வனஸ்பதி!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
வனஸ்பதி! சுவைக்குப் பின்னே...


விடுமுறை நாட்களில் மட்டுமல்ல... வாரம் முழுக்கவே வெளியில் சாப்பிடுவது கட்டாயமாகி விட்டது இன்று. பேக்கரி, ஓட்டல், சாட் கடை என எல்லா இடங்களிலும் கிடைக்கிற உணவுகளில் பிரதானமாகச் சேர்க்கப்படுவது வனஸ்பதி என்பதை பலரும் அறிவதில்லை.

‘‘வனஸ்பதியில் உள்ள டிரான்ஸ் கொழுப்பு அமிலங்கள் (Trans fatty acids) உடலி–்ல் கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்து நல்ல கொழுப்பை குறைக்கிறது” என எச்சரிக்கும் உணவியல் நிபுணர் வர்ஷா, வனஸ்பதியின் வில்லங்கங்கள் பற்றி விளக்குகிறார்...

“நீண்ட நாள் கெடாமல், பார்ப்பதற்கு எண்ணெய்ப்பசை அதிகமில்லாதது போல, தயாராகி பல நாட்களானாலும் புதிது போல இருப்பதால் ஓட்டல் உணவுகளில் வனஸ்பதியை அதிகம் உபயோகிக்கிறார்கள்.

அவை எண்ணெய் இல்லாதவை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். கொழுப்பு அமிலங்கள் கொண்ட எண்ணெயை அதிக வெப்பத்தில் ஹைட்ரஜனேற்றம் செய்யும் போது அறை வெப்பத்தில் உறைந்து விடுவதையே வனஸ்பதி என்கிறோம். திரவ வடிவ பிளாஸ்டிக்கை அறை வெப்பத்தில் உறைய வைப்பது போன்றதுதான் வனஸ்பதியை தயாரிக்கும் நிலை.

வீட்டில் நெய் உபயோகித்தாலே அலறும் இளசுகள், வெளியில் வனஸ்பதி அதிகம் உபயோகித்து செய்யும் பொருட்களான பர்கர், பீட்சா, பிஸ்கெட் போன்றவற்றை சாப்பிடுவதை நாகரிகமாக நினைக்கிறார்கள். உண்மையில் நெய்யில் உள்ள கொழுப்பைவிட ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட வனஸ்பதியில் கெட்ட கொழுப்பு அதிகம் உள்ளது.

உடலின் கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்யும் இவை, இதயநோய், நீரிழிவு மற்றும் மார்பகப் புற்று நோய்களுக்கு காரணமாகின்றன. இந்தியாவில் பிரபல பிராண்டுகள் கூட ‘வனஸ்பதி நெய்’ என்ற பெயரில் வனஸ்பதியை விற்கிறார்கள். அதை மக்கள் நெய்க்கு மாற்றாக உபயோகிக்கிறார்கள்.

ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும் நச்சுத்தன்மை நிறைந்த வனஸ்பதியின் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA), சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுப் பொருட்களின் லேபிள்களில் கட்டாயம் Trans fatஐ பட்டியலிட வேண்டும் என்று எச்சரித்துள்ளது.

2008லேயே கலிஃபோர்னியா மாகாண அரசு அனைத்து ரெஸ்டாரன்டுகளிலும் டிரான்ஸ்ஃபேட் உணவுகளுக்குத் தடை விதித்துள்ளது. பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் விற்கப்படும் பொருட்களை வாங்கும் கலாசாரம் பெருகியுள்ளது. நம் மக்களும் இனி, லேபிளில் குறிப்பிட்டுள்ள மூலப்பொருட்கள் பட்டியலில் Trans fat உள்ள பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்று பரிசோதித்து வாங்க வேண்டும்” என அறிவுறுத்துகிறார் வர்ஷா
.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.