வயிறு கொழுப்பை குறைக்கலாம்; தட்டை வயிறாக

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[h=1]வயிறு கொழுப்பை குறைக்கலாம்; தட்டை வயிறாக மாற்றலாம்[/h]இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை பெரும்பாலானோர் வயிறு கொழுப்பால் அவதிப்படுகின்றனர். வயிறு கொழுப்பை குறைக்க எளிய வகைகள் உள்ளது. அதை கடைப்பிடித்தால் பெருத்த வயிறு, தட்டையான வயிறாக மாறும்.

வயிறு கொழுப்பை குறைக்கும் வழிமுறைகள் :

துரித உணவுகளை தவிர்த்தல் : சரியான முறையில் சாப்பிட்டால் 80 சதவீத கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும். இடை உணவுகள், துரித உணவுகள் ஆகிய கடைகளில் வாங்கும் உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்கள், வேக வைத்த உணவு வகைகளை உண்ண வேண்டும்.

தண்ணீர் : தாகம், அயர்ச்சி ஏற்படும் நேரங்களில் தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக பலர் உணவு உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் தேவையற்ற கொழுப்பு படியும். எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக் கொள்ள வேண்டும். குறைந்தது 6 முதல் 8 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.

உடற்பயிற்சி: பல மணி நேரம் உழைப்பு மற்றும் வெகு தூர ஒட்டப்பயிற்சி ஆகிய இரண்டும் தரும் பலன்களை விட சிறிது நேரம் கடினமான உடற்பயிற்சியில் ஈடுபடும்போது கொழுப்பு அதிகமாக குறையும்.

சர்க்கரை வேண்டாம்: நாம் தினமும் உண்ணும் உணவில் சர்க்கரை நிறைய அளவு ஒளிந்திருக்கும். இதை உணர்ந்து, நாம் உண்ணும் உணவில் சர்க்கரையை குறைப்பது நல்லது. இதற்கு பதிலாக தேன், பனங்கற்கண்டு பயன்படுத்தலாம்.

சோடியம் உப்பு தவிர்த்தல் : சோடியம் உப்பை தவிர, பொட்டாசியம் உப்பு, எலுமிச்சை உப்பு மற்றும் கடல் உப்பு ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை வாங்கி பயன்படுத்தலாம்.

வைட்டமின் சி உணவுகள் : வயிறு கொழுப்பு அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணமாக கார்டிசால் உள்ளது. மன அழுத்தத்தால் சுரக்கப்படும் கார்டிசாலை வைட்டமின் கட்டுப்படுத்துகிறது. உடலில் உள்ள கொழுப்புகளை சக்தியாக மாற்றும் கானிடைன் என்ற பொருளை சுரப்பதற்கு உதவும் வைட்டமின் சி மிகவும் அவசியமானதாக உள்ளது. வைட்டமின் சி உணவுகளை அதிகம் உண்ண வேண்டும்.

தூக்கம் : போதுமான அளவு உறங்காமல் இருப்பது உடல் எடையை அதிகரிக்கும். உடல் எடையை மேம்படுத்த தூக்கம் மிகவும் அவசியம். 6 முதல் 8 மணி நேரம் உறக்கம் மேற்கொள்ள வேண்டும்.
 

kiruthividhya

Friends's of Penmai
Joined
Apr 18, 2013
Messages
362
Likes
859
Location
chennai
#2
Re: வயிறு கொழுப்பை குறைக்கலாம்; தட்டை வயிறா&#2

Nice information........
 

bharathi saravanan

Commander's of Penmai
Joined
Nov 10, 2014
Messages
1,612
Likes
3,223
Location
Chennai
#3
Re: வயிறு கொழுப்பை குறைக்கலாம்; தட்டை வயிறா&#2

nice info dear........
 

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#4
Re: வயிறு கொழுப்பை குறைக்கலாம்; தட்டை வயிறா&#2

useful sharing . . . . . . .
 

diyaa

Citizen's of Penmai
Joined
Oct 3, 2014
Messages
621
Likes
2,517
Location
Secunderabad
#5
Re: வயிறு கொழுப்பை குறைக்கலாம்; தட்டை வயிறா&#2

very useful info for all age groups

Thanks for sharing

Diya
 

laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#6
Re: வயிறு கொழுப்பை குறைக்கலாம்; தட்டை வயிறா&#2

Payanulla thagaval friend. Nandri :)
 

supriyasenthil

Friends's of Penmai
Joined
Feb 13, 2012
Messages
172
Likes
753
Location
madurai
#7
Re: வயிறு கொழுப்பை குறைக்கலாம்; தட்டை வயிறா&#2

migauvm arumaiyana thagaval. Nandri:thumbsup
 

rajinrm

Friends's of Penmai
Joined
Jan 8, 2013
Messages
197
Likes
253
Location
chennai
#9
Re: வயிறு கொழுப்பை குறைக்கலாம்; தட்டை வயிறா&#2

hai chan, nice information. from rajinrm
 

suryasindhuja

Friends's of Penmai
Joined
Apr 2, 2014
Messages
206
Likes
201
Location
salem
#10
Re: வயிறு கொழுப்பை குறைக்கலாம்; தட்டை வயிறா&#2

usefull information...:thumbsup
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.