லைஃப் - Life Span

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[h=1]லைஃப்[/h]பேக்ட்


*கடந்த 2 லட்சம் ஆண்டுகளை விடவும், கடைசி 50 ஆண்டுகளில்தான், மனிதனின் ஆயுள்காலம் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது.

*பூமியில் உயிர் வாழும் மக்களின் எண்ணிக்கையை விட, நமது சருமத்தில் வாழும் உயிர் வகைகளின் எண்ணிக்கை அதிகம்!

*சராசரி மனிதன் வாழ்நாளில் 2 லட்சத்து 50 ஆயிரம் முறை கொட்டாவி விடுகிறான்.

*சராசரி அமெரிக்கன் வாழ்நாளில் 35 டன் உணவு உட்கொள்ளுகிறார்.

*மனித சருமம் சராசரியாக, வாழ்நாளில் 900 முறை தன்னை மாற்றியமைத்துக் கொள்கிறது.

*வாழ்நாளில் மனிதன் ஏறக்குறைய 23 ஆயிரத்து 658 லிட்டர் உமிழ்நீரை உற்பத்தி செய்கிறான். இது 2 நீச்சல் குளங்களை நிரப்புவதற்குச் சமம்.

*மனிதன் வாழ்நாளில் சராசரியாக கழிப்பறையில் கழிக்கும் காலம் - 3 மாதங்கள்!

*சராசரி மனிதன் வாழ்நாளில் 18 கோடி 37 லட்சம் 55 ஆயிரத்து 600 அடிகள் எடுத்து நடக்கிறான்.

*ஆண்கள் சராசரியாக பெண்களை உற்றுநோக்குவதில் செலவிடும் நேரம்-வாழ்நாளில் ஓராண்டு!

*தனித்திருப்போரை விடவும், நண்பர்களோடு மகிழ்ந்திருப்போருக்கு 3.7 ஆண்டுகள் ஆயுள் அதிகம்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
லைஃப்


* உலக மக்களில் 80 சதவிகிதத்தினர் தினம் 10 டாலருக்கும் குறைவான பணத்தில்தான் வாழ்கிறார்கள்.

* வளர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் சராசரியாக வாழ்நாளில் 5 மாதங்களை போன் பேசியே கழிக்கிறார்கள்.

* எப்போதாவது நிகழும் பெரிய சாதனைகளை விடவும், அடிக்கடி செய்யப்படும் சிறிய செயல்பாடுகளே மனித மனத்துக்கு அதிக திருப்தியை அளிக்கிறது.


* ஒரே இடத்தில் 3 மணி நேரத்துக்கும் அதிகமாக அமர்ந்திருப்பது, மனித ஆயுளில் 2 ஆண்டுகளைக் கழிக்கிறது.

* பொதுவாக ஆண்களை விட பெண்களே அதிக காலம் வாழ்கிறார்கள். அவர்களது நோய் எதிர்ப்பு மண்டலம் மெதுவாகவே மூப்பு அடைவதும் இதற்கு ஒரு காரணம்.

* சராசரியாக ஆண் வாழ்வில் 6 மாத காலம் சவரம் செய்து கொள்வதிலேயே கழிந்து போகிறது.

* ரெகுலராக ஜாகிங் செல்பவர்களுக்கு ஆயுட்காலம் 6 ஆண்டு காலம் வரை அதிகரிக்கிறது.

* அமெரிக்கர்களுக்கு வாழ்நாளில் கேன்சர் ஏற்படும் அபாயத்தின் அளவு 50 சதவிகிதம்.

* 7 மணி நேரங்களுக்குக் குறைவாக உறங்குபவர்களுக்கும் ஆயுட்காலம் குறைகிறது.

* மாதவிடாய் நாட்களை மொத்தமாகக் கணக்கிட்டால் ஒவ்வொரு பெண்ணுக்கும் 4 ஆண்டுகள்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.