வசீகரமான முகத்தைப் பெற சில அழகுக் குறிப்

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#1
வசீகரமான முகத்தைப் பெற சில அழகுக் குறிப்புகள்

வசீகரமான அழகிய முகத்தை பெறவே அனைத்து பெண்களும் விரும்புவர். விருப்பம் இருந்தால் மட்டும் பொதுமா அதற்கான இலகு வழிகளை அறிந்து செய்து வந்தால் கவலைப்படவே தேவையில்லை.
இலகுவான முறையில் வசீகர முகத்தை பெறுவதற்கான ஆலோசனைகள் இங்கே உங்களிற்காக தரப்படுகிறது.

குங்குமப்பூ 10 கிராம், ரவை 30 கிராம், வாதுமை பிசின் 25 கிராம் இவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து பசும்பாலில் கரைத்து சிறிய சிறிய வில்லைகளாக அதாவது 2 கிராம் அளவு எடுத்து தட்டி உலரவைக்க வேண்டும்.

தேவையான போது அந்த வில்லைகளை எடுத்து பால் ஏடு அல்லது தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகம் வசீகரமாகும்.

முகப்பருவால் ஏற்படும் தழும்புகள் மாறகசகசாவை சிறிது நேரம் தயிரில் ஊறவைத்து நன்றாக அரைத்து அதனுடன் சந்தனத்தூள் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ வேண்டும்.

இவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் முகப்பருவால் ஏற்பட்ட தழும்புகள் விரைவில் மறைந்து முகம் பளிச்சிடும்.

பட்டுபோன்ற மென்மையான முகத்தைப் பெற


சிறிதளவு பாசிப் பருப்பை தேங்காய் பாலில் ஊறவைத்து மைபோல் அரைத்து அதனுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து முகத்தில் பூசி உலர்ந்தபின் முகத்தைக் கழுவி வந்தால் உங்கள் முகம் பட்டுபோன்று மென்மையாக தோற்றமளிக்கும்.

சிலருக்கு அம்மை நோயால் ஏற்பட்ட தழும்புகள் முகத்தில் இருந்துகொண்டேயிருக்கும். இவர்கள் தினமும் புதினா இலையின் சாற்றை அந்த தழும்புகளின் மீது தடவி வந்தால் தழும்புகள் விரைவில் மாறும்.

சிலர் புருவம் அடர்த்தியற்று இருக்கும். இவர்கள் புருவத்தின் மீது சிறிது விளக்கெண்ணெயை தடவி வந்தால் புருவம் கருகருவென்று அழகாக காட்சியளிக்கும்.

சிலருக்கு கூந்தல் வளர்ச்சியின்றி காணப்படும். இவர்கள் தேங்காய் எண்ணெயுடன் சிலதுளி விளக்கெண்ணெய் சேர்த்து தினமும் தடவி வந்தால் கூந்தல் நீண்டு வளரும். கருகருவென்றும் தோற்றமளிக்கும்.
 

rubesh

Citizen's of Penmai
Joined
Jan 19, 2012
Messages
532
Likes
903
Location
Chennai
#2
Re: வசீகரமான முகத்தைப் பெற சில அழகுக் குறிப&#3

வசீகரமான முகத்தை பெற அமைதியான பார்வை மற்றும் புன்னகையுடன் இருக்க முயலுங்கள் .........
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.