா.........லாங் டாப் போட்டாலும் பறக்காம இருக்க கல்லுதான் கட்டிக்கிட்டு போகணும் போல!!!!!!!இல்லேன்னா காத்து அடிக்காத இடத்துக்குதான் போகணும், ஏன்னா படம் எடுக்கா எல்லா இடத்திலும் தேர்ந்த புகைப்படக் கலைஞர்கள் இருக்காங்க!!!!!!
 

Uma manoj

Guru's of Penmai
Joined
Feb 28, 2012
Messages
5,426
Likes
18,420
Location
Chennai
#22
நீங்க சொல்றது சரிதான் உமா.........லாங் டாப் போட்டாலும் பறக்காம இருக்க கல்லுதான் கட்டிக்கிட்டு போகணும் போல!!!!!!!இல்லேன்னா காத்து அடிக்காத இடத்துக்குதான் போகணும், ஏன்னா படம் எடுக்கா எல்லா இடத்திலும் தேர்ந்த புகைப்படக் கலைஞர்கள் இருக்காங்க!!!!!!
கல் கட்டிக்கிட்டு போகலாமா:confused1:அட இது நல்ல ஐடிவா இருக்கே;)..போடோ எடுத்ததும் பார்த்த உடனே போடவேண்டியது தான்..மவனே அதே கல்லாலே.:p
 
Last edited:

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,147
Likes
14,790
Location
California
#25
லெகின்ஸ் போட்டால் லாங் டாப் போடணும்..ஆனா நம்மாளுங்க சோர்ட் டாப்,டி.ஷர்ட் போட்டு அசிங்கமா இல்லை சுத்துறாங்க..இதை பார்க்க கன்றாவியா இருக்கு...பொண்ணா இருந்து நமக்கே இப்படி அளவை காட்டும் ட்ரெஸ் வக்கிரபுத்தி உள்ள ஆண்கள் பார்த்தால் என்ன செய்வார்கள்???நாம் பேசாம வாய் மூடிட்டு போனாலும் வீட்டில் இதை பத்தி பேச தான் செய்றோம்...இன்னொருத்தர் வாயிலே, போட்டோல ஏன் தானா விழணும்???நான் இவர்களுக்கு சப்போர்ட் செய்யலை..பெண்கள நமக்கு நாமே பாதுகாப்பை உருவாக்கிகணும்....லெகின்ஸ் போடுவது தப்பில்லை..ஆனால் லாங்டாப் போடணும்...அதுவும் பின்புறம் காற்றில் பறக்காமல் கொஞ்சம் திக்கான டாப் போடனும்....
நம்ம வீட்டில் இருக்கும் இளவயது பெண் ஆண் நம்ம கண்ணுக்கு ஐம்பது வயதனாலும் குழந்தையா தான் தெரிவாங்க அக்கா....ஆனா பிறர் கண்ணுக்கு அவங்க முழுமையான ஆண்,பெண்...அதனால் வீட்டில் இருப்பவர் சொல்வது இல்லை..உதாரணம் என் தம்பி பொண்ணு ...அவ அம்மா கண்ணுக்கு தெரிலை...ஆனா நானே சொல்லிட்டேன்..லாங் டாப் போடுன்னு....குழந்தை(15) இதுவரைக்கும் அப்படிதான் போட்டுக்கிறா.....
சிஸ்,
உணர்ச்சி வசப்பாடாமல் நிதர்சமான உண்மையை சொல்லி இருக்கீங்க, தாயின் பார்வையில் இருந்து.


பெண்கள் எப்படி வேணும்னாலும் போடலாம், ஆனா அவங்க மனசுக்கு பிடிச்சதா, கண்ணியமா இருக்கான்னு மட்டும் பார்க்கணும். அத்தோடு அன்றாட நடவடிக்கைகள் போது சௌகரியமாக இருக்கான்னும் பார்க்கணும். தயவு செய்து மற்றவர்களுக்காக , மற்றவர்களின் அபிப்ப்ராயத்திற்காக என்னைக்கும போடக்கூடாது . அப்படி போட்டா அவங்களின் விமர்சனங்களையும் சந்திச்சு தான் ஆகணும்.
 

naanathithi

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 3, 2012
Messages
4,608
Likes
15,109
Location
jAFFNA
#26
முதல்ல எனக்கு இது என்ன கேள்வின்னே புரியல!

ஒரு மனுஷன்/ மனுஷி ட்ரெஸ் போடறது அவளோட உரிமை! அதை கண்ணியமா போடறதும் ஸ்கின் ஷோ பண்ணறது போல போடறதும் அவளோட விருப்பம்! அந்த மென்டாலிட்டி அவளோட பெர்சனலிடி, குடும்பம், வளர்ப்பு ன்னு நிறைய காரணிகள் சம்பந்தப்பட்டு இருக்கு. அடக்கம்கிறது மனசு சம்பந்தப்பட்டது! போடுற உடையை வச்சு குணத்தை தீர்மானிக்கிறது எப்படி இருக்குன்னா என்னோட மதம் தான் பெஸ்ட் அதை போலோ பண்றவன் தான் நல்லவன் என்றது போல! இதெல்லாம் stereo type பா..ஒரு பொண்ணு இப்படி இருக்கணும்னு நம்ம ஆண்கள் மனசுல ஒரு picture வச்சிருக்காங்க. அது கொஞ்சம் மாறினா உடனே கூப்பாடு போடறது!

வளருங்க மக்களே! 1800களில் இருந்த அதே உலகமா இது? எவ்வளவு மாற்றம்? ஆனால் ஆசிய ஆண்மகனின் வக்கிர புத்தி மட்டும் வளரவே இல்லை!

அந்த போட்டோல இருக்கற பொண்ணுங்க ரெண்டு பேர் சுடிதார் போட்ருந்தாங்க.. அது காத்துல விலகும் பொது எடுக்கப்பட்ட படம் அது. இதே போட்டோ நாளைக்கு சேலை விலகும் போது இதை விட ஆபாசமாக எடுக்கப்பட்டு சேலை விலகவே விலகாம சைட்ல பிளாஸ்டர் ஒப் பாரிஸ் போட்டு ஒட்டிக்கணும்னு சொல்லுவாங்க!!! அப்போ என்ன பதில் சொல்லப்போறோம்?

femi கேட்டது போல எத்தனை குழந்தைகள் பெண்களை , ஏன் வயசானவங்களை பலவந்தம் பண்ணிருக்காங்க? ஒண்ணுமே இல்லைங்க! வக்கிரமான மனசு இருந்தா தூணுக்கு சேலை கட்டியிருந்தாலும் அந்த கண்ணோட்டத்தில் தான் பார்ப்பாங்க!

எங்க நாட்டுல மற்ற இன கிராமத்து மக்கள் பாவாடையும் ஜாக்கட்டும் போல ஒரு உடை தான் போட்ருப்பாங்க. தாவணின்னு போடறது கிடையாது. பாதை போற வழில இருக்கற ஆத்துலயே சர்வ சாதாரணமா குளிப்பாங்க. முதல்ல பார்க்கும் பொது நமக்கு ரொம்ப ஒரு மாதிரி இருக்கும். ஆனா நாங்கள் தான் காஞ்ச மாடு போல பார்க்கறது? அவங்க சட்டை பண்ணிக்க மாட்டாங்க. அவங்களுக்குள்ளையும் பலாத்காரம் நடக்குது. அதுக்கு கொஞ்சமும் குறையாம தமிழ் கலாச்சாரம் கோடி கட்டி பறக்குற இடங்கள்ளையும் நடக்குது.

ஆண்களோட மனசை leggin போட்டு தான் கர்ல்ஸ் கெடுக்கனும்னு இல்லை! அப்படி கேட்டுபோறதுக்கு அவங்க என்ன பாலா? urr!!

மனித உடல் என்றதை காலம் காலமா எங்க சமூகங்கள்ள வெளிப்படையா பேசமுடியாத தப்பான ரகசியமான விஷயமா வச்சிருக்கோம். அதுதான் காஞ்ச மாடு போல எப்போடா ஒருத்தி ஆடை விலகும்னு போட்டோ எடுத்து பந்தி பந்தியா எழுத தூண்டுவது! ஆணும் பெண்ணும் சமம் என்றது பொருளாதார ஆட்சி ரீதியில் தேவையில்லைங்க! முதல்ல உங்க மனசால அது என்னையே போல ஒரு உயிர் என்ற பரந்த மனப்பான்மையை வளர்க்கணும். இயல்பான நட்பு வளரனும். சகோதரி மாதிரி பார்க்கறேன் என்று யாராவது சொல்லிக்கொண்டு வந்தால்!!! போட்டுத்தள்ளிடுவேன். :crazy: முதலில் பெண் என்பவளை மனுசியா பாருங்க!

ஆண்கள்ளையும் நீட்டா டட்டூ போட்டு தோடு போடறவங்க இருக்காங்க. அவங்க கூட மனசு ஒத்துபோரவங்க பழகறாங்க. பெண்களும் அப்படித்தான். அவளுக்கு பிடித்ததை அவள் செய்யட்டும். உங்களுக்கு பிடிக்கவில்லையா leave her alone!!!!!!!!!!!!

பெண்களுக்கும் ஒரு செய்தி இருக்கறது. உங்களுக்கு பிடித்ததை போடும் வேளை அது உங்கள் உடலமைப்புக்கு பொருத்தமாக இருக்கறதா என்று பாருங்கள். ரோமில் ரோமானியனாக இரு என்பார்கள். உலகமே நிர்வாணியாக இருக்கும் போது ஆடையோடு இருப்பவன் முட்டாள். நம்மை சுற்றி இருக்கும் ஆண்கள் இப்படித்தான் என்று தெரிகிறதல்லவா ஆகவே கடைகளில் உடை மாற்றும் அறையில் இருந்து பொது இடங்களில் காற்றடிக்கும் போது கூட அவதானமாயிருங்கள். காரணம் நீங்கள் கூட நாளை ஏதேனும் அட்டைப்படத்தில் அவமானப்படுத்தபடலாம!!!
 

naanathithi

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 3, 2012
Messages
4,608
Likes
15,109
Location
jAFFNA
#27
இன்னொரு விஷயம் லேக்கின்ஸ் உள்ளாடை என்று யாரோ சொல்லிருந்தாங்க. ஒத்துகறேன். அந்த டிசைன் inspire ஆனது அப்படித்தான். ஆனால் 1960 கள்ளயே அந்த டிசைனை கொண்டு வந்துட்டாங்க. நம்ம பொண்ணுங்க விஷயம் புரியாம போட்டுக்கல. எல்லா உடைகள் போலவும் அந்த பாஷனும் மேல் நாடுகளில் அறிமுகமாகி தென்னிந்தியாவுக்கு இம்ப்ரோவைஸ் பண்ணப்பட்டு தான் வந்தது! அப்படிப்பார்த்தா சூப்பர்மான் காஸ்டியூம் கூட ஆபாசத்தின் உச்சம் தான்!

லேக்கின்ஸ் கு சப்போர்ட் பண்ணலைங்க. எந்த ஒரு ஆடையையும் சரி பிழை பார்த்து தீர்மானிக்கும் உரிமை அந்த தனி மனுஷரிடம் தான் இருக்கணும்! அதுதான் விஷயம்!
 

lashmi

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 27, 2012
Messages
12,024
Likes
37,694
Location
karur
#29
அடடா இங்கும் இந்த பிரச்சனை ஓடுதா.....:pray::blink:


மக்களே தயவு செய்து இதை ஒரு டாபிக்கா எடுத்துக்காதீங்க......நமக்கே கேவலமா இருக்கு......யாரோ என்னமோ சொல்லிட்டு போறாங்க......

இது ஒரு பப்ளிசிட்டிக்காக பண்றது.....ஆண்கள் பயன்படுத்து ஷேவிங் விளம்பரத்திற்கு பெண்களை மாடலாக போடுவதை போல இவனுகளுக்கு பெண்களை ஏதாவது ஒரு வகையில் உள்ளிழுத்து தங்களை முன்னிறுத்தி கொள்கிறார்கள்.

எனக்கு மற்ற விபரங்கள் தெரியாது....தந்தி டிவியில் காலையில் இந்த ஷோ ஓடிகொண்டிருந்தது.....யாரோ ஒருவன் எதற்காகவோ பேசிக்கொண்டு இருக்கிறான் என்ற மனநிலையில் தான் நான் வேறு சானலுக்கு மாற்றினேன்.

காரணமே இல்லாமல் சில மாதங்களுக்கு ஒருமுறை பெண்களை பற்றிய ஏதோ ஒரு பிரச்னையை கிளப்பி விட்டு கொண்டிருப்பதே இவர்களின் பொழுது போக்கு. நாம் அதையும் தாண்டி வந்துவிட்டோம்.

புரியாதவர்களுக்கும் தெரியாதவர்களுக்கும் விளக்கம் சொல்லலாம். ஆனால் இவர்கள் தெரிந்தே செய்கிறார்கள்......

இந்த காரியத்தை செய்வதற்கு முன் அவர்களும் ஒருவீட்டின் ஆண்,அண்ணன் , தம்பி, அப்பா , கணவன், மகன் என்பதை உணர்ந்தால் சரி.......
 

sujasenthil

Guru's of Penmai
Joined
Jul 26, 2013
Messages
5,429
Likes
9,502
Location
chennai
#30
@selvipandiyan , sema kaduppula dhan naanum suthikittu iruken aunty... nama ena podanumnu namaku theriyadha enna...

adhuvum illama naama nammala kannadila pakkumpodhu decent a therinjale adhu nalla dress dhan..

@gkarti sonnadhu pola, avan ninaikra madhiri photos eduthirukan, appo avan mansulayum kevalamaana pudhi dhane??

unmaiya sollanumna idhu tight dress nu sollamudiyadhu elasticity irukradhala its more comfortable, jean a vida , keezha ukkarumpodhu kooda comfortable a irukum.

only one thing namaku suit aganum , set aganum avlodhan.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.